Verified Web

பேரணியில் கலந்து கொண்ட சு க எம் பி களுக்கு நடவடிக்கை எடுக்க சு க அவசரப்படாது

2018-09-12 04:43:42 ARA.Fareel

ஜன­ப­லய பேர­ணியில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் சுதந்­திரக் கட்­சியின் காரி­யா­ல­யத்தை கடந்து சென்­ற­போது காரி­யா­ல­யத்தை நோக்கி ‘ஊ’ குர­லிட்­டுள்­ளார்கள். இது தனது தாயாரை நிந்­தித்­த­தற்கு சம­மாகும். பேர­ணியில் கலந்­து­கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்ற நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு சுதந்­தி­ரக்­கட்சி அவ­ச­ரப்­ப­ட­மாட்­டாது என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் ரோஹண லக் ஷ்மன் பிய­தாஸ தெரி­வித்தார்.

நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­லய கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

“ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் ஏதும் கிடைத்தால் அது தொடர்பில் கட்­சியின் மத்­திய குழுவில் ஆராய்ந்த பின்பே தீர்­மானம் எடுக்­கப்­படும்.

சுதந்­தி­ரக்­கட்­சிக்கு தேசியக் கொள்கை என்று ஒன்று உள்­ளது.

கட்­சியைப் பிள­வு­ப­டுத்த நான் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அத­னாலே நாம் பொறு­மை­யாக இருக்­கிறோம். சாதி, சமயம், மொழி என்­ப­வற்றால் நாம் பிள­வு­பட்­டி­ருந்­த­போதும் இனிமேல் இவ்­வா­றான பிள­வுகள் எமக்குத் தேவை­யில்லை. எமது நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நாம் ஆழ­மான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்ள வேண்டும்.

கட்­சியின் புன­ர­மைப்புப் பணிகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதி­தாகத் தொகுதி அமைப்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள், பறங்­கியர் என்று வேறு­பா­டின்றி அனைத்து மக்­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் வகையில் எமது திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

நாட்டில் எந்தப் பிரச்­சி­னை­யென்­றாலும் அதில் ஜனா­தி­பதி தலை­யிட்டு தீர்த்து வைக்­கிறார். இது சிறந்­ததோர் முன்­னு­தா­ர­ண­மாகும். இன்று நாட்டில் பல்­வேறு ஆர்ப்­பாட்­டங்கள் தினமும் நடை­பெற்று வரு­கின்­றன. ஜன­நா­ய­கத்தை உறு­தி­செய்யும் வகையில் அர­சாங்கம் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு இட­ம­ளித்­துள்­ளது. இது பாராட்­டப்­பட வேண்­டி­ய­தா­கவும் இத­னா­லேயே ஜன­நா­யக உரி­மையைக் கையி­லெ­டுத்து கொழும்பில் மக்கள் பேர­ணியை நடத்­தி­னார்கள்.

வர­லாறு எங்கும் சுதந்திரக்கட்சி பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடையீட்டியுள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 3 வருடத்தில் கட்சியின் தலைவரே கொல்லப்பட்டார். அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சி சுதந்திரக்கட்சியாகும்” என்றார்.உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக
-Vidivelli