Verified Web

சவூதியில் ஹோட்டலில் பெண்ணுடன் உணவருந்திய எகிப்திய இளைஞர் கைது

10 days ago M.I.Abdul Nazar

எகிப்­திய பேச்சு வழக்கில் உரை­யாடிக் கொண்டே புர்கா அணிந்த பெண்­ணுடன்  இளைஞர் ஒருவர் உண­வ­ருந்தும் காட்சி அடங்­கிய காணொலி பகி­ரப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

முப்­பது விநா­டிகள் நீளும் அந்த காணொ­லியில் இரு­வரும் உரை­யாடிக் கொண்டே உண­வ­ருந்­து­கி­றார்கள். இறு­தியில் அந்த பெண், இளை­ஞ­ருக்கு உண­வூட்­டு­கிறார்.

சவூதி நாட்டு சட்­டப்­படி உண­வ­கங்­க­ளுக்கு குடும்­பத்­துடன் வரு­ப­வர்­களும், தனி­யாக வரும் ஆண்­களும் தனித்­தனி இடத்தில் அமர்ந்­துதான் உண­வ­ருந்த வேண்டும். குறிப்­பாக தனி­யாக வரும் பெண்கள் அவர்­களின் ஆண் துணை­வர்கள், அதா­வது தந்தை மற்றும் கணவர், சகோ­தரர் அல்­லது மகன் இல்­லாமல் யாரு­டனும் உரை­யாடக் கூடாது. இந்த சட்­டத்தை மீறி­ய­தா­லேயே குறித்த எகிப்­தியர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

சவூ­தியின் தொழி­லாளர் மற்றும் சமூக மேம்­பாட்டு அமைச்­சு இந்த கைது நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது.

இவர்கள் இரு­வரின் காணொலி­யா­னது, "சவூதி பெண்­ணுடன் உண­வ­ருந்தும் இளைஞர்" என்ற தலைப்பில் பதி­வேற்­றப்­பட்டு 113,000 முறை பகி­ரப்­பட்டு இருக்­கி­றது.

சவூதி பெண்கள் விட­யத்தில் மிகவும் முற்­போக்­கான முடி­வு­களை எடுத்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக பெண்­க­ளுக்கு ஓட்­டுநர் உரிமம் வழங்­கி­யுள்­ளது. இப்­ப­டி­யான சூழலில் உண­வ­ருந்­தி­ய­தற்­காக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது முரண்பாடாக இருக்கிறது என்று பலர் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
-Vidivelli