Verified Web

கால சூழலுக்கு ஏற்ப மாறுபடும் சட்டத் தீர்ப்புக்களும் தனியார் சட்டமும்

Ash Sheikh SHM Faleel

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளான இவர் தேசிய சூறா சபையின் பிரதித் தலைவர்களுள் ஒருவராகவும் இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அறிஞராகவும் விளங்குகிறார்.

2018-09-07 06:21:57 Ash Sheikh SHM Faleel

 இலங்­கையில் உள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டங்­களில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்­பதே ஏற்­கத்­தக்க கருத்­தாகும். அதில் கால சூழ­லுக்கு ஏற்ப சில வகை­யான சட்டத் தீர்ப்­புக்கள் மாற்­றப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.இது விட­ய­மாக எமது ஸலஃபுஸ் ஸாலி­ஹீன்­க­ளான பழைய கால இமாம்கள் எழு­தி­யி­ருக்­கி­றார்கள்.கால சூழ­லுக்கு ஏற்ப சில வகை­யான சட்­டங்கள் மாற்­ற­ம­டையும் என்­பது இஸ்­லா­மிய சட்ட வல்­லு­னர்­க­ளுக்கு மத்­தியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட கருத்­தாகும்.சில உதா­ர­ணங்கள் வரு­மாறு:

சட்­டங்­களை இரண்டு பிரி­வாக வகுக்­கலாம் என்று கூறும் ஹிஜ்ரி 8ஆம் நூற்­றாண்டின் சட்ட வல்­லுனர் இமாம் இப்னுல் கையிம் (691-–751)அதில் ஒரு­வகை, காலங்கள் இடங்கள் என்­ப­வற்­றுக்கு ஏற்ப மாறு­ப­டாத- இமாம்­க­ளது இஜ்­தி­ஹா­துக்கு உட்­ப­டாத சட்­டங்­க­ளாகும். வாஜி­புகள் ஹராம்கள், தெளி­வாக வரை­ய­றுக்­கப்­பட்ட குற்­ற­வியல் தண்­ட­னைகள் என்­பன இவற்­றுக்கு உதா­ர­ணங்­க­ளாகும்.இவற்றில் எந்த மாற்­றங்­களும் இடம்­பெ­ற­மாட்­டாது.அந்த சட்­டங்கள் எந்த நியா­யங்­க­ளுக்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­னவோ அவற்­றுக்கு மாற்­ற­மாக அவற்றில் இஜ்­திஹாத் செய்­யவும் முடி­யாது.

இரண்டாம் வகை சட்­டங்கள் காலங்­க­ளுக்கும் பிர­தே­சங்­க­ளுக்கும் ஏற்ப மனித நலன்கள் மாறு­ப­டு­வ­தற்கு ஏற்ப அவற்­றிலும் மாற்­றங்கள் நிகழும்.மனித நலங்­க­ளுக்கு இணங்க அவற்றை அல்­லாஹ்வும் ரசூலும் பல­வி­த­மாக மாற்­று­வ­துண்டு.”என்­றார்கள்.(இகா­ததுல் லஹ்ஃபான்-1/130)

இமாம் ஷாபிஈ கூட ஈராக்கில் வாழ்ந்த போது வெளி­யிட்ட பல தீர்ப்­பு­களை எகிப்து சென்ற போது மாற்­றிக்­கொண்­டார்கள். அது ‘கவ்ல் ஜதீத்’ புதிய தீர்ப்பு என்­றார்கள்.அது சட்ட வச­னங்­களை புதிய சூழ­லுக்கு ஏற்ப விளங்­கு­வ­தற்கும் விளக்­கு­வ­தற்கும் எடுத்த முயற்­சியின் விளை­வன்றி வேறில்லை. சூழலும் தேவை­களும் காலமும் மாறு­ப­டு­வ­தற்கே பத்­வாக்­களும் மாறு­ப­டலாம். இது மனோ இச்­சையின் அடிப்­ப­டை­யிலோ தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்கள் கார­ண­மா­கவோ நிக­ழக்­கூ­டாது.

ஹிஜ்ரி 8ஆம் நூற்­றாண்டின் சட்ட வல்­லுனர் இமாம் இப்னுல் கையிம்

(691ـ 751ـ) தனது ‘இஃலாமுல் முவக்­கியீன்’ எனும் நூலில் ‘காலங்­களும் இடங்­களும் சூழ்­நி­லை­களும் .எண்­ணங்­களும் வழக்­கா­று­களும் மாறு­ப­டு­வ­தற்கு ஏற்ப பத்­வாக்கள் மாறு­வதும் வித்­தி­யா­சப்­ப­டு­தலும்’ என்ற தலைப்பில் பல உதா­ர­ணங்களைத் தரு­கி­றார்கள்.(3/3)

உரித்­து­டை­யவர் யார் என இனம்­கா­ணப்­படாத ஒரு பொருளை ஒருவர் கண்­டெ­டுத்தால் என்ன செய்ய வேண்டும்? ஸகாதுல் ஃபித்­ராவாக எந்த தானி­யத்தை கொடுக்க வேண்டும் போன்ற விட­யங்­களில் வந்­துள்ள கருத்­து­வே­று­பா­டு­களைத் தரு­கி­றார்கள்.

“ஸகாதுல் பித்ர் என்ற அடிப்­ப­டை­யான அம்­சத்தில் கருத்து வேறு­பா­டுகள் நில­வ­வில்லை. அதன் தானிய விட­யத்தில் நில­வு­கி­றது.பெறு­ம­தியை கொடுக்­க­லாமா என்ற விட­யத்தில் நில­வு­கி­றது”.என்­றார்கள்..

ஹிஜ்ரி 7ஆம் நூற்­றாண்டின் சட்ட வல்­லுனர் இமாம் கராபி (ஹிஜ்ரி 626–- 684 ) அவர்கள் தனது ‘அல்­புரூக்’ என்ற நூலில் “ஊர் வழக்­கா­று­களின் அடிப்­ப­டையில் எடுக்­கப்­படும் சட்­டங்கள் அந்த வழக்­கா­றுகள் மாறு­ப­டு­வ­தற்கு ஏற்ப மாறு­படும்.புதி­தாக உரு­வான வழக்­கா­றுக்கு ஏற்ப புதிய சட்டம் உரு­வாக்­கப்­படும்.ஷரீ­அத்தில் உள்ள வழக்­கா­று­களை அடிப்­ப­டை­யாக கொண்டு எடுக்­கப்­படும் தீர்ப்­புகள் அந்த வழக்­கா­றுகள் மாறி­னாலும் தொட­ரு­மாயின் அது இஜ்­மா­வுக்கு முர­ணாகும். மார்க்கம் பற்­றிய அறி­வீ­ன­மாகும்- வழ­மைகள் மாறினால் சட்டம் மாறும். அவை மாறா­விட்டால் சட்­டமும் மாறாது. நூல்­களில் எழு­தப்­பட்­டுள்­ள­வற்றில் வாழ்நாள் முழுதும் உறைந்து போகா­தீர்கள். உங்­க­ளது ஊர்­வா­சி­யல்­லாத ஒருவர் உங்­க­ளிடம் ஃபத்வா கேட்­டு­வந்தால் உங்­க­ளது ஊர் வழ­மைக்குள் அவரை இழுத்­து­வ­ரா­தீர்கள். அவ­ரது ஊர் வழக்­காறு எது என்று விசா­ரி­யுங்கள். உங்­க­ளது நூலில் உள்­ள­ப­டி­யில்­லாமல் அவ­ரது வழக்­காறின் படி தீர்ப்­புக்­கொ­டுங்கள். அதுதான் தெளி­வான சத்­தி­ய­மாகும். பிற­ரி­ட­மி­ருந்து நகர்த்­தப்­பட்ட நூல்­களில் உள்ள ஃபத்­வாக்­களில் உறைந்து போவது மார்க்­கத்தின் வழி­கே­டாகும். முஸ்­லிம்­க­ளது அறி­ஞர்­க­ளதும் கடந்த கால ஸல­பு­க­ளதும் இலக்­குகள் பற்றி அறி­யா­தி­ருப்­ப­தாகும்”. என்­கிறார். (அல்­புரூக்- 1/321)

ஹனஃபீ மத்­ஹபைப் பொறுத்­த­வ­ரையில் இஜ்­தி­ஹாதை அடிப்­ப­டையாகக் கொண்டு முன்­னை­யோரால் உரு­வாக்­கப்­பட்ட பெரும் தொகை சட்­டங்கள் பின் வந்­த­வர்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டன.வழக்­காறு மாறு­ப­டு­வ­தற்­கேற்ப முன்­னைய தீர்ப்­புக்­க­ளுக்கு மாற்­ற­மான தீர்ப்­புக்­களை அவர்கள் வழங்­கி­னார்கள். காலம் மோச­மாகி விட்­டமை அல்­லது சமூ­கமும் மாற்­ற­ம­டைந்து விட்­டமை அல்­லது வேறு கார­ணங்கள் அதற்குப் பின்­ன­ணி­க­ளாக இருந்­தன.

இமாம் ஸர்­கஸீ அவர்கள் பின்­வ­ரு­மாறு கூறி­னார்கள்: “இமாம் அபூ­ஹ­னீ­பாவைப் பொருத்­த­வ­ரையில் அவர்கள் புதி­தாக இஸ்­லாத்தைத் தழு­விய பார­சீ­கர்­க­ளுக்கு அரபு மொழியை உச்­ச­ரிப்­பதில் சிர­மங்கள் இருந்தை அவ­தா­னித்த பொழுது பார­சீக மொழியில் தொழு­கையில் ஓது­வ­தற்கு சலு­கை­ய­ளித்­தார்கள்.ஆனால் அவர்கள் ‘பித்அத்’ செய்­ப­வர்­க­ளாக இருக்­க­லா­காது என்றும் அந்த ஓதல் பிழை­யான வியாக்­கி­யா­னங்­க­ளுக்கு கார­ண­மாக அமை­ய­லா­காது என்றும் கூறி­னார்கள்.ஆனால் அதன் பின்னர் ஒரு­வ­கையில் அந்த மக்­க­ளது நாவுகள் திருந்­தி­னாலும் மற்­றொரு பகு­தியில் அவர்­க­ளுக்கு மத்­தியில் பித் அத்­துக்­க­ளும்­களும் வழி­பி­றழ்­வு­களும் பர­வ­லாக இடம்­பெற்­றதால் தனது கருத்தை மாற்றிக் கொண்­டார்கள்”

இது இமாம் அபூ­ஹ­னீஃபா அவர்­க­ளது ஃபத்­வாக்கள் கால சூழ்­நி­லைக்­கேற்ப மாறு­பட்­ட­மையைக் காட்­டு­கி­றது.

இமா­முக்கும் அவ­ரது இரு சீடர்­க­ளுக்கும் இடை­யி­லான கருத்து பேதங்கள் பற்றி ஹனஃபீ மத்­ஹ­பினர் கூறும் போதும் ‘அது காலத்­தையும் சூழ­லையும் அடிப்­ப­டையாகக் கொண்ட கருத்து பேதங்­க­ளே­யன்றி ஆதா­ரங்­க­ளையும் சான்­று­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­வை­யல்ல’ என்­றனர்.

 நவீன கால அறிஞர் கலா­நிதி முஸ்­தஃபா ஸர்கா அவர்கள்

“சந்­தர்ப்ப கால சூழ்­நி­லைகள் மாறு­வது இஜ்­தி­ஹா­திய ஷரீ அத் சட்­டங்­களில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பது ஷரீஆ மரபில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அம்­ச­மாகும்.இந்த அடிப்­ப­டையில் தான் “லா யுன்­கரு தகை­யுருல் அஹ்காம் பி தகை­யுரிஸ் ஸமான்” (கால மாற்­றத்­துக்கு ஏற்ப சட்­டங்கள் மாறு­படும் என்­பதை நிரா­க­ரிக்க முடி­யாது). என்ற ஃபிஃஹ் விதி ஸ்தாபிக்­கப்பட்­டது. கியா­ஸையும் மஸ்­ல­ஹா­வையும் அடிப்­ப­டையாகக் கொண்டு இயற்­றப்­பட்ட சட்­டங்கள் தான் காலங்­களும் மனி­தர்­களும் மாறு­ப­டு­வ­தற்­கேற்ப மாற்­றப்­படடும் என்று மத்­ஹ­புை­டய உல­மாக்கள் ஏகோ­பித்துக் கூறி­யுள்­ளார்கள்.மேற்­சொன்ன ‘காஇ­தா’வின் கருத்து இது­வாகும். ஆனால் அடிப்­ப­டை­யான சட்ட வச­னங்­களால் நிறு­வப்­பட்ட சட்­டங்கள் பல உள்­ளன அவற்றை ஸ்தாபிப்­ப­தற்கே அந்த வச­னங்கள் இறக்­கப்­பட்­டுள்­ளன. சீர்­கு­லைந்த சூழல்­களை சீர்­செய்­வ­தற்கு அவை இறக்­கப்­பட்­ட­னவே தவிர அவற்றால் மாற்­றப்­ப­டு­வ­தற்­கல்ல.”என்று கூறு­கிறார்.

(மஜல்­லது அல்­முஸ்­லிமூன் - தகைய்­யுருல் அஹ்காம் பி பகை­யுரிஸ் ஸமான்

8/891-1373)

எனவே, அல்­லாஹ்வும் அவன் தூதரும் இஜ்­தி­ஹா­திய அணுகு முறை­க­ளுக்கு வழங்­கிய அனு­ம­தியில் இஸ்­லா­மிய ஷரீ­ஆவின் உயி­ரோட்­டமும் நீடித்த நிலைத்த தன்­மையும் தங்­கி­யி­ருக்­கி­றது.அரபு தீப­கற்­பத்­துக்கு வெளியே இஸ்லாம் பர­விய போது எழுந்த புதிய பிரச்­சி­னை­க­ளுக்கு குர்­ஆனின் சுன்­னாவின் அடி­யா­கவும் அவற்றின் உயி­ரோட்­டத்தின் வெளிச்­சத்­திலும் இமாம்கள் தீர்­வு­களை வெளி­யிட்டு இஸ்­லாத்தை சகல காலங்­க­ளுக்கும் இடங்­க­ளுக்கும் பொருத்­த­மான ஜீவ சக்­தி­யாக ஸ்தபித்­தார்கள்.அதே இஸ்லாம் இன்றும் அதன் கீர்த்­தி­மிக்க வர­லாற்றைத் தொட­ரு­வ­தற்கு இஜ்­தி­ஹா­திய வாயில் தொடர்ந்தும் திறந்­தி­ருக்க வேண்டும்.ஆனால் அதன் காவ­லா­ளி­க­ளாக தகு­தி­யா­ன­வர்கள் மட்­டுமே இருக்­கவும் வேண்டும்.

எமக்­கென்ற பார்வை

எனவே, நாம் வாழு­வது இரு­பத்­தி­யோராம் நூற்­றாண்டு என்­ப­தையும், இது ஒரு சிறு­பான்மை நாடு என்­ப­தையும் மனிதத் தேவைகள் பல்கிப் பெரு­கி­யி­ருக்­கின்­றன என்­ப­தையும் கவ­னத்தில் எடுக்க வேண்டும்.

குடும்ப வாழ்வு தொடர்­பான அடிப்­ப­டை­களில் எவ்­வித மாற்­றங்­க­ளையும் செய்­யாமல் ஒரு விவ­காரம் தொடர்­பாக ஏற்­க­னவே இருக்கும் வித்­தி­யா­ச­மான கருத்­து­க­ளுக்கு மத்­தியில் நமது நாட்டு சமூக சூழ­லுக்கு மிகப் பொருத்­த­மா­னதை தெரி­வு­செய்ய வேண்டும்.

நமது நாட்டு மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஷாபி மத்ஹப் சார்ந்­த­வர்­க­ளாக இருப்­பதால் அதற்குள் இருந்து பொருத்­த­மான கருத்­துக்­களைத் தெரிவு செய்­யலாம். ஆனால் அந்த மத்­ஹபின் கருத்­து­களை விட வேறு ஒரு இமாமின் அல்­லது பல இமாம்­களின் கருத்­துகள் தான் இக்­கா­லத்­துக்கும் சூழ­லுக்கும் பொருத்தம் எனின் அவற்றைத் தெரி­வு­செய்­யலாம்.அதற்கு ஃபிக்ஹ் பரி­பா­ஷையி ‘இஜ்­திஹாத் இந்­தி­காயீ’ எனப்­படும்.பல கருத்­துக்­க­ளுக்கு மத்­தியில் இருந்து மிகப் பொருத்­த­மான ஒன்றைத் தெரிவு செய்தல் என்­பது அதன் பொரு­ளாகும்.

ஆனால், இந்த தெரிவு நட­வ­டிக்கை மிகக் கஷ்­ட­மா­னது. எல்­லோரும் அதில் ஈடு­ப­டவும் கூடாது. ஏக காலத்தில் இஸ்­லா­மிய ஷரீஆ பற்­றிய மிகத் தெளிந்த ஞானமும் தற்­கால சூழல் பற்­றிய ஞானமும் பெற்­ற­வர்­களே அதில் ஈடு­ப­ட­வேண்டும்.

நடை­முறை அறிவு

ஆனால், பத்வா கொடுப்­பவர் சமூ­கத்­தி­லி­ருந்து ஒதுங்கி கோபு­ர­மொன்றில் இருந்து அதனை வெளி­யிட்டால் அது பொருத்­த­மாக அமை­யாது. முஜ்­த­ஹி­துக்கு இருக்­க­வேண்­டிய நிபந்­த­னை­களில் ‘மஃரி­பதுல் வாகிஃ’ (நடை­முறை பற்­றிய அறிவு) என்­பதும் ஒன்­றாகும். சட்ட வச­னத்தை நடை­மு­றையில் பிர­யோ­கிக்க முன்னர் உட­நி­கழ்­கால சூழல் பற்றி கவ­னத்தில் எடுக்­க­வேண்டும்.முஸ்லிம் விவாக விவாக சட்­டங்­களில் திருத்­தங்கள் கொண்டு வரப்­பட வேண்டும் என்ற கோரிக்கை பல­மாக முன்­வைக்­கப்­ப­டு­வ­தற்கு பல காழி நீதி­மன்­றங்­களில் இடம்­பெற்று வரும் மிகப்­பெ­ரிய ஒழுங்­கீ­னங்­களும் அக்­கி­ர­மங்­களும் அடா­வத்­தங்­களும் பின்­பு­ல­மாக அமைந்­தால் அவற்றை உதா­சீனம் செய்­ய­லா­காது,

யாரோ கூறு­வது போல சமூ­கத்தை பற­வை­க­ளது(Birds' View)பார்­வையில் பார்க்­காமல் புழுக்­க­ளது நிலையில் இருந்து(Warms' View) பார்க்க வேண்டும்.அதா­வது புழு தான் நிலத்தின் ஆழத்­துக்கும் மத்­திய பகு­திக்கும் போகும் உஷ்­ணத்தை உணரும்.குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளுக்குள் இருந்த வண்ணம் சமூ­கத்தின் விவ­கா­ரங்­களை அணு­கு­ப­வர்கள் எமது முன்­னைய இமாம்­க­ளது ஃபிக்ஹ் பாரம்­ப­ரி­யத்­துக்கு உரித்துக் கொண்­டாட முடி­யாது.

களவு எடுத்தால் கைவெட்­ட­வேண்டும் என்ற சட்­டத்தை உமர்(ரழி) அவர்கள் இடை நிறுத்தி வைத்­த­மைக்கு பஞ்சம் நில­வு­வதைக் காரணம் காட்­டி­னார்கள். 'பிக்ஹுன் நஸ்',(சட்­ட­வ­சனம் பற்­ரிய அறிவு) 'பிக்ஹுல் வாகிஃ' (நடை­முறை பற்­றிய அறிவு) இரண்டும் இரு கண்­களை அல்­லது ஒரு பற­வையின் இரு இறக்­கை­களை ஒத்­த­வை­யாகும்.

இலங்கைச் சூழலில் குடும்ப விவகாரங்கள் மட்டுமன்றி அரசியல், சமூகங்களுக்கிடையிலான உறவுகள், உழைப்பு முயற்சிகள் போன்ற இன்னோரன்ன துறைகளில் இந்தப் பார்வை அவசியப்படுகிறது.

ஆனால், இஸ்லாமிய சட்டம் என்பது எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிவிடலாகாது. எமது பிக்ஹ் சட்டத்துக்கு கீர்த்திமிக்க வரலாறு உண்டு. அதில் ஈடுபட்டவர்கள் இறையச்சத்தில் உச்சத்தில் இருந்த,சமூகத்தால் வித்துவான்களாக அறியப்பட்ட ஆன்மீகப் பக்குவமிக்க ஜாம்பவான்களாவர். அவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும், சட்டமரபுகளையும் துறைபோகக் கற்றவர்கள். பிற அபிப்பிராயங்களையும் கணம் பண்ணியவர்கள், நாமறிந்த வகையில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் தேடலுக்குமே முக்கியத்துவம் வழங்கியவர்கள்.எனவே இறுக்கத்துக்கும் பொடுபோக்குக்கும் இடையில் நின்று விவகாரங்கள் அணுகப்படுவது அல்லாஹ்வுக்கும் விருப்பமாக இருப்பதோடு சமூக நலனுக்கும் இசைவானதாக அமையும்.இதன் பொருள் கட்டுக்கோப்புக்களை உடைதெறிந்து விட வேண்டும் என்பதல்ல.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

அல்லாஹ் எமக்கு நேரான வழியைக் காட்டுவானாக!
-Vidivelli