Verified Web

அவுஸ்திரேலிய அரசின் மீதுள்ள கடப்பாடு

2018-09-07 03:54:26 Administrator

இலங்கை முஸ்லிம் இளைஞர் கமர் நிஸாம்தீன் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நகரில் கடந்த வாரம் கைது செய்­யப்­பட்­ட­தாக வெளி­யான செய்தி உள்ளூர் மற்றும் சர்­வ­தேச ஊட­கங்­களில் கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளது. குறித்த இளைஞர் அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்­களுள் ஒரு­வ­ரான பைசர் முஸ்­த­பாவின் உற­வி­ன­ராக இருப்­பதும் ஊட­கங்­களில் கூடுதல் கவனம் செலுத்­தப்­ப­டு­வ­தற்­கான கார­ண­மாக அமைந்­துள்­ளது.

25 வய­தே­யான கமர் நிஸாம்தீன் அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதி கற்கை மாண­வ­ராக இருக்­கின்ற அதே­நேரம், அப் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லேயே ஆய்­வா­ள­ரா­கவும் கட­மை­யாற்றி வரு­கிறார். இலங்­கையில் கல்வி கற்கும் போதே திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்த அவர் சிறந்த குண­வி­யல்­பு­களைக் கொண்­ட­வ­ரா­க­வுமே அடை­யாப்­ப­டுத்­தப்­ப­டு­கிறார்.

கமர் கல்வி கற்றி ஆசியன் சர்­வ­தேச பாட­சா­லையின் ஸ்தாபக அதி­ப­ரான திரு­மதி கூல்பாய் குண­சே­கர, கமர் தொடர்பில் மிகச் சிறந்த நற்­சான்­றி­தழை வழங்கும் கட்­டுரை ஒன்றை ஆங்­கிலப் பத்­தி­ரிகை ஒன்றில் எழு­தி­யுள்ளார். கம­ரிடம் தீவி­ர­வாத சிந்­த­னையின் சாயலைக் கூட காண முடி­யாது எனவும் அவர் திற­மையும் பண்­பாடும் கொண்ட நட்­பு­ற­வுடன் பழகக் கூடிய மாண­வ­ரா­கவே இருந்தார் என்றும் அதில் குறிப்­பிட்­டுள்ளார். கமர் மீதான குற்­றச்­சாட்டை தம்­மாலோ தமது பாட­சா­லையின் ஆசி­ரி­யர்­க­ளாலே கமரின் நண்­பர்­க­ளான மாண­வர்­க­ளாலோ ஒரு­போதும் நம்ப முடி­யாது என்றும் அவர் தனது கட்­டு­ரையில் விலா­வா­ரி­யாக எழு­தி­யுள்ளார்.

அதே­போன்­றுதான் கமரின் நண்­பர்­க­ளான பெரும்­பான்மை இன மாண­வர்கள் கூட அவர் தொடர்பில் மிகவும் சிறந்த கருத்­துக்­க­ளையே சமூக வலைத்­த­ளங்­களில் முன்­வைத்­துள்­ளனர். கமர் இவ்­வா­றான தீவி­ர­வாத சிந்­த­னை­களின் பின்னால் செல்லக் கூடி­யவர் அல்ல என்றும் அதற்­கான எந்­த­வித அறி­கு­றி­க­ளையும் அவ­ரி­டத்தில் தாம் காண­வில்லை என்றும் அவர்கள் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அப்­ப­டி­யானால் அவுஸ்­தி­ரே­லிய பொலிசார் ஏன் இவ்­வா­றான ஓர் இளைஞர் மீது மிகப் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்டை முன்­வைத்­தார்கள் என்­பதே இன்று எல்­லோரும் எழுப்­பு­கின்ற கேள்­வி­யாகும். வெறு­மமே ஒரு குறிப்­பேட்டில் எழு­தப்­பட்­டி­ருந்த சில தக­வல்கள் எந்­த­ளவு தூரம் தீவி­ர­வாத முத்­திரை குத்­து­கின்ற அள­வுக்கு ஆதா­ர­மாக கொள்­ளப்­பட முடியும்? அதி நவீன தொழில்­நுட்­பங்­களைக் கொண்டு அவுஸ்­தி­ரே­லிய பாது­காப்பு மற்றும் நீதித்­துறை கைதுக்­கான கார­ணி­யாக வெறும் குறிப்­பேட்டை முன்­வைப்­பதன் பின்­னணி என்ன? குறித்த குறிப்­பேட்டைக் கூட கம­ருடன் பணி­யாற்றும் சக ஊழியர் ஒரு­வரே பொலி­சா­ருக்கு வழங்­கி­ய­தாக அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்கள் கூறு­கின்­றன. அப்­ப­டி­யானால் பொலி­சா­ருக்கு தகவல் வழங்­கி­யவர் ஏதேனும் உள்­நோக்­கங்­களைக் கொண்டு செயற்­பட்­டி­ருந்­தாரா? எனும் கேள்­வி­களும் இப்­போது பல­ராலும் எழுப்­பப்­ப­டு­கி­றது.

இலங்கை முஸ்­லிம்­களில் சிலர் சர்­வ­தேச பயங்­க­ர­வாத இயக்­கங்­களில் இணைந்­துள்­ள­தா­கவும் அவற்­றுடன் தொடர்­பி­லி­ருப்­ப­தா­கவும் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஏலவே சிரி­யாவில் இலங்­கையர் ஒருவர் உயி­ரி­ழந்­தமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதும் இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை வலுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விட்­டது.

இந் நிலையில் தீவி­ர­வாத வாச­னை­யற்ற ஐரோப்­பிய நாடான அவுஸ்­தி­ரே­லி­யாவில் இலங்கை முஸ்லிம் இளைஞர் ஒருவர் இவ்­வா­றான குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது இலங்கை முஸ்­லிம்கள் மீதான சந்­தே­கப்­பார்­வையை மேலும் வலுப்­ப­டுத்­தவே துணை புரியும். அந்த வகையில் இது தொடர்பில் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி கமர் மீதான குற்­றச்­சாட்டின் உண்­மைத்­தன்­மையை அம்பலப்படுத்த வேண்­டி­யது அவுஸ்­தி­ரே­லிய நீதி மற்றும் பாது­காப்புத் துறையின் கட­மை­யாகும்.

உலகளவில் சிறந்த நன்மதிப்பைக் கொண்டுள்ள அவுஸ்திரேலிய நாடு, தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதை செய்கின்ற அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் தவறான முன்மாதிரிகளைப் பின்பற்றாது என்ற நம்பிக்கை எமக்குண்டு. அந்த நம்பிக்கையிலேயே கமரின் குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் காப்பாற்றும் என நம்புகிறோம்.
-Vidivelli