Verified Web

சமூகத்திற்காக போராடி வென்ற பேராசிரியர்

2018-08-31 04:21:04 Administrator

மாகாண எல்லை நிர்­ணயம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்கை கடந்த வெள்­ளிக்­கி­ழமை 139 எதிர் வாக்­கு­களால் தோற்­க­டிக்­கப்­பட்­டது. இந்த அறிக்­கைக்கு ஆத­ர­வாக ஒரு வாக்­கேனும் அளிக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் குறிப்­பாக இந்த அறிக்­கையை சமர்ப்­பித்த உள்­ளூ­ராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவே அதற்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்தார். இது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி சிறு­பான்மை மக்கள் மீது அக்­கறை கொண்­டுள்­ளது என்­பதைக் காண்­பிப்­ப­தற்கே அன்றி வேறில்லை எனலாம்.

அதே­போன்­றுதான் பொது எதி­ர­ணியும் இந்த அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்­தமை சிறு­பான்மை மக்­களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்­பதும் அடுத்­து­வரும் தேர்­தல்­களின் இக் கட்­சி­களின் ஆத­ரவு தேவை என்­ப­தற்­கா­க­வு­மே­யாகும். மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் இந்த அறிக்­கையை தோற்­க­டிப்­ப­தற்­காக எதிர்த்து வாக்­க­ளித்­தது.

குறித்த அறிக்­கை­யா­னது சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரா­னது என்றால் மறு­புறம் பெரும்­பான்மை மக்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தி­ருக்க வேண்டும். அப்­ப­டி­யி­ருந்தும் பெரும்­பான்மைக் கட்­சிகள் இதனை ஆத­ரிக்­கா­து­விட்­டது ஏன் என்­பது புரி­ய­வில்லை என குழுவின் தலைவர் தவ­லிங்கம் கேட்­டி­ருந்தார். உண்­மையில் இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­படும் எந்­த­வொரு சட்­டமோ அல்­லது சட்டத் திருத்­தங்­களோ எல்லை நிர்­ணயம் போன்ற விட­யங்­களோ ஒரு­போதும் பெரும்­பான்­மை­யி­னரைப் பாதிப்­ப­தாக அமை­யாது. அவ்­வாறு அமை­வ­தற்கு எந்­த­வொரு ஆட்­சி­யா­ளர்­களும் அனு­ம­திக்­கவும் மாட்­டார்கள். ஆனால் சிறு­பான்­மை­யி­னரைப் பாதிக்கும் வகையில் பல சட்­டங்­களைக் கொண்­டு­வ­ரவோ அல்­லது திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரவோ வாய்ப்­புகள் உள்­ளன. அதில் ஒரு முயற்­சி­யா­கவே குறித்த எல்லை நிர்­ணய அறிக்கை இருந்­தது.

எனினும் குறித்த குழுவில் அங்கம் வகித்த பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ், அக் குழுவின் உறுப்­பி­ன­ராக இருந்தும் கூட தனது வரை­ய­றை­களைத் தாண்டி இந்த அறிக்­கையின் உள்­ள­டக்கம் கொண்­டுள்ள பார­தூரம் பற்றி, குறிப்­பாக சிறு­பான்­மை­யி­னரை அதிலும் முஸ்­லிம்­களைப் பாதிக்கும் வகையில் உள்ள புதிய எல்லைப் பிரிப்­புகள் குறித்து முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும் சிவில் சமூ­கத்­தையும் எச்­ச­ரித்தார். இதன் விளை­வா­கவே சிறு­பான்மைக் கட்சித் தலை­மைகள் பெரும்­பான்மைக் கட்­சி­களின் ஆத­ர­வுடன் இதனைத் தோற்­க­டிக்க முன்­னின்­றன என்­பதை இந்த இடத்தில் குறிப்­பிட்டுக் கூற வேண்டும்.

அந்­த­வ­கையில் குறித்த அறிக்கை வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு எந்­த­வொரு ஆத­ரவு வாக்­கை­யேனும் பெறாது தோற்­க­டிக்­கப்­பட்­டமை பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ் அவர்­க­ளது இலட்­சிய வாழ்க்­கைக்கு கிடைத்த உச்­சக்­கட்ட வெற்றி என்றால் மிகை­யா­காது. இலங்கை முஸ்­லிம்­க­ளி­னதும் குறிப்­பாக வடக்கு முஸ்­லிம்­க­ளி­னதும் இருப்பு, நலன்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்ட பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ், இந்த எல்லை நிர்­ணய அறிக்கை விட­யத்தில் ஒரு கல்­விமான் என்­ப­தற்கு அப்பால் ஒரு சமூகப் போரா­ளி­யா­கவே நடந்து கொண்டார். குழு­வி­லுள்ளோர் அவரை பல­வாறு எதிர்த்த போதிலும், அவரை சிலர் இன­வா­தி­யாக சித்­தி­ரிக்க முயற்­சித்த போதிலும் அவை பற்றி அஞ்­சவோ அலட்டிக் கொள்­ளவோ இல்லை. இதுவே பேரா­சி­ரியர் ஹஸ்­புல்­லாவின் தனித்­து­வ­மாகும்.

எனினும் தனது விருப்­பப்­படி குறித்த அறிக்கை தோற்­க­டிக்­கப்­பட்ட மகிழ்ச்­சி­யான செய்­தி­யோடு உறங்கச் சென்ற அவர் மீண்டும் எழுந்­தி­ருக்­க­வில்லை. அல்­லாஹ்வின் நாட்­டப்­படி இந்த சமூ­கத்­திற்­காக தான் செய்த மிகப் பெரிய பங்­க­ளிப்பு ஒன்­று­பற்­றிய நிம்­மதிப் பெரு­மூச்­சு­டனே அவ­ரது இறுதி மூச்சும் நின்­றி­ருக்­கி­றது.

அந்­த­வ­கையில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பதியப்பட வேண்டியவர். காலமெல்லாம் போற்றப்பட வேண்டியவர். அவரைக் கொண்டாட வேண்டியதும் எதிர்கால சந்ததிக்கு முன்மாதிரிக்க மனிதராக எடுத்துக்காட்டப்பட வேண்டியதும் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், உலமாக்களின் கடப்பாடாகும். அதேபோன்றுதான் குறித்த அறிக்கையை முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்காதவாறு மீளாய்வுக்குட்படுத்துவதும் சம்பந்தப்பட்டவர்கள் முன்னுள்ள பணியாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸை அருள வேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
-Vidivelli