Verified Web

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்

2018-08-29 01:37:24 Administrator

முஹம்மத் றஸீன்,

நாவ­லப்­பிட்டி.

பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் தலைவர் இம்­ரான்கான் 2018 ஆகஸ்ட் 18ஆம் திகதி நாட்டின் 22ஆவது பிர­த­ம­ராகப் பதவி ஏற்றார்.

1947 ஆகஸ்ட் 14 ஆம் திகதி உலக வரை­ப­டத்தில் ஒரு சுயா­தீன நாடாக பாகிஸ்தான் உத­ய­மா­னது. அப்­போ­தி­ருந்து பாகிஸ்­தானின் அர­சி­ய­லா­னது, இரா­ணு­வச்­சட்டம் உட்­பட பல்­வேறு ஏற்ற இறக்­கங்­களைச் சந்­தித்­துள்­ளது.

இந்­நி­லையில் பாகிஸ்­தானின் ஒவ்­வொரு முன்­னைய பிர­த­மர்­களை நோக்­கும்­போது பாகிஸ்­தா­னிய அர­சி­யலின் பல­வீன நிலை புலப்­படும்.

லியாக்கத் அலி கான்: பாகிஸ்­தானின் முதல் பிர­த­ம­ராக அதன் சிற்பி முஹம்மத் அலி ஜின்­னாவே விளங்­கு­வா­ரென எதிர்­பார்த்த அனை­வ­ரையும் அதி­ச­யிக்­க­வைக்கும் வகையில் அவர் பாகிஸ்­தானின் முதல் ஆளுநர் நாய­க­மாக நிய­மிக்­கப்­பட்டார். அவரே லியாக்கத் அலி­கானை நாட்டின் முதல் பிர­த­ம­ராக நிய­மித்தார். ஆனால் ஒரு குறு­கிய காலமே பிர­த­ம­ராகப் பதவி வகித்த லியாக்கத் அலிகான் துர­திஷ்­ட­வ­ச­மாக, 1951 அக்­டோபர் 16ஆம் திகதி  படு­கொலை செய்­யப்­பட்டார்.

குவாஜா நஸி­முத்தீன் அக்­டோபர் 17, 1951 அன்று இரண்­டா­வது பிர­த­ம­ராக நிய­ம­ன­மானார். ஆனால் அன்­றைய ஆளுநர் நாயகம் மாலிக் குலாம் முகம்மத் ஏப்ரல் 17, 1953 அன்று அவ­ரது அர­சாங்­கத்தை கலைத்­த­மையால் அவர் பத­வி­து­றந்தார்.

முகம்மத் அலி போக்ரா 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி நாட்டின் மூன்­றா­வது பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார். இரா­ஜ­தந்­தி­ரி­யான இவர் பாகிஸ்­தா­னிய அர­சி­யலில் ஒரு அறி­யப்­ப­டாத ஆளுமை.  இவர் செயற்­றி­றன்­மிக்க  அமைச்­சொன்றை  நிறு­வினார், ஆனால் 1954 சட்­ட­மன்ற தேர்­தல்­க­ளின்பின் அவ­ரது நிர்­வாகம் ஆகஸ்ட் 12, 1955இல் ஆளு­நரால் கலைக்­கப்­பட்­டது.

சௌத்ரி முகம்மத் அலி 1955, ஆகஸ்ட் 12ஆம் திகதி பாகிஸ்­தானின் நான்­கா­வது பிர­த­ம­ரானார். முஸ்லிம் லீக், அவாமி லீக் மற்றும் குடி­ய­ரசுக் கட்சி ஆகி­ய­வற்றின் முத­லா­வது கூட்­ட­ர­சாங்­கத்தின் மூலம் நிய­மிக்­கப்­பட்ட அவர், ஒரு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றியைத் தொடர்ந்து, செப்­டம்பர் 12, 1956இல் தனது சொந்த கட்­சி­யி­னா­லேயே தூக்­கி­யெ­றி­யப்­பட்டார்.

ஹுசைன் ஷஹீத் சுஹ்­ர­வர்தி செப்­டம்பர் 12, 1956 இல் நாட்டின் ஐந்­தா­வது பிர­த­ம­ராக நிய­ம­ன­மானார். சட்­டத்­து­றையில் அவ­ரது திறமை கார­ண­மாக பிர­ப­ல­மான சுஹ்ர­வர்தி, அவ­ரு­டைய கட்சி அவ­ரு­டைய கட்­டுப்­பாட்டை மீறி செயற்­பட்­ட­தாலும் தனது நிர்­வா­கத்தில் கூட்­டணி பங்­கா­ளி­களின் ஆத­ரவை இழந்­ததன் கார­ண­மா­கவும் அக்­டோபர் 17, 1957 அன்று பதவி வில­கினார்.

இப்­ராஹிம் இஸ்­மாயில் சண்ட்­ரிகார் 1957, அக்­டோபர் 17 இல் பாகிஸ்­தானின் ஆறா­வது பிர­த­ம­ராக பத­விப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார். 1957 டிசம்பர் 16இல் குடி­ய­ரசுக் கட்சி மற்றும் அவாமி லீக் இணைந்து கொண்­டு­வந்த  நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் வெற்­றி­ய­டைந்­ததால் 55 நாட்­களில் அவர் பதவி துறந்தார்.

நூருல் அமீன் 1971 பொதுத் தேர்­த­லை­ய­டுத்து டிசம்பர் 7, 1971 அன்று நாட்டின் எட்­டா­வது பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்டார். அவர் டிசம்பர் 20, 1971 வரை 13 நாட்கள் மட்­டுமே பிர­த­ம­ராக இருந்தார். அதே­நேரம் 1970 முதல் 1972 வரை இவரே பாகிஸ்­தானின் முத­லா­வதும் ஒரே துணை ஜனா­தி­ப­தி­யா­கவும் விளங்­கினார்.

ஸுல்­பிகார் அலி பூட்டோ, 1973 ஆகஸ்ட் 14 ஆம் திகதி நாட்டின் ஒன்­ப­தா­வது பிர­த­ம­ரானார். பாகிஸ்தான் மக்கள் கட்­சியின் ஸ்தாப­க­ரான இவர் 1977 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி அவரால் நிய­மிக்­கப்­பட்ட இரா­ணுவத் தள­ப­தி­யான ஜெனரல் ஸியாஉல் ஹக், என்­ப­வரால் 1977இல் இரா­ணுவச் சட்­டத்தின் மூலம் பதவி நீக்கம் செய்­யப்­பட்டார்.

முஹம்­மது கான் ஜுனேஜோ, 1985 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி, பாகிஸ்தான் சார்பில் கட்சி அடிப்­ப­டை­யி­லில்­லாத தேர்­த­லொன்றில் சுயேச்சை வேட்­பா­ள­ராக வென்று 10ஆவது பிர­த­ம­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். ஆனால் பத­விக்கு வரு­முன்பும் வந்த பின்பும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்­குக்­கா­கவே அவர் பணி­யாற்­றினார். மே 29, 1988 அர­சி­ய­ல­மைப்பின் எட்­டா­வது திருத்­தத்­தின்­படி ஜனா­தி­பதி ஸியாஉல் ஹக் அவரைப் பதவி நீக்கம் செய்தார்.

பெனாசீர் பூட்டோ, டிசம்பர் 2, 1988இல் பாகிஸ்­தானின் 11வதும் முதல் பெண் பிர­த­ம­ரா­கவும் பத­வி­யேற்றார். ஆகஸ்ட் 6, 1990 இல் ஜனா­தி­பதி குலாம் இஷாக்கான், அர­சாங்­கத்தின் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கை பரா­ம­ரிக்க இய­லாமை போன்­ற­வற்றைக் கார­ணங்­காட்டி அர­சி­ய­ல­மைப்பின் எட்­டா­வது திருத்­தத்தின் கீழ் பூட்­டோவின் அர­சாங்­கத்தைப் பத­வி­நீக்கம் செய்தார்.

நவாஸ் ஷெரீப், அவ­ரது கட்­சி­யான இஸ்­லாமி ஜம்­ஹுரி இத்­திஹாத் மூலம் நவம்பர் 1, 1990இல் பாகிஸ்­தானின் 12 வது பிர­த­ம­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். ஜனா­தி­பதி குலாம் இஷாக் கான் ஏப்ரல் 1993இல் அவ­ரது அர­சாங்­கத்தைக் கலைத்தார், அது பின்னர் பாகிஸ்தான் உச்ச நீதி­மன்­றத்தால் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட்­டது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஜனா­தி­ப­தியும் அகற்­றப்­ப­ட­வேண்டும் என்ற ஓர் உடன்­பாட்­டு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் முடி­வாக ஷெரீப் ராஜி­னாமா செய்தார்.

பெனாசீர் பூட்டோ, அக்­டோபர் 19, 1993இல் இரண்­டா­வது முறை­யாகப் பிர­த­ம­ரானார். நவம்பர் 5, 1996இல் ஜனா­தி­பதி பாரூக் லெகா­ரியால் அவ­ரது அர­சாங்கம் பதவி நீக்கம் செய்­யப்­படும் வரை பாகிஸ்­தானின் 13 வது பிர­த­ம­ராக அவர் பணி­யாற்­றினார்.

நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (N) தலை­வ­ரான இவர் மீண்டும் பெப்­ர­வரி 17, 1997 இல் பாகிஸ்­தானின் 14வது பிர­த­ம­ரானார். அக்­டோபர் 12, 1999ஆம் திகதி ஜெனரல் பர்வீஸ் முஷர்ரப் நாடு முழு­வ­தற்­கு­மான இரா­ணுவ சட்­டத்தைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி நவாஸ் ஷெரீபைப் பதவி நீக்கம் செய்தார்.

மிர் ஸப­ருல்லா கான் ஜமாலி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஞ) மூலம் இவர் நவம்பர் 23, 2002இல் பாகிஸ்­தானின் 15வது பிர­த­ம­ரா­கத் தெரி­வானார். அவர் பர்வேஸ் முஷர்­ரபின் வெளி­யு­றவு மற்றும் பொரு­ளா­தார கொள்­கை­களைத் தொடர்ந்தார், ஆனால் தொடர்ந்து பத­வி­வ­கிக்க முடி­யாத நிலையில் ஜூன் 26, 2004 அன்று பத­வி­யி­லி­ருந்து வில­கினார்.

சவுத்ரி ஸுஜாத் ஹுசைன், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஞ) மூலம் ஜூன் 30, 2004 அன்று பாகிஸ்­தானின் 16 வது பிர­த­ம­ரானார்.  ஷவுக்கத் அஸீஸ் அஸீஸ் நிரந்­த­ர­மாகப் பிர­தமர் பத­வியில் அமரும் வரை 50 நாட்கள் அப்­ப­த­வியை வகித்தார். ஜூன் 30, 2004 அன்று அவர் பத­வி­யி­லி­ருந்து ராஜி­னாமா செய்தார்.

ஷவுக்கத் அஸீஸ் அஸீஸ், பாகிஸ்­தானின் 17 ஆவது பிர­த­ம­ராக ஆகஸ்ட் 28, 2004இல் பொறுப்­பேற்றார். அவர் நவம்பர் 15, 2007 அன்று பாரா­ளு­மன்ற காலத் தவணை முடிவில் பத­வி­யி­லி­ருந்து  வில­கினார். பாரா­ளு­மன்ற காலத் தவணை முடிவில் பதவி துறந்த முதல் பாகிஸ்­தானின் பிர­த­ம­ராக இவர் விளங்­கு­கிறார்.

யூசுஃப் ராஸா கில்­லானி, பாகிஸ்தான் மக்கள் கட்­சியின் மூத்த தலை­வ­ரான இவர் மார்ச் 25, 2008 அன்று பாகிஸ்­தானின் 18 வது பிர­த­ம­ரானார். அவர் ஜூன் 19, 2012 அன்று உச்ச நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தற்­காக, நாடா­ளு­மன்ற ஆச­னத்­துக்குத் தகு­தி­யற்­ற­வ­ரானார்.

ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ஜூலை 22, 2012 அன்று பாகிஸ்­தானின் 19வது பிர­த­ம­ராகப் பத­வி­யேற்றார். 2013 மார்ச் 24 வரை நாடா­ளு­மன்றம் அதன் ஐந்து ஆண்டு காலத் தவணை முடி­வ­டையும் வரை அவர் சேவை செய்தார்.

நவாஸ் ஷெரீப் மூன்றாம் முறை­யாக ஜூன் 5, 2013இல் பாகிஸ்தான் பிர­தமர் பத­வியில் அமர்ந்தார். ஜூலை 28, 2017 ஆம் ஆண்­டு­வரை 20 ஆவது பிர­த­ம­ராகப் பணி­யாற்­றிய அவர், ஊழல் வழக்கில் உச்ச நீதி­மன்­றத்தால் குற்­ற­வா­ளியாகக் காணப்­பட்­டதால்  பத­வி­யி­ழந்தார்.

ஷஹீத் ஹகான் அப்­பாஸி, பாகிஸ்­தானின் 21ஆவது பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-(N) இன் மற்­றொரு மூத்த தலை­வ­ராவார். நவாஸ் ஷெரீப் அகற்­றப்­பட்ட பிறகு இவர் பிர­த­ம­ராகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார். பாரா­ளு­மன்றம் அதன் ஐந்து ஆண்டு காலத் தவ­ணையை நிறைவு செய்த 31 மே 2018 வரை இவர் பதவி வகித்தார்.

மேலே உள்ள பாகிஸ்­தானின் 21 முன்னாள் பிர­த­மர்­களில் எவ­ருமே அர­சியல் யாப்பில் குறிக்­கப்­பட்ட ஐந்து வருட காலத் தவணையைப் பூர்த்திசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஓர் உலக சாதனையாகவும் இருக்கலாம்.

இந்தப் பின்னணியிலேயே இம்ரான்கான் பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். சிறந்த முற்போக்குத் திட்டங்களுடன் பதவிக்கு வந்துள்ள இவர் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்து ஒரு நவீன பாகிஸ்தானை உருவாக்குவாரா? பல்வேறு கலவரங்களும் மதப் பிரிவினைவாதங்களும் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும் நிறைந்த பாகிஸ்தானை அமைதிப்படுத்துவாரா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியவை. குறைந்தபட்சம் இவராவது முழுப் பாராளுமன்றத் தவணையைப் பூர்த்திசெய்த முதல் பிரதமராக வந்தாலே அதுவும் ஒரு சாதனைதான்! 
-Vidivelli