Verified Web

அழகானதை அழகாகச் செய்வதையே அழகானவன் அழகென்றான்

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-08-24 00:23:17 T.M.Mufaris Rashadi

அல்­லாஹ்­வையும் அவ­னது தூத­ரையும் ஈமான் கொண்டு விசு­வா­சிக்க வேண்­டிய அனைத்து அம்­சங்­க­ளையும் விசு­வா­சிக்­கின்ற ஓர் இறை விசு­வாசி அந்த விசு­வா­சத்தை செயலில் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக இறை­வனால் வழங்­கப்­பட்­டதே இஸ்­லாத்­தி­லுள்ள நல்­ல­மல்­க­ளாகும். அல்­லாஹ்­வுக்­காக அவ­னது தூதர் காட்­டிய வழி­மு­றையில் செய்­கின்ற நல்­ல­மல்­களை வைத்தே அல்லாஹ் மனி­த­னு­டைய இம்மை, மறு­மையின் உண்­மை­யான வெற்றி தோல்­வியை தீர்­மா­னிக்­கின்றான்.

அல்லாஹ் தனது திரு­ம­றையில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்றான்;

"திட­மாக, நாம் மனி­தனை மிகவும் அழ­கிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவன் செயல்­களின் கார­ண­மாக) அவனைத் தாழ்ந்­த­வர்­களில், மிக்க தாழ்ந்­த­வ­னாக்­கினோம். எவர்கள் ஈமான் கொண்டு ஸாலி­ஹான (நல்ல) அமல்கள் செய்­கி­றார்­களோ அவர்­களைத் தவிர - (நல்­ல­வர்­க­ளான) அவர்­க­ளுக்கு என்றும் முடி­வில்­லாத நற்­கூ­லி­யுண்டு.” (அல்­குர்ஆன்: 95:4-6)

"எவர் தீமை செய்­கி­றாரோ, அவர் அதைப் போன்­ற­தையே கூலி­யாகக் கொடுக்­கப்­ப­டுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்­லது பெண்ணோ முஃமி­னான நிலையில் ஸாலி­ஹான (நல்ல) அமல்கள் செய்­கி­றாரோ அவர்கள் சுவர்க்­கத்தில் பிர­வே­சிப்­பார்கள், அதில் கணக்­கில்­லாது அவர்கள் உண­வ­ளிக்­கப்­ப­டு­வார்கள். (அல்­குர்ஆன்: 40:40)

"நிச்­ச­ய­மாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலி­ஹான (நல்ல) அமல்கள் செய்­கி­றார்­களோ, அவர்கள் தாம் படைப்­புக்­களில் மிக மேலா­ன­வர்­க­ளாவர்.” (அல்­குர்ஆன்: 98:7)

முடி­வில்­லாத நற்­கூ­லி­யுண்டு, அவர்கள் சுவர்க்­கத்தில் பிர­வே­சிப்­பார்கள், அதில் கணக்­கில்­லாது அவர்கள் உண­வ­ளிக்­கப்­ப­டு­வார்கள், படைப்­புக்­களில் மிக மேலா­ன­வர்கள் என்ற சிறப்­புக்­க­ளெல்லாம் இறை­வி­சு­வா­சி­களின் சிறந்த அமல்­க­ளுக்கே அல்லாஹ் வாக்­கு­றுதி வழங்­கு­கின்றான்.

"நிச்­ச­ய­மாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலி­ஹான) நற் கரு­மங்­க­ளையும் செய்­கி­றார்­களோ, அத்­த­கைய அழ­கிய செயல் செய்­வோரின் (நற்) கூலியை நாம் நிச்­ச­ய­மாக வீணாக்க மாட்டோம்.” (அல்­குர்ஆன்: 18:30)

''(ஆனால்) நம்­பிக்கை கொண்டு நற்­க­ரு­மங்கள் செய்­வோ­ருக்கு நன்­மா­ரா­யங்கள் கூறு­வீ­ராக! சதா ஓடிக்­கொண்­டி­ருக்கும் ஆறு­களைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்­க­ளுக்­காக உண்டு, அவர்­க­ளுக்கு உண்ண அங்­கி­ருந்து ஏதா­வது கனி கொடுக்­கப்­ப­டும்­போ­தெல்லாம் 'இதுவே முன்­னரும் நமக்கு (உலகில்) கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது' என்று கூறு­வார்கள். ஆனால் (தோற்­றத்தில்) இது போன்­ற­துதான் (அவர்­க­ளுக்கு உல­கத்திற்) கொடுக்­கப்­பட்­டி­ருந்­தன, இன்னும் அவர்­க­ளுக்கு அங்கு தூய துணை­வி­யரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்­த­ர­மாக வாழ்­வார்கள்.'' (அல்­குர்ஆன் 2:25)

"அல்­லாஹ்வை நோக்கி அழைத்து நல்­லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறி­ய­வனை விட அழ­கிய சொல்லைக் கூறு­பவன் யார்?” அல்­குர்ஆன்: (41:33)

நம்­பிக்கை கொண்டு நல்­லறம் செய்­வோ­ருக்கு அழ­கிய கூலி உண்டு. நமது கட்­ட­ளை­களில் எளி­தா­னதை அவ­ருக்குக் கூறுவோம் அல்­குர்ஆன் (18:88)

மேலுள்ள இறை வச­னங்கள் யாவுமே ஈமான் கொண்ட மக்கள் நல்­ல­மல்கள் செய்­வதன் மூலமே அவர்­களால் இவ்­வு­ல­கிலும் மறு­மை­யிலும் வெற்­றி­பெற முடியும் என்­பதை தெளி­வாக எமக்கு கற்­றுத்­த­ரு­கின்­றன.

நபித்­தோ­ழர்­களில் (ஏழை­க­ளான) சிலர் நபி (ஸல்) அவர்­க­ளிடம் ''அல்­லாஹ்வின் தூதரே! வச­தி­ப­டைத்தோர் நன்­மை­களை (தட்டி)க் கொண்டு போய்­வி­டு­கின்­றனர். நாங்கள் தொழு­வதைப் போன்றே அவர்­களும் தொழு­கின்­றனர், நாங்கள் நோன்பு நோற்­பதைப் போன்றே அவர்­களும் நோன்பு நோற்­கின்­றனர்; (ஆனால், அவர்கள்) தங்­க­ளது அதி­கப்­ப­டி­யான செல்­வங்­களைத் தான­தர்மம் செய்­கின்­றனர். (அவ்­வாறு தான­தர்­மங்கள் செய்ய எங்­க­ளிடம் வசதி இல்­லையே!)'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீங்­களும் தர்மம் செய்­வ­தற்­கான (முகாந்­தரத்)தை அல்லாஹ் உங்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­த­வில்­லையா? இறை­வனைத் துதிக்கும் ஒவ்­வொரு துதிச் சொல்லும் (சுப்­ஹா­னல்லாஹ்) தர்­ம­மாகும்; இறை­வனைப் பெரு­மைப்­ப­டுத்தும் ஒவ்­வொரு சொல்லும் (அல்­லாஹு அக்பர்) தர்­ம­மாகும்; ஒவ்­வொரு புகழ்­மா­லையும் (அல்­ஹம்து லில்லாஹ்) தர்­ம­மாகும்; ஒவ்­வொரு 'ஓரிறை உறு­தி­மொழி'யும் (லா இலாஹ இல்­லல்லாஹ்) தர்­ம­மாகும், நல்­லதை ஏவு­தலும் தர்­மமே; தீமையைத் தடுத்­தலும் தர்­மமே; உங்­களில் ஒருவர் தமது பாலு­றுப்பி(னைப் பயன்­ப­டுத்­து­கின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு'' என்று கூறி­னார்கள். மக்கள், ''அல்­லாஹ்வின் தூதரே! எங்­களில் ஒருவர் (தம் துணை­வி­யிடம்) இச்­சை­களைத் தீர்த்­துக்­கொள்­வ­தற்கும் நன்மை கிடைக்­குமா?'' என்று கேட்­டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''(நீங்­களே) சொல்­லுங்கள்: தடை செய்­யப்­பட்ட வழியில் அவர் தமது இச்­சையைத் தீர்த்­துக்­கொண்டால் அவ­ருக்குக் குற்றம் உண்­டல்­லவா! அவ்­வாறே அனு­மதிக் கப்­பட்ட வழியில் அவர் தமது இச்­சையை நிறை­வேற்­றிக்­கொள்­ளும்­போது அதற்­காக அவ­ருக்கு நன்மை கிடைக்­கவே செய்யும்'' என்று விடை­ய­ளித்­தார்கள்.

அறி­விப்­பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்

நூல் : முஸ்லிம் 1832

நபி­க­ளா­ரினால் பயிற்­று­விக்­கப்­பட்ட உன்­னத நபித்­தோ­ழர்கள் அமல்­களில் ஆர்­வ­முள்­ள­வர்­க­ளா­கவும் அமல்­களை அழ­கா­கவும் அதி­க­மா­கவும் செய்­வதில் போட்டி போடக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் இருந்­தார்கள், அதன் விளை­வா­கவே அமல்­களில் இத்­த­கைய ஆர்­வமும் அது­பற்­றிய கேள்­வி­களும் அவர்­க­ளுக்குள் எப்­பொ­ழு­துமே எழுந்து கொண்­டி­ருந்­தன.

நான் நபி (ஸல்) அவர்­க­ளிடம், ''எந்த நற்­செயல் சிறந்­தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்­லாஹ்வின் மீது ஈமான் (நம்­பிக்கை) கொள்­வதும் அவ­னது பாதையில் ஜிஹாத் செய்­வதும் (போராடு வதும்) ஆகும்'' என்று பதி­ல­ளித்­தார்கள். நான், ''எந்த அடிமை(யை விடு­தலை செய்­வது) சிறந்­தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அவர்­களால் அதிக விலை கொண்ட அடி­மையும் தன் எஜ­மா­னர்­க­ளிடம் பெறு­மதி மிக்க அடி­மையும் (தான் சிறந்­த­வர்கள்)'' என்று பதி­ல­ளித்­தார்கள். நான், ''என்னால் அது (அடி­மையை விடு­தலை செய்­வது) இய­ல­வில்­லை­யென்றால்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''பல­வீ­ன­ருக்கு உதவி செய், அல்­லது உழைத்துச் சம்­பா­திக்க இய­லா­த­வ­னுக்கு நன்மை செய்'' என்று கூறி­னார்கள். நான், ''இதுவும் என்னால் இய­ல­வில்லை யென்றால் ?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''மக்­க­ளுக்குத் தீங்கு செய்­யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறி­னார்கள்.

அறி­விப்­பாளர் : அபூதர் (ரலி) அவர்கள் நூல் : புகாரி 2518

மேலுள்ள இந்த அறி­விப்பு நல்­ல­மல்கள் செய்­வதில் நபித்­தோ­ழர்­க­ளுக்கு உள்ள ஆர்­வத்­தையும் தமக்கு முடி­யு­மான அமல்­களை தம்மால் முடி­யு­மான வரை அந்த அமல்­களில் ஈடு­பட வேண்டும் என்ற அவர்­க­ளது தெளிந்த மனப்­பாங்­கையும் எமக்கு எடுத்துக் காட்­டு­கி­றது.

நபி (ஸல்) அவர்கள் தம் இறை­வனைப் பற்றி அறி­விக்­கையில் (பின்­வ­ரு­மாறு) கூறி­னார்கள்:

அல்லாஹ் நன்­மை­க­ளையும் தீமை­க­ளையும் எழு­தி­விட்டான், பிறகு அதனை விவ­ரித்தான். அதா­வது ஒருவர் ஒரு நன்மை செய்­ய­வேண்டும் என (மனதில்) எண்ணி விட்­டாலே அதைச் செயல்­ப­டுத்­தா­விட்­டாலும் அவ­ருக்­காகத் தன்­னிடம் அதை ஒரு முழு நன்­மை­யாக அல்லாஹ் பதிவு செய்­கிறான். அதை அவர் எண்­ணி­ய­துடன் செயல்­ப­டுத்­தி­யும்­விட்டால், அந்த ஒரு நன்­மையைத் தன்­னிடம் பத்து நன்­மை­க­ளாக, எழு­நூறு மடங்­காக, இன்னும் அதி­க­மாக அல்லாஹ் பதிவு செய்­கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்­யாமல் கை விட்டால், அதற்­காக அவ­ருக்குத் தன்­னிடம் ஒரு முழு நன்­மையை அல்லாஹ் எழு­து­கிறான். எண்­ணி­ய­படி அந்தத் தீமையை அவர் செய்து முடித்­து­விட்­டாலோ, அதற்­காக ஒரே­யொரு குற்­றத்­தையே அல்லாஹ் எழு­து­கிறான்.

அறி­விப்­பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 6491,7501.

நன்­மை­களை செய்­வதில் நமக்­குள்ள ஆர்வம் அந்த நன்­மை­களை அழ­கா­கவும் உளத்­தூய்­மை­யோடும் செய்­வ­திலும் இருக்க வேண்டும், அமல்கள் செய்­கின்­ற­வர்­க­ளிடம் காணப்­படும் உளத்­தூய்­மைக்கு ஏற்ப நன்­மை­களில் வித்­தி­யாசம் உண்டு என்ற செய்­தியை நாம் மேலுள்ள நபி­மொ­ழி­யி­லி­ருந்து புரிந்து கொள்ள முடி­கி­றது.

அமல்­களை நாம் அதி­க­மாகச் செய்ய முயற்­சிப்­பது வர­வேற்­கத்­தக்க அம்­ச­மாகும் அதே நேரம் குறித்த அமல்­களை அழ­கா­ன­வை­க­ளாக நாம் அமைத்­துக்­கொள்ள வேண்டும், ஏனெனில் அல்லாஹ் நமது அமல்­களை எண்­ணிப்­பார்ப்பேன் என்று சொல்­ல­வில்லை, நிறுத்­துப்­பார்ப்பேன் என்றே சொல்­கின்றான், நமது அமல்­களின் எண்­ணிக்கை கூடா­விட்­டாலும் அவற்றை மீஸான் தராசில் பார­மா­ன­தாக ஆக்க முயற்­சிக்க வேண்டும்.

அமல்­களை அழ­கு­ப­டுத்தி அதனை அதிக எடை­யுள்­ள­தாக ஆக்­கிக்­கொள்ள அல்­குர்ஆன் , ஸுன்னா எமக்கு சொல்­லித்­தரும் ஐந்து வழி­மு­றை­களை பின் வரு­மாறு எம்மால் வரை­ய­றுத்துக் கூற­மு­டியும்.

1- அல் குர்ஆன் சுன்னா போதித்த அமல்­களை மட்டும் செய்தல்.

2- நபி­களார் காட்­டித்­தந்த வழியில் அதனை செய்தல்.

3- உளத்­தூய்­மையை பேணிக்­கொள்­ளுதல்.

4- சந்­தர்ப்ப சூழ்­நி­லை­க­ளுக்குப் பொருத்­த­மான அமல்களை செய்தல்.

5- நமக்கு விருப்பமான அமல்களை விட இறைவனுக்கு விருப்பமான அமல்கள் எதுவோ அதனை தெரிவு செய்து செய்தல்.

எச்சந்தர்ப்பத்தில் எதனை செய்தால் அல்லாஹ் பொருந்திக் கொள்வானோ அச்சந்தர்ப்பத்தில் அதனை நபிகளார் கற்றுத்தந்த விதத்தில் உளத்தூய்மையோடு  செய்ய முயற்சிப்பதே அமல்களை அழகுபடுத்துதல் என்பதன் பொருளாகும்.

நபிகளார் எமக்கு காட்டித்தந்த அமல்கள் அனைத்துமே மிக அழகானவைகளாகும் எனவே அவற்றை உளத்தூய்மையைப் பேணி அந்த அழகானவன் ரப்புல் ஆலமீன் விரும்புகின்ற முறைப்படி அவனுக்காக மாத்திரம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

அழகானதை அழகாகச் செய்வதையே அழகானவனாகிய அல்லாஹ் அழகென்கிறான் என்ற வகையில் நமது அமல்களை அதிகப்படுத்தாவிட்டாலும் அழகுபடுத்தி, அவற்றை தொடர்ச்சியாக வாழ்வில் கடைப்பிடித்து அவனது அன்பைப்பெற முயற்சிப்போம்.
-Vidivelli