Verified Web

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நீதிமன்ற ஆலோசனை கோரவுள்ளேன்

2018-08-21 05:15:38 ARA.Fareel

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்­க­மைய முன்னாள் ஜனா­தி­ப­திகள் எவ­ருக்கும் மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் உள்­ளது. இது தொடர்­பாக நீதி­மன்­றத்­திடம் ஆலோ­சனை கோர­வுள்ளேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி கடந்த சனிக்­கி­ழமை மகாந்­தன பகு­தியில் மருந்­தகம் ஒன்­றினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்­த­போது ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். உங்­களால் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யு­மென்றால் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்­கவும் போட்­டி­யி­டுவார் அல்­லவா? என்ற கேள்­விக்கு அவர் பதி­ல­ளிக்­கையில் போட்­டி­யி­டு­வதா? இல்­லையா? என்­பதை எம்மால் தீர்­மா­னிக்க முடி­யாது. போட்­டி­யி­டு­வ­தற்கு சட்­ட­ரீ­தி­யான தகு­தியை பெற்­றி­ருக்க வேண்டும். இது தொடர்பில் நீதி­மன்றின் ஆலோ­சனை தேவை.

ஊட­க­வி­ய­லாளர் கடத்­தப்­பட்­டமை தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு உங்­களை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­ய­தல்­லவா? இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என்ற கேள்­விக்கு அவர் பதி­ல­ளிக்­கையில்

ஒரு சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் சகோ­த­ரர்கள் சிலர் என்னை வந்து சந்­தித்­தார்கள். அவர்­க­ளது சகோ­தரர் ஒருவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில் தேடி­பார்க்கும் படியும் என்னை கோரி­னார்கள். அந்த சந்­தர்ப்­பத்தில் நான் ஊட­க­வி­ய­லா­ளரின் சம்­ப­வத்தை போன்றே அது தொடர்பில் தேடிப்­பார்த்து குற்றச் செய­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை கைது செய்து வழக்கு தாக்கல் செய்­வ­தற்கு உத­வி­யுள்ளேன். இவ்­வாறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விட்டால் என்­னிடம் வந்து முறை­யி­டு­வார்கள். ஊட­க­வி­ய­லா­ளர்கள் விவ­கா­ரமும் இது போன்­ற­தொன்­றாகும்.

 எனது இந்த நட­வ­டிக்­கை­யினால்  நான் அத­னுடன் தொடர்பு உள்ளவன் என்று கூற முடியாது. அரசாங்கம் எதிர்த்தரப்பினர் மீ-து எப்போதும் சேறு பூசுவதற்கே முயற்சிக்கிறது. இந்த முயற்சியை அரசாங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் மூலம் நிறைவேற்றிக்கொண்டது என்றார்.
-Vidivelli