Verified Web

உழ்ஹிய்யாவை சிக்கலின்றி நிறைவேற்றுவோம்

2018-08-21 04:51:13 Administrator

புனித ஹஜ் பெருநாளை இலங்கையிலுள்ள ஒருசாரார் இன்று கொண்டாடுகின்றனர். பெரும்பான்மையானோர் நாளை கொண்டாடவுள்ளனர். இந் நிலையில் இன்றைய தினம் ஒருசாராரும் நாளை முதல் மற்றொரு சாராரும் உழ்ஹிய்யா அமலை நிறைவேற்றவுள்ளனர். இதனை தனியாகவும் கூட்டாகவும் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் உழ்­ஹிய்யா கடமையை நிறை­வேற்­றும்­போது நாட்டின் சட்­டத்தை மதித்து நடக்குமாறும்  பல்­லி­னங்­க­ளோடு வாழும் நாம் பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வுகள் தூண்­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்ளக் கூடாது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கு சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

குறிப்பாக இம்முறை கண்டி நகர் மற்றும் சூழ­வுள்ள பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்கள் உழ்­ஹியா கட­மையை கண்டி நகர் பகு­திக்கு வெளியே உள்ள பகு­திக்குச் சென்று நிறை­வேற்றுமாறும் உழ்­ஹியா இறைச்­சியை கண்டி நகர எல்­லைக்குள் எடுத்து வர­வேண்டாம் எனவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. கண்டி வரு­டாந்த எசல பெர­ஹரா எதிர்­வரும் 26 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளதால் கண்டி நகர எல்­லைக்குள் மிரு­கங்கள் அறுப்­பதும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து இறைச்சி வகைகள் நக­ருக்குள் கொண்டு வரு­வதும் தடை செய்­யப்­பட்­டுள்­ளதாலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை போயா தினமாகவுள்ளதால் அன்றைய தினம் உழ்ஹிய்யாவுக்காக மிருகங்களை அறுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஷரீஆ சட்­டங்­களை மதி­யாது எம்­ம­வர்கள் உழ்­ஹிய்யா விட­யத்தில் நடந்து கொள்­வதும், நாட்டுச் சட்­டங்­களை துஷ்பிரயோகம் செய்வதும் கவலைக்குரியதாகும்.  கடந்த காலங்களில் மிகவும் நெருக்­க­மாக அடைக்­கப்­பட்டு வாக­னங்­களில் மிரு­கங்கள் உழ்­ஹிய்­யா­வுக்­காக ஏற்றி வரப்­பட்­ட­மையும் உரிய அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளின்றி மிரு­கங்கள் கொண்டு செல்­லப்­பட்­ட­மையும் பொலி­சா­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் பல பதிவாகி சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

குறிப்­பாக உழ்­ஹிய்­யாவை நாட்டின் சட்ட திட்­டங்கள், விதி­மு­றை­க­ளுக்­க­மைய நிறை­வேற்ற வேண்டும்.  உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களை கொள்­வ­னவு செய்­யும்­போதும் அவற்றை வாக­னங்­களில் எடுத்துச் செல்­லும்­போதும் உரிய அத்­தாட்சிப் பத்­தி­ரங்­களைப் பெற்­றி­ருத்தல், மிரு­கங்­களை எடுத்துச் செல்­வ­தற்குப் பொருத்­த­மான வாக­னத்தைப் பயன்­ப­டுத்­துதல், வாக­னத்தில் ஏற்­றிச்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட அள­வுக்­கேற்ப பிரா­ணி­களை வாக­னத்தில் ஏற்­றுதல், உழ்­ஹிய்­யா­வுக்குப் பொருத்­த­மான இடம், நேரம் என்­ப­வற்றை தீர்­மா­னித்துக் கொள்­ளுதல், குர்பான் தொடர்­பான விளம்­ப­ரங்­களை ஊட­கங்­களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிர­சு­ரிப்­பதைத் தவிர்த்துக் கொள்ளல், அவ்வப் பிர­தேச நிலை­வ­ரங்­களைக் கவ­னத்திற் கொண்டு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் ஆலோ­ச­னை­களைப் பெற்று தனி­யா­கவோ அல்­லது கூட்­டா­கவோ உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றுதல், குர்பான் செய்­யப்­பட்ட பின் விலங்­கு­களின் கழி­வு­களை பொறுப்­பு­ணர்­வுடன், உரிய முறையில் புதைப்­பது முத­லான விட­யங்­களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்­டு­ம்.

குறிப்­பாக பல்­லி­னங்­க­ளோடு வாழும் நாம், பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வு தூண்­டப்­ப­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்­ளவே கூடாது. போயா தினத்­தன்று பிராணிகளை அறுப்பதை முற்­றாகத் தவிர்ந்து கொள்­வதும் பிற சம­யத்­த­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்கும் வகையில் உழ்­ஹிய்­யாவை முறை­யாக நிறை­வேற்­று­வதும் மிகவும் அவ­சி­ய­மாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli