Verified Web

ஜனாதிபதியின் கோரிக்கைக்கிணங்க ரயில் வேலை நிறுத்தம் 23 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

2018-08-21 04:35:58 ARA.Fareel

புகை­யி­ரத ஊழி­யர்­களின் தொழிற்­சங்கங்கள் ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­த­படி புகை­யி­ரத வேலை நிறுத்தம் நடை­பெ­ற­மாட்­டாது. ஜனா­தி­ப­தியின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க இன்று நடை­பெ­ற­வி­ருந்த வேலை நிறுத்தம் கைவி­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புகை­யி­ரத ஊழி­யர்­களின் சம்­பள முரண்­பா­டு­களைத் தீர்ப்­ப­தற்கு எதிர்­வரும் 23 ஆம் திகதி வரை கால அவ­காசம் கோரி­ய­மை­யை­ய­டுத்தே வேலை நிறுத்தம் கைவி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் ஜனா­தி­ப­திக்கும், புகை­யி­ரத ஊழி­யர்­களின் தொழிற்­சங்க பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற  கலந்­து­ரை­யா­ட­லி­னை­ய­டுத்தே வேலை நிறுத்தம் கைவி­டப்­பட்­ட­தாக புகை­யி­ரத ஊழி­யர்கள் சங்­கத்தின் தலைவர் லால் ஆரி­ய­ரத்ன தெரி­வித்தார். ஜனா­தி­ப­திக்கும், புகை­யி­ரத ஊழி­யர்­களின் தொழிற்­சங்­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் எதிர்­வரும் 23 ஆம் திகதி இறுதிப் பேச்­சு­வார்த்தை நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் இப்­பேச்­சு­வார்த்­தையின் போது ஜனா­தி­பதி சம்­பள முரண்­பா­டு­க­ளுக்குத் தீர்வு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

புகை­யி­ரத ஊழி­யர்­களின் சங்­கத்­தி­னது தலைவர் லால் ஆரி­ய­ரத்ன இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; “எதிர்­வரும் 23 ஆம் திகதி புகை­யி­ரத ஊழி­யர்­களின்  சம்­பள பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­வ­தாக  உறு­தி­ய­ளித்­துள்­ளதால் புகை­யி­ரத ஊழி­யர்கள் மீண்டும்  வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட வேண்­டிய தேவை ஏற்­ப­டாது என தொழிற்­சங்­கங்கள் நம்­பிக்கை கொண்­டுள்­ளன” என்றார்.

புகை­யி­ரத ஊழி­யர்­களின் பத­வி­களின் பல்­வேறு தரங்­களில் சம்­பள முரண்­பா­டுகள் நில­வு­வ­தா­கவும் அந்த முரண்­பா­டு­களை நீக்­கு­மாறும் கோரி கடந்த 8 ஆம் திகதி பிற்­பகல் 3 மணிக்கு ரயில்வே ஊழி­யர்கள் திடீர் வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கடந்த 14 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுத்­த­ரு­வ­தாக கடந்த 12 ஆம் திகதி ஜனா­தி­பதி பொல­ந­று­வையில் புகை­யி­ரத ஊழியர் தொழிற்­சங்கங்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தையில் உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­தை­ய­டுத்து வேலை நிறுத்தம் கைவி­டப்­பட்­டது.

கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சம்பள முரண்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி (இன்று) தீர்த்து வைப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையிலே கடந்த சனிக்கிழமை ஜனாதிபதிக்கும் தொழிற்சங்க பிரதிநிதி களுக்குமிடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.
-Vidivelli