Verified Web

இஸ்ரேலுக்கு பொதுமக்களது எதிர்ப்பினை தீவிரமாக்குமாறு மஹ்மூத் அப்பாஸ் வேண்டுகோள்

2018-08-21 03:27:50 M.I.Abdul Nazar

இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான பொது­மக்கள் எதிர்ப்­பினை மேலும் தீவி­ர­மாக்­கு­மாறு பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூட் அப்பாஸ், கடு­மை­யான வார்த்­தைகள் மூலம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இஸ்­ரே­லுக்­கான பொது­மக்கள் எதிர்பின் மூலம் களத்­தினை பலஸ்­தீ­னர்கள் கொதி­நி­லை­யி­லேயே வைத்­தி­ருக்க வேண்டும். எதிர்ப்பு நட­வ­டிக்­கையின் முக்­கி­யத்­து­வத்தை குறைத்து மதிப்­பிடக் கூடாது என ரமல்­லாஹ்­வி­லுள்ள பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் மத்­திய சபையில் உரை­யாற்­றும்­போது தெரி­வித்தார்.

அமெ­ரிக்க நிரு­வா­கத்தைச் சாடிய, இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பின் பங்­காளி என அமெ­ரிக்க அர­சாங்­கத்தை வரு­ணித்த, ஜனா­தி­பதி டொனால் ட்ரம்­பினால் இது­வரை கிடப்பில் போடப்­பிட்­டி­ருக்கும் 'நூற்­றாண்டின் உடன்­ப­டிக்கை' மீதான நம்­பிக்­கை­யின்­மையை மீள உறுதி செய்த மாநாட்­டிற்கு அப்பாஸ் தலைமை தாங்­கினார்.

இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரூ­சலம் அல்-­குத்ஸை அங்­கீ­க­ரித்து அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை டெல் அவி­வி­லி­ருந்து புனித நக­ருக்கு மாற்­று­வ­தற்கு ட்ரம்ப் தீர்­மா­னித்­தி­லி­ருந்து அப்பாஸ் அமெ­ரிக்க நிரு­வா­கத்தை புறக்­க­ணித்து வரு­கின்றார்.

மூன்று நாட்கள் நடை­பெற்ற இம் மாநாட்டில் மத்­திய கிழக்­கிற்­கான ட்ரம்பின் திட்­டத்தை பலஸ்­தீ­னர்கள் எதிர்ப்­பது என்­ப­தையும் அதனைத் தோற்­க­டிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளுக்கு புத்­து­யி­ர­ளிப்­பது எனவும் பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் மத்­திய சபையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்க நிரு­வாகம் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு அர­சாங்­கத்தின் பங்­காளி. அது பிரச்­சி­னைக்­கான தீர்வின் ஒரு பகு­தி­யல்ல, பிரச்­சி­னையின் ஒரு பகு­தி­யாகும் எனவும் அத் தீர்­மா­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

ஜெரூ­சலம் அல்-குத்ஸ், அக­திகள் மற்றும் குடி­யேற்­றங்கள் தொடர்பில் அமெ­ரிக்கா மேற்­கொண்­டுள்ள சட்­டத்­திற்கு முர­ணான தீர்­மா­னங்­க­ளி­லி­ருந்து அது பின்­வாங்கும் வரை அமெ­ரிக்­கா­வு­ட­னான அர­சியல் தொடர்­பு­களை இடை­நி­றுத்தி வைப்­ப­தென்ற தமது கொள்­கை­யினை பலஸ்­தீ­னர்கள் தொடர வேண்டம் என சபை தெரி­வித்­துள்­ளது.

வொஷிங்டன் தனது தீர்­வினை வெளி­யி­டாது கடந்த 8 மாதங்­க­ளாக இழுத்­த­டிப்பில் ஈடு­படும் அதே­வேளை அமெ­ரிக்க அதி­கா­ரி­களும் வெளிப் ­ப­டை­யாக எதனையும் கூறாது இருக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அத் தீர்வில் உள்ளடக்கப் பட்டுள்ள விடயங்கள் இஸ்ரேலினால் தற்போது பலஸ்தீனர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் என்ற அடிப்படையில் செயற்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli