Verified Web

சட்ட ஒழுங்­கு­களைப் பேணி உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றுக

2018-08-21 00:40:48 Administrator

புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினம் மற்றும் அதனைத் தொடர்ந்து மூன்று நாட்­க­ளிலும் உழ்­ஹிய்யாக் கட­மையை நிறை­வேற்­றும்­போது, முற்று முழு­தாக நாட்டின் சட்ட ஒழுங்கு விதி­மு­றை­களைக் கடைப்­பி­டிக்­கு­மாறு உழ்­ஹிய்யாக் கட­மையை நிறை­வேற்­று­வோர்­க­ளிடம்  மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா  வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

உழ்­ஹிய்­யா­வுக்­காக அறுக்­கப்­படும் பிரா­ணி­களை வீதி­க­ளிலோ அல்­லது வாக­னங்­க­ளிலோ எடுத்துச் செல்­லும்­போது, நூறு வீதம் அதன் சட்ட ஒழுங்கு விதி­மு­றைகள் கடைப்­பி­டிக்­கப்­படல் வேண்டும். அத்­துடன், கால்­ந­டை­களை தூர இடங்­க­ளி­லி­ருந்து கொண்­டு­வரும் சமயம், உரிய முறையில் அனு­ம­தி­களைப் பெற்­றுக்­கொள்ளல் போன்ற சட்­ட­திட்­டங்­களைப் பேணி நடந்து கொள்­ளு­மாறும், இது­த­விர  குறிப்­பாக, போயா தின­மா­கிய சனிக்­கி­ழ­மை­யன்று மறை­மு­க­மா­க­வேனும் உழ்­ஹிய்யாக் கொடுப்­பதைக் கட்­டாயம் தவிர்ந்­து­கொள்ள வேண்­டு­மென்றும்  அமைச்சர் வலி­யு­றுத்திக்  கேட்­டுள்ளார்.

   உழ்­ஹிய்யாக் கட­மை­களை நிறை­வேற்றும் பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள்  மற்றும் முஸ்லிம் அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்கள் ஆகி­யோரும், குறித்த ஒழுங்­கு­களை அறிந்து வைத்­தி­ருப்­பதும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.  இப்­பி­ரா­ணி­களின் கழி­வு­களை, கண்ட கண்ட இடங்­க­ளி­லெல்லாம் வீசி எறிந்து அசிங்­கப்­ப­டுத்­தாமல் இருப்­ப­தோடு, பொதுக் குப்பைத் தொட்­டி­க­ளிலோ அல்­லது ஆறு­க­ளிலோ அதன் கழி­வு­களைப்  போடு­வதைத் தவிர்த்து, அவ்­வா­றான கழி­வு­களை இயன்­ற­ளவு குழி தோண்டிப் புதைப்­பது எல்­லோ­ருக்கும் சாலச்­சி­றந்­தது என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார். உழ்­ஹிய்யாக் கட­மையை நிறை­வேற்­று­வதில் அசெ­ள­க­ரி­யங்­களைத் தவிர்த்­துக்­கொள்ள, முன்­கூட்­டியே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில்  அறுப்­ப­தற்­கான அனு­மதிப் பத்­தி­ரங்­களைப் பெற்று, அவற்றைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது அவ­சியம். அனு­மதிப் பத்­தி­ரங்­களை இது­வ­ரையில் எடுக்­கா­த­வர்கள், உட­ன­டி­யாக அவற்றைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும்  அமைச்சர் முஸ்­லிம்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

   நல்­லாட்­சியின் கீழ், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் வழி­காட்­டலின் கீழ் இயங்கும் தேசிய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு சம­யத்­திற்கும் மார்க்க ரீதி­யி­லான சட்­ட­திட்­டங்­களில் எவ்­விதப் பாதிப்­புக்­களும் ஏற்­பட இட­ம­ளிக்­கப்­ப­டாத வகையில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. அந்த வகையில், குறிப்­பாக முஸ்­லிம்­களின் சம­ய­ரீ­தி­யி­லான மார்க்க அனுஷ்­டா­னங்­க­ளுக்கு அர­சாங்கம் என்ற வகை­யிலும், பொறுப்­பு­வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியிலும் நாம் முன்னுரிமை வழங்கி வருகின்றோம்.

   எனவே, குறித்த மேற்படி ஒழுங்கு விதிமுறைகளைப் பேணி அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உழ்ஹிய்யாக் கடமைகளை நிறைவேற்றும் அனைவரிடமும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-Vidivelli