Verified Web

முஸ்லிம்களிடத்தில் ஆயுதம் உள்ளதா?

2018-08-20 23:55:25 MM.Minhaj

விடு­தலை புலி­களின் ஆயுதம் முஸ்­லிம்­க­ளிடம்  உள்­ளதா? என்­பது தொடர்­பாக பூரண விசா­ரணை நடத்­துவோம். நாட்டில் சட்­ட­ விரோ­த­மாக எவ­ருக்கும் ஆயுதம் வைத்­தி­ருக்க முடி­யாது. இது தொடர்­பாக பொலி­ஸா­ரினால் தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக அரச முகா­மைத்­துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

நேற்று நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் விடு­தலை புலி­களின் ஆயுதம் தற்­போது முஸ்­லிம்­க­ளிடம் உள்­ள­தாக புனர்­வாழ்வு பெற்ற விடு­தலை புலி அங்­கத்­த­வர்கள் கூறி­யுள்­ளமை தொடர்­பாக  ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் எந்தப் பகு­தி­யிலும் சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­தற்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம். அப்­படி ஏதும் இருந்தால் எமக்கு உடன் அறி­வி­யுங்கள். இது தொடர்­பாக பொலிஸார் விரை­வான தேடு­தல்­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். ஆகவே இது தொடர்­பாக அர­சாங்கம் உரிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் என்றார்.

எந்­த­வொரு தமிழ் மக்­க­ளி­டமும் தற்­போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்­க­ளி­டமே ஆயுதம் இருப்­ப­தா­கவும் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட தமிழ் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலைவர் இன்­ப­ராசா கடந்த சனிக்­கி­ழமை கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் குறிப்­பிட்­டிருந்தார்.

இதன்­போது, யுத்­தத்தின் பின்னர் தமிழ் மக்கள் அனை­வரும் ஆயு­தங்­களை முஸ்­லிம்­க­ளுக்கு விற்­று­விட்டு சென்று விட்­டனர். தற்­போது முஸ்­லிம்­க­ளி­டமே ஆயுதம் இருக்­கின்­றது.

ஓர் இனத்­திடம் ஆயுதம் இருப்­பது ஆபத்­தா­னது. இதனால் ஏனைய இரு இனத்­த­வர்­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் இருக்­கி­றது.

ஆகவே சவூதி, பாகிஸ்தான் நாடு­களின் உத­விகள் கிடைக்­காமல் போய்­விடும் என்று பயப்­ப­டாது அர­சாங்கம் இது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோ­ரையும் இவ்­வி­வ­கா­ரத்­துடன் தொடர்­பு­ப­டுத்­தி­யி­ருந்­த­துடன் ஏறாவூர், காத்­தான்­குடி, கிண்­ணியா மற்றும் மூதூர் உள்­ளிட்ட பிர­தே­சங்­களை குறிப்­பிட்டு அங்கு இவ்­வாறு ஆயு­தங்கள் இருப்­ப­தாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதற்­கி­டையில், குறித்த முன்னாள் விடு­தலைப் புலிகள் அமைப்பின் உறுப்­பி­னரின் கருத்து குறித்து விசாரணை நடத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந் நிலையிலேயே, சட்டம் ஒழுங்குகளுக்கு பொறுப்பான அமைச்சர் இவ்வாறு தெரிவித்தி ருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli