Verified Web

சமூகத்தில் அதிகரிக்கும் இள வயது மரணங்கள்

2018-08-17 06:19:55 Administrator

 

இலங்கை முஸ்லிம் சமூகம் முழு ஆளுமை படைத்­த­தாகத் திக­ழ­வேண்­டு­மாயின் சகல துறை­க­ளிலும் ஒட்­டு­மொத்­த­மான வளர்ச்­சியை அடைய வேண்டும்.

ஆத்­மீகம்,  கல்வி, பொரு­ளா­தாரம், அர­சியல், சுகா­தாரம், குடும்­பக் ­கட்­ட­மைப்பு, பிற ­ச­மூ­கங்­க­ளு­ட­னான உறவு போன்ற துறை­களில் வளர்ச்­சி­ய­டைந்தால் தான் அதனை முழு வளர்ச்­சி­யாகக் கரு­த­மு­டியும். அந்­த­வ­கையில், அதன் சுகா­தாரத் துறையும் எமது கவ­னத்தை ஈர்க்­க­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அந்த வகையில் இலங்கை முஸ்­லிம்­க­ளது உடல் நிலை, சுகா­தார நிலை, தேகா­ரோக்­கியம் என்­பன பற்­றிய புள்­ளி ­வி­ப­ரங்­க­ளையும் அண்­மைக்­காலத் தர­வு­க­ளையும் எடுத்­து ­நோக்­கினால் மார்க்­கத்தின் அடிப்­படையான அம்­சங்­களில் அடங்கும் அவை மிக அதி­க­மாகப் பின்­ன­டைவைக் கண்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

மாத்திரமன்றி இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரிவோரின் ஆரோக்கியமும் இன்று மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நான்கு நாட்களுக்குள் கட்டாரில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த இலங்கை முஸ்லிம்கள் நால்வர் இளவயதிலேயே மரணித்தமை சகலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் எங்கு வாழ்ந்தாலும் அவர்களது ஆரோக்கியத்தில் கடும் வீழ்ச்சி ஏற்படுவதானது தீவிர கரிசனைக்குரியதாகும்.  குறிப்பாக நீரி­ழிவு வியாதி, உயர், தாழ் இரத்த அழுத்­தங்கள், கொலஸ்ரோல், புற்­றுநோய் போன்ற தொற்றா நோய்­களால் பீடிக்­கப்­படும் முஸ்­லிம்­க­ளது தொகை முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் மூன்று மடங்கு அதி­க­மாகும் என அண்­மைக்­கால ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தில் சர்க்­கரை வியா­திக்­கா­ரர்கள் அதி­க­மாகிக் கொண்­டு­வ­ரு­வது அவ­தா­னிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இலங்கை சனத்­தொ­கையில் பத்து வீத­மா­ன­வர்கள் இந்த வியா­தியால் அவஸ்­தைப்­படும் போது முஸ்லிம் சமூ­கத்­துக்குள் 25 வீத­மா­ன­வர்கள் அந்த நோயின் பாதிப்­புக்கு உள்­ளாகி இருப்­ப­தாக ஆய்­வுகள் கூறு­கின்­றன.

இலங்­கையின் தனியார் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்­சை­பெறும் நோயா­ளி­களில் முஸ்­லிம்­க­ளது தொகை அதி­க­மாகும். இலங்­கையில் 9.7 வீத­மாக முஸ்­லிம்கள் வாழ்ந்­தாலும் சிகிச்­சைக்­கா­க­ வரும் மொத்த நோயா­ளி­களில் முஸ்லிம் நோயா­ளி­க­ளது விகி­தா­சாரம் சுமார் 30 வீதத்தைத் தாண்­டி­ய­தாக இருக்­கலாம். நோயா­ளி­க­ளது தொகை வழக்­கத்­தை­விட அதி­க­மாக இருப்­ப­தாயின், பிற­ ச­மூ­கங்­க­ளோடு ஒப்­பி­டு­கையில் முஸ்லிம் நோயா­ளி­க­ளது தொகை­மிக அதி­க­மாயின் அது­பற்றி தீவி­ர­மாக சிந்­திப்­பது அவ­சி­ய­மாகும்.

இப்­ப­டி­யான ஒரு­நிலை ஏற்­படக் கார­ணங்கள் யாவை? இந்­நி­லை­யி­லி­ருந்து ஓர­ள­வா­வது மீட்­சி­ பெற எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் யாவை? இந்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வேண்­டி­ய­வர்கள் யார் ? போன்ற அம்­சங்கள் பற்றி ஆரா­யப்­ப­ட ­வேண்டும். இது காலத்தின் தேவையும் மார்க்க மற்றும் சமூகக் கட­மை­யு­மாகும்.

அந்த வகையில்  இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில் உள்ள சுகா­தாரத் துறை­யோடு தொடர்­பான பிரச்­சி­னைகள் பற்றி விஞ்­ஞா­ன­பூர்­வ­மான, ஆதா­ர­பூர்­வ­மான புள்­ளி­வி­ப­ரங்கள் திரட்­டப்­ப­ட­வேண்டும்.அவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது மக்களை பாரிய நோய்களிலிருந்து மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த உயரிய பணியில்  முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த வைத்­திய நிபு­ணர்கள், பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், பல்­க­லைக்­க­ழங்­களில் வைத்­திய,விஞ்­ஞானத் துறை­களில் கல்­வி­ ப­யிலும் மாண­வர்கள், வைத்தியசாலைகளில் ஆண், பெண் தாதிகளாக மற்றும் ஊழியர்களாகப் பணி புரிவோர், இஸ்லாமிய இயக்கங்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள்,  சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதன் மூலமாகவே ஆரோக்கியமுள்ள சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டியெழுப்பக் கூடியதாகவிருக்கும்.
-Vidivelli