Verified Web

ஞான­சார தேரரை

2018-08-17 04:21:36 Administrator

பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில், அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவரை குற்­ற­வா­ளி­யாகக் கண்ட மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் அவ­ருக்கு 19 வருட கால சிறைத்­தண்­டனை விதித்து கடந்த 8 ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தது.

 நீதி­மன்ற அவ­ம­திப்பு உள்­ளிட்ட நான்கு குற்­றங்கள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட இந்த 19 வருட சிறைத் தண்­ட­னையை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க இதன்­போது மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழு கட்­ட­ளை­யிட்­டது. இந்­நி­லையில், குற்­ற­வா­ளி­யான ஞான­சார தேரர் சுக­வீனம் கார­ண­மாக ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் 5 ஆம் இலக்க சிகிச்சை அறையில் சிகிச்சை பெறு­வ­தாக அவ­ரது சட்­டத்­த­ரணி, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா மன்­றுக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து, உட­ன­டி­யாக அங்கு சென்று அவரை பொறுப்­பேற்­கு­மாறு வெலிக்­கடை சிறை அத்­தி­யட்­ச­க­ருக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் உத்­த­ர­விட்­டனர்.

2016 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­ம­லாக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் இடை­ந­டுவே கலகம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் நடந்­து­கொண்டு நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக, அப்­போது ஹோமா­கம பிர­தான நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்க ஊடாக ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் முறை­யி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த வழக்கில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்ட ஞான­சார தேர­ருக்கே இந்த தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், நீதி­மன்ற அவ­ம­திப்பு உள்­ளிட்ட 4 குற்­றங்கள் தொடர்பில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்டு 6 வரு­டங்­களில் அனு­ப­விக்கும் வகையில் 19 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட பொது­பல சேனா அமைப்பின் செயலர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில், தண்­ட­னைக்கு எதி­ராக அன்­றைய தினமே மேன் முறை­யீடு செய்­யப்­பட்­டது.

தீர்ப்­ப­றி­விக்­கப்­பட்­டதை தொடர்ந்து ஞான­சார தேரரின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா, இதற்­கான கோரிக்­கையை முன்­வைத்தார். தீர்ப்பு அறி­வித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லை­யி­லேயே அவர் இதனை முன்­வைத்தார்.

இது இப்­ப­டி­யி­ருக்க , ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்­று­வரும் ஞான­சார தேரரைப் பார்ப்­ப­தற்கு அதி­திகள் எவ­ருக்கும் ஒரு மாத காலத்­துக்கு அனு­ம­தி­யில்லை; அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என சிறைச்­சாலை தலை­மை­யகம் கடந்த திங்­க­ளன்று அறி­வித்­தது.

சிறைச்­சாலை தலை­மை­ய­கத்தின் அறி­வித்­த­லின்­படி ஞான­சா­ர­தே­ரரை எந்­த­வொரு அதி­தியும் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 8 ஆம் திக­தியும் அதற்குப் பின்­புமே பார்­வை­யிட முடியும்.

சிறைக்­கை­தி­களைப் பார்­வை­யி­டு­வ­தற்கு மாதத்­துக்கு ஒரு தட­வையே அனு­மதி வழங்­கப்­ப­டு­கி­றது. மூவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்டு வரு­கி­றது எனவும் சிறைச்­சாலை தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது. இம் முறைமை ஞான­சா­ர­தேரர் விட­யத்­திலும் கையா­ளப்­ப­ட­வுள்­ளது என்றும் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன்,  வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் ஞான­சார தேர­ருக்கு சிறைக்­கை­தி­க­ளுக்கு வழங்­கப்­படும் சிறைச்­சாலை சீருடை (லிபர்டி உடை) வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் வைத்­தி­ய­சா­லையில் சிசிச்சை பெற்­று­வரும் ஞான­சார தேரர் தனது காவி­யு­டைக்கு மேலாக குறிப்­பிட்ட வெள்­ளை­நிற  சிறைச்­சாலை லிபர்டி உடையை அணிந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. லிபர்டி சிறை­யுடை ஒரு லுங்­கியும், மேலங்­கியும் உள்­ள­டங்­கி­ய­தாகும்.

வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காகத் தங்­கி­யி­ருக்கும் சிறைக்­கை­தி­களை நீதி­மன்­றுக்கு மற்றும் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லும்­போது இந்த சிறைச்­சாலை உடை வழங்­கப்­ப­டு­கி­றது. அதை அவர்கள் அணிந்து கொள்­கி­றார்கள். ஆனால் அவ்­வா­றான கைதிகள் சிறைச்­சா­லைக்கு அழைத்து வரப்­பட்­டதும் கட்­டா­ய­மாக ஜம்பர் அணிந்­து­கொள்ள வேண்­டு­மென சிறைச்­சாலைப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

ஸ்ரீஜ­ய­வர்­த­ன­புர வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும்  ஞான­சா­ர­தே­ர­ருக்கு W 17640 எனும் சிறைச்­சாலை இலக்­கத்தின் கீழ் இந்த லிபர்டி சிறை­யுடை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஞானசார தேரர் வைத்தியசாலையில் ஒரு ஜெய்லர் மற்றும் இரு ஆயுதம் தரித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பொறுப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-விடிவெள்ளி