Verified Web

இன்னும் தொடருமா இந்த இழுபறி?

A.J.M.Nilaam

சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்

 

2018-08-17 01:21:46 A.J.M.Nilaam

குறித்த சில விட­யங்­களில் விதர்ப்­ப­மான அபிப்­பி­ரா­யங்கள் புக­ஹாக்­க­ளி­டமும் இருந்­துள்­ளன. பெண் காதி வேண்டாம் என ஷாபி இமாம் குறிப்­பி­டு­கையில் நல்­ல­தல்ல என ஹனபி இமாம் குறிப்­பி­டு­கிறார் என்று ஒரு ஆலிம் விளக்­கப்­ப­டுத்­தினார்.

மொத்­தத்தில் ஹனபி, மாலிகி, ஷாபி, ஹம்­பலி ஆகிய நான்கு புக­ஹாக்­க­ளுமே சந்­தர்ப்ப சூழ­லுக்­கேற்ப நெளி­வு­சு­ழி­வு­களைக் கையாண்­டி­ருக்­கி­றார்கள். காரணம் இஜ்மா ஃகியாஸ், இஜ்­திஹாத் ஆகி­ய­வற்றின் மூலம் கிடைக்­கப்­பெற்­றுள்ள தாராள நெகிழ்­வுத்­தன்­மையே ஆகும்.

இப்­போ­துள்ள இறுக்­க­மான கருத்து கெடு­பி­டிகள் அப்­போது இருந்­தி­ருக்­கு­மாயின் நான்கு பிரி­வி­னரும் கடு­மை­யாக மோதி­யி­ருப்­பார்கள். எனினும் நான்கு மத்­ஹ­பு­களும் இறுக்­க­மான நிலைப்­பாட்டை இல்­லாமற் செய்­யவே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த வகையில் இஜ்­திஹாத் மூலம் வலி­காரன், பெண் காதி, திரு­ம­ணப்­ப­திவு, மணப்­பெண்ணின் வய­தெல்லை ஆகி­ய­வற்­றோடு மற்­று­முள்­ள­வற்­றையும் எளி­தாக அணு­கலாம். ஷரீஆ விட­யத்தில் புக­ஹாக்­களே நெகிழ்­வுத்­தன்­மையைக் காட்­டி­யி­ருக்­கி­றார்கள். விஷயம் நமக்குப் புரி­ய­வில்லை அவ்­வ­ள­வுதான். தற்­போது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து விட­யத்தை சூச­க­மாக உலமா சபை தனது தரப்பு நியா­யத்­துக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பா­விடம் வழங்­கி­யி­ருக்­கி­றது. முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபை எதிர்­கொள்ளும் ஆற்றல் அவ­ருக்கு இருக்­கி­றது என்­பதே இதற்குக் கார­ண­மாகும்.

ஆக இஸ்­லா­மிய அடிப்­ப­டை­யி­லான இவ்­வி­டயம், இஸ்­லாத்தில் போதிய விளக்­க­மற்ற இரு முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­க­ளி­டமே விடப்­பட்­டி­ருக்­கி­றது. சலீம் மர்சூப் குழு­விலும், பாயிஸ் முஸ்­தபா குழு­விலும் அடங்­கி­யி­ருப்­போரைச் சுட்­டிக்­காட்டி உலமா சபை பிற­முகர் மௌலவி முர்ஷித் முழப்பர் என்ன சொல்­கிறார். பாயிஸ் முஸ்­த­பாவின் குழுவில் பெறு­ம­தி­யான ஆலிம்­களும் சட்­டத்­த­ர­ணி­களும் அடங்­கி­யி­ருக்­கையில் சலீம் மர்­சூபின் குழுவில் பிற மதத்­தினர் மூவரும், முஸ்லிம் பெண்கள், பிற மதப்­பெண்கள் ஆகி­யோரும் உள்­ளனர் எனக் குறிப்­பி­டு­கிறார்.

இஸ்­லா­மிய விட­யத்தைத் தெளி­வாக முன்­வைக்க வேண்­டிய ஆலிம்கள் போதிய தெளி­வற்­ற­வர்­க­ளிடம் அதை வழங்கி பிள­வு­ப­டுத்­தி­யி­ருப்­பதைப் பார்த்­தீர்­களா? சலீம் மர்­சூ­பையும் பாயிஸ் முஸ்­த­பா­வையும் ஒன்­று­ப­டுத்தி ஆலிம்கள் தெளி­வான வடி­வ­மைப்பை ஏற்­ப­டுத்­தாத வரை இந்த பிரச்­சினை மேலும் நீண்­டு­கொண்டே போகும்.

சொல்­வது யார் எனப் பார்த்து முடிவு செய்­யக்­கூ­டாது. சொல்­வது என்ன என்றே பார்க்க வேண்டும். சிலர் சொன்னால் பொய், பலர் சொன்னால் உண்மை என்­பதும் இல்லை, கற்­றவன் சொல்­வ­தெல்லாம் உண்மை, கல்­லா­தவன் சொல்­வ­தெல்லாம் பொய் எனவும் இல்லை.

ஆலிம்கள் காவற்­கா­ரர்­களே தவிர இஸ்லாம் எனும் தோட்­டத்தின் சொந்­தக்­கா­ரர்­க­ளல்லர். அல்­லாஹ்வே இதன் சொந்­தக்­கா­ர­னாவான். எனவே இந்தத் தோட்­டத்­துக்கு உரிமை பாராட்ட இவர்­களால் முடி­யாது. காரணம் இத்­தோட்டம் எல்­லோ­ருக்­கு­மான பொது உடைமை சொத்­தாகும்.

ஆக இலங்­கையின் பொதுச்­சட்டம் பெண்­க­ளுக்­கான திரு­மண வயது 18 என வரம்­பிட்­டி­ருக்­கையில் சலீம் மர்­சூபின் அறிக்கை 18 என்­பதை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­ற­போதும் அதி­லி­ருந்து ஓரிரு வய­து­க­ளுக்குக் குறை­வாக வழங்­கவும் காதி­யா­ருக்கு அனு­மதி வழங்­கி­யி­ருக்­கி­றது.

அதி­லொரு மாற்­ற­மாக 16 வயது பெண்­க­ளோடு அதற்கு ஓரிரு வய­து­க­ளுக்கு குறை­வான பெண்­க­ளையும் கூட காதி­யாரின் அனு­ம­தி­யோடு மண­மு­டித்துக் கொடுக்­கலாம் என பாயிஸ் முஸ்­த­பாவின் அறிக்கை குறிப்­பி­டு­கி­றதாம்.

காதி­யாரும் ஆண் வலி­கா­ரரும் ஆண், இந்த பிஞ்சு இளம் கும­ரி­களை அவ­ருக்கும் தாரை வார்க்கும் உரிமை, இவ­ருக்கும் தாரை வார்க்கும் உரிமை வழங்­கப்­படும் என்றால் இஸ்­லாத்தைத் தெளி­வாக அறிய விரும்பி இஸ்­லாத்தில் இணைய விரும்பும் உலகப் பெண்கள் வினா எழுப்­ப­மாட்­டார்­களா? கூறுங்கள். வலி­காரன் தேவை­யில்லை என சலீம் மர்­சூபின் அறிக்கை குறிப்­பி­டு­கையில் வலி­காரன் தேவை என பாயிஸ் முஸ்­த­பாவின் அறிக்கை குறிப்­பி­டு­கி­றதாம். திரு­ம­ணப்­ப­திவு கண்­டிப்பு என சலீம் மர்­சூபின் அறிக்கை குறிப்­பி­டு­கையில் வலி­காரன் ஈஜாப்­கபூல், இரு சாட்­சிகள் ஆகி­யவை மூலம் இணை சேரலாம். இரண்டு மாதங்­க­ளுக்குள் பதிவு செய்­தாக வேண்டும். இன்றேல் தண்­டப்­பணம் அற­வி­டப்­பட வேண்டும். அதைச் செலுத்­தா­வி­டத்து சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும் எனப் பாயிஸ் முஸ்­த­பாவின் அறிக்கை குறிப்­பி­டு­கி­றதாம்.

18 வய­துக்குக் குறைந்த பெண்­ணாயின் காதியின் அனு­மதி வேண்டும் என சலீம் மர்­சூபின் அறிக்கை குறிப்­பி­டு­கையில் 16 வய­துக்குக் குறைந்த பெண்­ணாயின் காதியின் அனு­மதி வேண்டும் என பாயிஸ் முஸ்­த­பாவின் அறிக்கை குறிப்­பி­டு­கி­றதாம். காதியின் அனு­மதி, மனை­வியின் அனு­மதி, மறு­பெண்ணின் சம்­மதம் ஆகி­ய­வற்றைப் பெற்றே பல­தார மணம் புரி­யலாம் என்று சலீம் மர்­சூபின் அறிக்கை குறிப்­பி­டு­கையில் காதியின் அனு­ம­தி­யோடு துஷ்­பி­ர­யோகம் நிகழா வண்ணம் வழங்­கலாம் என பாயிஸ் முஸ்­த­பாவின் அறிக்கை குறிப்­பி­டு­கின்­றதாம். வலி­காரன் இல்­லா­விட்டால் விவாகம் இல்லை என்­றி­ருக்­கு­மாயின் 18 வயதைத் தாண்­டினால் அப்பெண் சுய வலி­யாகித் தானே மண­மு­டித்­துக்­கொள்­ளலாம் எனும் விதி­முறை இது­வரை இருந்து வந்­ததே.

இதன் மூலம் 18 வய­துதான் விவா­கத்­துக்குத் தகுந்த பருவம் என்­பது விளங்­க­வில்­லையா? அப்­ப­டி­யானால் வலி­காரன் அந்தப் பருவ தகை­மையை அடை­யாத பெண்ணைத் தாரை வார்க்­கத்­தானே தேவைப்­ப­டு­கிறார்.

சலீம் மர்சூப் அந்த வகை­யில்தான் 18 வயதே பெண்ணின் விவாக வயது எனும் அடிப்­ப­டையில் வலி­காரன் தேவை­யில்லை என்­கிறார் என நினைக்­கிறேன். அப்­ப­டி­யானால் 18 வய­துக்கும் குறை­வான பெண்­ணுக்கு காதியின் அனு­ம­தி­யோடு விவாகம் நடத்­தலாம் என சலீம் மர்சூப் கூற­லாமா? இதன் மூலம் காதியார் வசம் அதி­காரம் வழங்­கப்­பட்டு 17 மற்றும் 16 வயது பெண்­க­ளுக்கும் விவாகம் புரியும் வாய்ப்பு கிடைக்­கி­றதே.

விவா­கத்­துக்கும் விவா­க­ரத்­துக்கும் பெண்ணின் சுய­வி­ருப்பம் தேவை என்­றி­ருக்­கையில் தாரை வார்ப்­பவர் பொறுப்­பு­தா­ரி­யாக மட்­டுமே இருக்க முடியும். பெண்ணால் விரும்­பப்­ப­டு­ப­வரை மறுக்­கவோ, அவள் வெறுப்­ப­வரை மண­மு­டிக்­கு­மாறு நிர்ப்­பந்­திக்­கவோ இவரால் முடி­யாது. எனினும் வறி­யவர் சிலர் வறுமை தாங்­காது தமது பிஞ்­சுக்­கு­ம­ரி­க­ளையும் கூட முதி­ய­வர்­க­ளுக்குத் தாரை வார்த்து விடு­கி­றார்கள். இதற்கு அனு­ம­திப்­பத்­திரம் வழங்கும் அதி­கா­ரமும் காதிக்குக் கிடைத்­து­வி­டு­கி­றது. அறிவில் தெளி­வான நிலையை அடைந்து ஒரு பெண் உடல் ரீதி­யிலும் உள ரீதி­யிலும் முழு­மை­யான விவாகத் தகு­தி­யைப்­பெற்று விடு­வா­ளாயின் அவளைத் தாரை வார்க்க எவரும் தேவை­யில்லை. அந்தத் தகு­தியை அவள் அடையும் முன்பே இவர்கள் காரியம் பார்க்க முனை­யக்­கூ­டாது. 1951 ஆம் ஆண்டு பெண் கல்வி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. பெண்கள் வீட்­டுக்குள் முடக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். ஆணின் தயவு இருந்தால் மட்­டுமே பெண் வாழலாம் எனும் நிலை இருந்­தது. தற்­போது அந்­நிலை இல்லை. பெண்கள் சகல துறை­க­ளிலும் சம­நிலை பெற வேண்டும் எனும் விழிப்பு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. பெண்­களின் இத்­த­கைய நிலைப்­பாட்­டுக்கு  இஸ்லாம் தடை­யாக இருக்­கி­றதா? எனும் கேள்­விக்கு நாம் பதி­ல­ளித்­தாக வேண்டும். பாயிஸ் முஸ்­தபா குழு­வினர் இப்­படிக் கூறு­கி­றார்கள். சலீம் மர்சூப் குழு­வினர் சொல்­வது போல திரு­ம­ணப்­ப­திவை உட­ன­டி­யாக செய்ய வேண்­டி­ய­தில்லை. வலி­காரன் ஈஜாப்­கபூல் இரு சாட்­சிகள் ஆகி­ய­வற்றின் மூலம் ஆணையும் பெண்­ணையும் இணைத்­து­விட்டு இரண்டு மாதங்­க­ளுக்குள் பதிவு செய்து கொள்­ளலாம். அப்­ப­திவு நிக­ழா­விட்டால் தண்­டப்­பணம் அற­வி­டப்­ப­டலாம். அதைச் செலுத்­தா­விட்டால் சிறைத் தண்­டனை விதிக்­கலாம் என பாயிஸ் முஸ்­தபா குழு­வி­னரின் அறிக்கை குறிப்­பி­டு­கி­றதாம்.

இரு மாதங்­க­ளுக்குள் பதிவு நிகழும் என்­பது என்ன உறுதி? இந்த இடை­வெளி பல­ருக்கும் வாய்ப்­பா­கவே ஆகி­விடும். தண்­டப்­பணம் செலுத்­து­வதன் மூலமும் அவன் சிறை செல்­வதன் மூலமும் அவ­ளுக்கு வாழ்வு கிடைத்­து­வி­டுமா?

இல்­லற வாழ்­வுக்­கென உடல் ரீதி­யிலும் உள ரீதி­யிலும் பெண்கள் முழு வளர்ச்­சியும் பெறும் வரை அவ­காசம் வழங்­கி­னால்தான் என்ன? பொதுச் சட்­டத்­துக்கு இசைந்து 18 என வைத்துக் கொண்­டால்தான் என்ன?

இவ்­வி­ட­யத்தில் அக்­கப்போர் செய்து உலமா சபை 10 வரு­டங்­களை வீணாக்க வேண்­டுமா? பச்­சி­ளங்­கு­ம­ரி­க­ளுக்குக் கரி­சனம் காட்­டுவோர் முஸ்லிம் சமூ­கத்தில் பர­வ­லாக 30 – 35 – 40 வய­து­களைத் தாண்­டியும் மண­வாழ்­வுக்கு வழி­யின்றி கண்­ணீர்­விடும் ஏழைக்­கு­ம­ரி­களைப் பற்றி சிந்­தித்­த­துண்டா? இவர்­களில் பலர் மண­வாழ்­வின்­றியே மர­ணித்­தி­ருக்­கி­றார்­களே. இதனால் அவர்கள் சந்­த­தி­க­ளின்றி அந்­திம காலத்தில் அநா­த­ர­வா­னார்­களே? இத்­த­கை­யோ­ருக்கு அல்­லவா இவர்கள் முக்­கி­யத்­துவம் வழங்க வேண்டும்.

பிஞ்­சுக்­கு­ம­ரி­களின் விட­யத்தில் இவர்கள் ஏன் மாற­டிக்­கி­றார்கள். காதி மூலமும் வலி­காரன் மூலமும் எளி­தாக அடைந்து கொள்­ளலாம் என்­ப­தற்­கா­கவா? பிஞ்­சுக்­கு­ம­ரி­க­ளுக்கு மண­மு­டித்­துத்தான் வாழ்வு கொடுக்க வேண்­டுமா?

ஒருவன் பல­தார மணம் புரி­வ­தாயின் காதியின் அனு­ம­தி­யோடு மனை­வியின் அனு­ம­தியும் மறு­பெண்ணின் சம்­ம­தமும் வேண்டும் என சலீம் மர்சூப் குழு­வினர் குறிப்­பி­டு­கையில் துஷ்­பி­ர­யோகம் நிக­ழா­வண்ணம் காதி அனு­மதி வழங்­கலாம் என பாயிஸ் முஸ்­தபா குழு­வினர் குறிப்­பி­டு­கி­றார்கள்.

இதில் மனை­வியின் அனு­ம­தியும் இல்லை. மறு­பெண்ணின் சம்­ம­தமும் இல்லை. துஷ்­பி­ர­யோ­கங்கள் எவை­யெவை எனும் குறிப்­பு­களும் இல்லை. அவை நிகழ்ந்தால் என்ன தண்­ட­னைகள் எனும் விதிப்­பு­ரை­களும் இல்லை. துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாகும் பெண்­ணுக்­கான வாழ்­வுக்கு வழி­யு­மில்லை. நிவா­ர­ணமும் இல்லை. விவா­கத்­துக்குப் பின் பதிவு நிக­ழா­விட்டால் ஆணுக்கு மட்­டுமா தண்­ட­னையும் சிறையும் பெண்­ணுக்கு ஏன் இல்லை. அவ­ளது இல்­லற வாழ்வின் இழப்­புதான் தண்­ட­னையும் சிறையும் என்­ப­தாலா? அதற்குப் பின் இல்­லற இணக்கம் ஏற்­ப­டுமா? பதிவைக் கட்­டா­ய­மாக்­கினால் தண்­ட­னையும் சிறையும் இருக்­காதே. 1951 ஆம் ஆண்டு இயற்­றப்­பட்டு தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ஏற்­பாட்­டின்­படி பூப்­பெய்­திய 12 வயது சிறு­மி­யையும் கூட காதி­யாரின் அனு­ம­திப்­படி மண­மு­டித்துக் கொடுத்­து­வி­டலாம். தற்­போதும் கூட அதை நியா­யப்­ப­டுத்தும் கருத்து தெரி­விக்­கப்­ப­டவே செய்­கி­றது. இதை ஒரு பிர­சித்த ஆலிமே தெரி­வித்­துள்ளார்.

அதா­வது பெற்­றோரை இழந்த அனாதைச் சிறு­மி­க­ளையும் வறு­மைக்­குட்­பட்ட சிறு­மி­க­ளையும் மண­மு­டித்துக் கொடுப்­பதன் மூலம் அவர்­க­ளுக்கு வாழ்­வா­தாரம் வழங்­கலாம் என்­கிறார். அத்­த­கைய சிறு­மி­களை ஒரு நிறு­வ­னத்தின் மூலம் பொறுப்­பேற்று தக்க கல்வி வழங்கி வளர்ச்சியடையச் செய்த பின் திருமண வலு அடையப்பெற்றதும் தகுந்த மணாளனைத் தெரிவுசெய்து மணமுடித்துக் கொடுக்கலாகாதா? இத்தகைய ஓர் அமைப்பை உருவாக்க உடனடியாகச் சிந்தித்தால் என்ன? அந்த நாள் வந்திடாதோ? நபி(ஸல்) மதீனாவில் வாழ்ந்த 10 வருட காலத்தில் மக்கா வெற்றி நீங்கலாக 26 யுத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அக்கால கட்டத்தில்தான் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு எனும் வகையில் பலதார மண அனுமதியை குர்ஆன் மூலம் அல்லாஹ் வழங்கினான். இது யுத்த காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியாகும்.

யுத்தத்தில் ஏராளமான ஆண்கள் இறந்துபோவதால் விதவைகளாகும் பெண்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமற் போய்விடுகிறது. அதை ஈடு செய்தது பலதார முறையே என்பதை உலகமே இன்று ஏற்றுக்கொள்கிறது. எனினும் சிலர் மோகவேட்கையை மட்டுமே காரணமாக காட்டி பலதார மணத்தை சிலாகிக்கிறார்கள். அதுவும் விதவைகளை அல்ல இளங்கன்னிகளை மணக்கவே பலதார மணத்தை விரும்புகிறார்கள். ஆண்களின் மோக தணிப்புக்குரிய ஏற்பாடல்ல பலதார மணம். வாழ்வாதாரங்களை இழந்த பெண்களுக்கான முறையான வழிகாட்டுதலாகும் என்பது உணரப்பட வேண்டும்.
-Vidivelli