Verified Web

உழ்ஹிய்யாவின்போது கவனிக்க வேண்டியவை

2018-08-16 05:03:15 Administrator

புனித துல்ஹஜ் மாதத்தை நாம் அடைந்துள்ள நிலையில் அதில் உழ்ஹிய்யா அமலை நிறைவேற்றுவதற்கான தயார்படுத்தல்கள் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றன. தனியாகவும் கூட்டாகவும் இதனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில் உழ்­ஹிய்யா கடமையை நிறை­வேற்­றும்­போது நாட்டின் சட்­டத்தை மதித்து நடக்குமாறும்  பல்­லி­னங்­க­ளோடு வாழும் நாம் பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வுகள் தூண்­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்ளக் கூடாது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கு சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

குறிப்பாக இம்முறை கண்டி நகர் மற்றும் சூழ­வுள்ள பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்கள் உழ்­ஹியா கட­மையை கண்டி நகர் பகு­திக்கு வெளியே உள்ள பகு­திக்குச் சென்று நிறை­வேற்றுமாறும் உழ்­ஹியா இறைச்­சியை கண்டி நகர எல்­லைக்குள் எடுத்து வர­வேண்டாம் எனவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்டி மாவட்ட கிளை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. கண்டி வரு­டாந்த எசல பெர­ஹரா எதிர்­வரும் 26 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளதால் கண்டி நகர எல்­லைக்குள் மிரு­கங்கள் அறுப்­பதும், வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து இறைச்சி வகைகள் நக­ருக்குள் கொண்டு வரு­வதும் தடை செய்­யப்­பட்­டுள்­ளதாலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க ஷரீஆ சட்­டங்­களை மதி­யாது எம்­ம­வர்கள் உழ்­ஹிய்யா விட­யத்தில் நடந்து கொள்­வதும், நாட்டுச் சட்­டங்­களை துஷ்பிரயோகம் செய்வதும் கவலைக்குரியதாகும்.  கடந்த காலங்களில் மிகவும் நெருக்­க­மாக அடைக்­கப்­பட்டு வாக­னங்­களில் மிரு­கங்கள் உழ்­ஹிய்­யா­வுக்­காக ஏற்றி வரப்­பட்­ட­மையும் உரிய அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளின்றி மிரு­கங்கள் கொண்டு செல்­லப்­பட்­ட­மையும் பொலி­சா­ரினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் பல பதிவாகி சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருந்ததை இந்த இடத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

உழ்­ஹிய்­யாவைக் கார­ண­மாகக் காட்டி நாட்டில் மாட­றுப்­பதைத் தடை செய்ய வேண்டும் என பௌத்த கடும்­போக்கு சக்­திகள் தொட­ராக போர்க் கொடி தூக்கி வரு­கின்­றன. இவ்வாறானவர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்துமளவுக்கு நமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்துவிடக் கூடாது.

குறிப்­பாக உழ்­ஹிய்­யாவை நாட்டின் சட்ட திட்­டங்கள், விதி­மு­றை­க­ளுக்­க­மைய நிறை­வேற்ற வேண்டும்.  உழ்­ஹிய்­யா­வுக்­கான பிரா­ணி­களை கொள்­வ­னவு செய்­யும்­போதும் அவற்றை வாக­னங்­களில் எடுத்துச் செல்­லும்­போதும் உரிய அத்­தாட்சிப் பத்­தி­ரங்­களைப் பெற்­றி­ருத்தல், மிரு­கங்­களை எடுத்துச் செல்­வ­தற்குப் பொருத்­த­மான வாக­னத்தைப் பயன்­ப­டுத்­துதல், வாக­னத்தில் ஏற்­றிச்­செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட அள­வுக்­கேற்ப பிரா­ணி­களை வாக­னத்தில் ஏற்­றுதல், உழ்­ஹிய்­யா­வுக்குப் பொருத்­த­மான இடம், நேரம் என்­ப­வற்றை தீர்­மா­னித்துக் கொள்­ளுதல், குர்பான் தொடர்­பான விளம்­ப­ரங்­களை ஊட­கங்­களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிர­சு­ரிப்­பதைத் தவிர்த்துக் கொள்ளல், அவ்வப் பிர­தேச நிலை­வ­ரங்­களைக் கவ­னத்திற் கொண்டு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் ஆலோ­ச­னை­களைப் பெற்று தனி­யா­கவோ அல்­லது கூட்­டா­கவோ உழ்­ஹிய்­யாவை நிறை­வேற்­றுதல், குர்பான் செய்­யப்­பட்ட பின் விலங்­கு­களின் கழி­வு­களை பொறுப்­பு­ணர்­வுடன், உரிய முறையில் புதைப்­பது முத­லான விட­யங்­களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்­டு­ம்.

குறிப்­பாக பல்­லி­னங்­க­ளோடு வாழும் நாம், பிற சமூ­கத்­த­வர்கள் வேத­னைப்­படும் வகை­யிலோ அல்­லது அவர்­க­ளு­டைய உணர்வு தூண்­டப்­ப­டப்­படும் வகை­யிலோ நடந்து கொள்­ளவே கூடாது. போயா தினத்­தன்று பிராணிகளை அறுப்பதை முற்­றாகத் தவிர்ந்து கொள்­வதும் பிற சம­யத்­த­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்கும் வகையில் உழ்­ஹிய்­யாவை முறை­யாக நிறை­வேற்­று­வதும் மிகவும் அவ­சி­ய­மாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli