Verified Web

எம் பி க்களின் சம்பள அதிகரிப்பு அவசியமற்றது

2018-08-14 05:27:01 Administrator

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சம்­ப­ளத்தை மேலும் அதி­க­ரிப்­பது தொடர்பில் ஆலோ­சிக்­கப்­ப­டு­வ­தா­னது பலத்த விமர்­ச­னங்­களைத் தோற்­று­வித்­துள்­ளது. இது தொடர்பில் அண்­மையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி , கட்சித் தலை­வர்­களின் உடன்­பாட்­டு­ட­னேயே அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது என பத்­தி­ரி­கை­களில் செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­து­போதும் அவ்­வா­றான எந்­த­வொரு முன்­மொ­ழிவும் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டு­மென்றும், அத்­த­கைய தீர்­மா­னத்­திற்கு தான் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்றும் தெரி­வித்­தி­ருந்தார். 

''கடந்த மூன்று வருட காலப்­ப­கு­தியில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அமைச்­சர்­களின் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களை அதி­க­ரிப்­ப­தற்கு அவ்­வப்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி என்ற வகையில் எனது சம்­ப­ளத்தை அதி­க­ரிப்­ப­தற்கு முன்­வைக்­கப்­பட்ட முன்­மொ­ழி­வு­க­ளையும் நான் உறு­தி­யாக நிரா­க­ரித்­து­விட்டேன்'' என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார். வாழ்க்கைச் செலவு அதி­க­ரிப்பு உள்­ளிட்ட பல்­வேறு பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு முயற்­சித்து வரு­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில், அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு பொருத்­த­மா­ன­தல்ல என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதற்­கி­டையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த 55 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கண்­கா­ணிப்பு எம்.பி.க்களாக நிய­மிக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்துக் கொடுப்­ப­ன­வாக மாதாந்தம் 2 இலட்சம் ரூபா மேல­தி­க­மாக வழங்­கப்­ப­டு­வ­தாக தற்­போது ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காமினி லொகுகே, தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் மேற்­கொண்ட விண்­ணப்­பத்­தி­ன­டிப்­ப­டை­யி­லேயே இந்த தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கு­வ­தற்­காக 2016 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. கடந்த அர­சாங்­கத்­திலும் இதே நடை­முறை பின்­பற்­றப்­பட்­ட­தா­கவும் அத­னையே தாமும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமைச்சர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு அர­சி­யல்­வா­திகள் பல்­வேறு வித­மான கொடுப்­ப­ன­வுகள் எனும் பெயரில் அனு­கூ­லங்­களைப் பெற்று வரு­கின்ற நிலையில் பொது மக்கள் மீது தொடர்ந்தும் வரிச்­சு­மையும் ஏனைய விலை­யேற்­றங்­களும் விதிக்­கப்­ப­டு­வது ஏற்றுக் கொள்­ளத்­தக்­கல்ல எனும் விமர்­ச­னங்­களும் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக மல்­வத்த பீடத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிரேஷ்ட பௌத்த மத­குரு அக்­கம்­பஹா தம்­மா­னந்த தேரர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எந்­த­வ­கை­யிலும் சம்­பள அதி­க­ரிப்பு வழங்கக் கூடாது எனக் காட்­ட­மாகத் தெரி­வித்­துள்ளார். நாட்டு மக்கள் கஷ்­டத்தில் இருக்­கின்ற நிலையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­காக அதிக பணம் வீண­டிக்­கப்­ப­டு­கி­றது. ஒரு நாள் பாரா­ளு­மன்ற அமர்­வுக்கு பல மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­ப­டு­கையில் எம்.பி.க்களோ அதில் பங்­கேற்­கா­தி­ருக்­கின்­றனர். இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு ஏன் அதிக சம்­பளம் வழங்­கப்­பட வேண்டும் என அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆற்றும் உரைகள் அறிவுபூர்வமானவையாக இருந்தன. இன்று அவ்வாறான உரைகளை எவரும் ஆற்றுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் தேரர் குறிப்பிட்டுள்ள விடயங்கள் யதார்த்தமானவையாகும். சமகால பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து போற்றத்தக்க சேவைகளை நாடு பெற்றுக் கொள்வதாக தெரியவில்லை.  அவ்வாறான நிலையில் அதிகரித்த கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை  என்பதே அனைவரதும் நிலைப்பாடாகும்.
-Vidivelli