Verified Web

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்த விவகாரம்: அறிக்கை ஷரீஆவுக்கு முரணானதா?

Safana Gul Begum

Counsel at Attorney-at-law

2018-08-13 01:50:23 Safana Gul Begum

2009ஆம் ஆண்டு நீதி­ய­மைச்­ச­ராக இருந்த  மிலிந்த மொர­கொ­ட­வினால் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப்  தலை­மையில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பி­லான முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்தக் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. கடந்த 9 வருட கடின உழைப்பின் பின்னர் இந்தக் குழுவின் அறிக்கை இவ்­வாண்டு ஜன­வரி மாதம் குழுவின் தலை­வ­ரினால் நீதி­ய­மைச்­ச­ருக்குக் கைய­ளிக்­கப்­பட்­டது.

கடந்த சில வாரங்­க­ளாக நாட்டின் முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரி­டையே இது தொடர்பில் பாரிய சர்ச்­சைகள் கிளம்­பி­யுள்­ளன. ஒரு சட்­டத்­த­ரணி என்ற ரீதி­யிலும் இக்­கு­ழுவின் ஒரு அங்­கத்­த­வ­ராக இருந்து  கடந்த 9 வரு­டங்­க­ளாக இவ்­வ­றிக்கை தயா­ரிப்­ப­தற்­காகப் பாடு­பட்­டவர் என்ற ரீதி­யிலும் இது தொடர்­பி­லான சில கருத்­துக்­களை முன்­வைக்க வேண்­டிய தலை­யாய சமூகக் கடமை ஒன்று எனக்கு இருக்­கின்­றது.

ஷரீஆ சட்­டத்தை மாற்­று­வ­தற்­கான முயற்சி நடை­பெ­று­கின்­றது என்ற தவ­றான சிந்­த­னை­யொன்று மக்கள் மத்­தியில் வேரூன்றி உள்­ளது. முதலில் இந்த சிந்­தனை அகற்­றப்­பட வேண்டும். இங்கு ஷரீஆ சட்­டத்தை மாற்­று­வ­தற்­கான முயற்­சிகள் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இலங்­கையில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தி­லேயே, இது தொடர்பில் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்ப்பு வழங்கி சமூ­கத்தை வழி­ந­டாத்­து­வ­தற்­கு­ரிய சட்ட சீர்த்­தி­ருத்­தங்­களை ஷரீ­ஆ­விற்­குட்­பட்ட வகையில் ஏற்­ப­டுத்­து­வதே இச்­சட்ட சீர்­தி­ருத்­தத்தின் நோக்கம் என்­பதை மக்கள் முதலில் உணர வேண்டும். ஷரீஆ சட்­ட­மா­னது எக்­கா­லத்­திற்கும் பொருத்­த­மா­னது என்ற உண்­மை­யையும் ஷரீஆ சட்­டத்தில் எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்­கு­மான சரி­யான தீர்வு தெளி­வாக வழங்­கப்­பட்­டுள்­ளது என்ற உண்­மை­யையும் யாராலும் மறுக்க முடி­யாது. இது தொடர்பில் சமூ­கத்­தி­லுள்ள மக்கள் மனதில் சரி­யான தெளிவு காணப்­பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு நீதி­ய­மைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்கை பற்­றியும் மக்கள் மத்­தியில் ஒரு தெளி­வின்மை காணப்­ப­டு­கின்­றது அல்­லது தெளி­வின்மை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பது யாராலும் மறுக்க முடி­யாத உண்­மை­யாகும். இதற்­குத்­தெ­ளி­வான சான்­றாக அமை­வது எஸ்.எம் அறிக்கை (S.M report), எப்.எம் அறிக்கை  (F.M report) என்று இரண்டு அறிக்­கை­க­ளாக சமூ­கத்­தி­லுள்ள மக்கள் மத்­தியில் பிழை­யான சிந்­த­னை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உண்­மை­யி­லேயே இவ்­வா­றான இரண்டு அறிக்­கைகள் கிடை­யாது. இரண்டு அறிக்­கைகள் எனில், இரண்டு குழுக்கள் நீதி­ய­மைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். நீதி­ய­மைச்­சினால் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் ஒரு குழுதான்  நிய­மிக்­கப்­பட்­டது. இந்தக் குழுவின் அறிக்­கைதான் இந்தக் குழுவின் தலை­வ­ரினால் நீதி­ய­மைச்­ச­ருக்குக் கைய­ளிக்­கப்­பட்­டது.

விடயம் என்­ன­வெனில் இவ்­வ­றிக்­கையில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட சில கருத்­துக்­களில் மாத்­திரம் குழுவின் உறுப்­பி­னர்­க­ளி­டையே வேறு­பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வே­று­பட்ட கருத்­துக்­களின் மீது குழு உறுப்­பி­னர்­க­ளி­டையே உடன்­பாடு காண்­ப­தற்குப் பல வரு­டங்­க­ளாக முயற்­சிகள் எடுக்­கப்­பட்டும், முடி­யாத சந்­தர்ப்­பத்தில் அந்­தச்­சில விட­யங்­களில் மாத்­திரம் குழு உறுப்­பி­னர்­க­ளி­டையே காணப்­பட்ட இரண்டு வித்­தி­யா­ச­மான கருத்­துக்­க­ளுடன் ஏனைய அனைத்து விட­யங்­க­ளிலும் ஏக­ம­ன­தான கருத்­துடன் இவை­ய­னைத்­தையும் உள்­ள­டக்­கிய ஒரு அறிக்கை நீதி­ய­மைச்­ச­ருக்கு, குழுவின் தலை­வ­ரினால் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்தில் மக்கள் மத்­தியில் தெளிவு காணப்­பட வேண்டும்.

இவ்­வ­றிக்­கையில் ஏக­ம­ன­தாக முன்­வைக்­கப்­பட்ட சிபார்­சு­களை விடுத்து இரண்டு கருத்­துக்­க­ளுடன் முன்­வைக்­கப்­பட்ட கருத்­துக்­களின் மீது அண்­மைக்­கா­ல­மாக சமூ­கத்தில் பாரிய கருத்து மோதல்­களும், வாதப் பிர­தி­வா­தங்­களும் நடை­பெ­று­கின்­றன. இது­தொ­டர்பில் சமூ­கத்தில் பாரி­ய­தொரு தெளி­வின்­மையும் காணப்­ப­டு­கின்­றது. ஆகவே, எவ்­வி­ட­யங்­களில் இந்த வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

1. நிலை­யான சட்டம்

2. காதி நீதி­மன்ற முறை­மையைச் சீர்­தி­ருத்­துதல்

3. பல­தார மணம்

4. திரு­ம­ணத்தைப் பதிவு செய்­தலும், வலியின் தேவைப்­பாடும்

5. திரு­மண வயது

6. மத்தா

7. காதி நீதி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் தோன்­றுதல்

என்ற விட­யங்­களில் குழுவின் உறுப்­பி­னர்­க­ளி­டையே இரண்டு வெவ்­வே­றான கருத்­துக்கள் காணப்­பட்­டன. இங்கு விளக்­கத்தை இல­கு­வாக்­கு­வ­தற்­காக மாத்­திரம் ஒரு கருத்­துப்­பி­ரி­வினை பிரிவு  A என்றும் மறு கருத்துப் பிரி­வினை பிரிவு B என்றும் நான் குறிப்­பி­டு­கின்றேன்.

நிலை­யான சட்டம் தொடர்பில் 'மத்ஹப்' (sect) என்ற விடயம் சம்­பந்­த­மாக இரண்டு கருத்­துக்கள் காணப்­பட்­டன.

பிரிவு A யின் கருத்­துக்­க­ளா­வன:

“தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் சட்­டத்தில் மத்ஹப் என்று பொருள்­கோடல் செய்­யப்­ப­டு­கின்ற “sect” என்ற பதம் இல்­லா­ம­லாக்­கப்­பட்டு, எல்லா மத்­ஹ­பு­க­ளையும் உள்­ள­டக்­கிய முஸ்லிம் சட்டம், பிரச்­சி­னை­க­ளுக்­கேற்ற சரி­யான தீர்­வினைப் பெறு­வ­தற்கு பிர­யோ­கிக்­கப்­பட வேண்டும்.” இத்­தி­ருத்தம் அர­சாங்­கத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்­லை­யாயின் பிரிவு A  ஆனது அதற்­குப்­ப­க­ர­மாகப் பின்­வரும் இரண்டு மாற்­றுக்­க­ருத்­துக்­க­ளையும் குறிப்­பிட்­டுள்­ளது. அவை­யா­வன இரு வெவ்­வே­றான மத்­ஹ­பு­க­ளினால் ஆளப்­ப­டு­கின்­ற­வர்­களின் திரு­ம­ணத்­தின்­போது அவர்­க­ளது திரு­மணம் தொடர்­பி­லான எல்லா விட­யங்­க­ளிலும் குறித்த ஒரு மத்­ஹ­பினால் ஆளப்­ப­டு­வ­தற்கு அவர்கள் இரு­வரும் பரஸ்­பரம் சம்­ம­திக்க வேண்டும். மற்­றைய கருத்து, திறத்­த­வர்கள் இரு­வரும் எந்த மத்­ஹ­பு­க­ளையும் சாரா­த­வர்­க­ளாக இருக்­கும்­போது அல்­லது இரு­வரும் வெவ்­வே­றான மத்­ஹ­பு­க­ளினால் ஆளப்­பட்டு, குறித்த ஒரு மத்­ஹ­பினால் இரு­வரும் ஆளப்­ப­டு­வ­தற்கு பரஸ்­பரம் சம்­ம­திக்­காத சந்­தர்ப்­பத்தில் குறித்­த­தொரு மத்­ஹ­பினுள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாமல் எல்லா மத்­ஹ­பு­களின் கோட்­பா­டு­க­ளையும் உள்­ள­டக்­கிய முஸ்லிம் சட்­டத்­தினால் ஆளப்­பட வேண்டும். இக்­க­ருத்­துக்­க­ளுக்­கு­ரிய ஷரீ­ஆவின் பார்வை ஆங்­கில அறிக்­கையின் 72ஆம் பக்­கத்­தி­லி­ருந்து 82ஆம் பக்கம் வரை பிரிவு A யினால் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

B பிரிவின் கருத்து என்­ன­வெனில், திறத்­த­வர்கள் இரு­வரும் தங்­க­ளது மத்­ஹ­பு­களைத் திரு­ம­ணத்­தின்­போது பிர­க­டனம் செய்ய வேண்டும். அவ்­வாறு பிர­க­டனம் செய்­ய­வில்­லை­யாயின் அதனைத் தீர்­மா­னிக்கும் அதி­காரம் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து ஆலோ­சனை சபைக்கு வழங்­கப்­பட வேண்டும்.

காதி நீதி­மன்ற முறை­மையைச் சீர்­தி­ருத்­துதல் என்ற தலைப்பின் கீழ் A பிரி­வி­ன­ருக்கும் B பிரி­வி­ன­ருக்­கு­மி­டையில் கருத்து வேறு­பாடு காணப்­ப­டு­கின்ற விடயம் பெண்கள் காதி நீத­வான்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டுதல் தொடர்­பி­லாகும்.

A பிரி­வினர் பெண்­களை காதி நீத­வான்­க­ளாக நிய­மிக்­கலாம் என்றும் B  பிரி­வினர் பெண்கள் காதி நீத­வான்­க­ளாக நிய­மிக்­கப்­படக் கூடாது என்றும் தங்­க­ளது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். பெண்கள் காதி நீத­வான்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டலாம் என்ற சிபார்சை முன்­வைத்­துள்ள A  பிரி­வினர் தங்­க­ளது கோரிக்­கையை ஷரீ­ஆவின் பார்­வையில் ஆங்­கில அறிக்­கையின் 64ஆம் பக்­கத்­தி­லி­ருந்து 72ஆம் பக்கம் வரை தெளி­வாக விளக்­கி­யுள்­ளனர்.

பல­தா­ர­மணம் தொடர்­பி­லான A  பிரி­வி­னரின் சிபார்சின் சாராம்­ச­மா­னது, பல­தா­ர­ம­ணத்தில் ஈடு­படும் ஒரு ஆணிற்கு எல்லா மனை­வி­ய­ரையும், பிள்­ளை­க­ளையும் போதி­ய­ள­விலும், நியா­ய­மான நீத­மான முறை­யிலும் கவ­னிப்­ப­தற்­கு­ரிய இய­லு­மையும் பொரு­ளா­தார ஆற்­றலும் உள்­ளதா என்­பதைக் கவ­னித்து, விசா­ரித்து அதன் பின்னர் பல­தா­ர­ம­ணத்­திற்­கான அனு­மதி காதி நீதி­மன்­றங்­க­ளினால் வழங்­கப்­பட வேண்டும். அவ்­வாறு தனது மனை­வி­ய­ரையும், பிள்­ளை­க­ளையும் நீத­மான முறையில் கவ­னிக்க ஆற்­ற­லில்­லாத ஆண்­க­ளுக்கு பல­தா­ர­மண அனு­மதி வழங்­கப்­ப­டக்­கூ­டாது. அவ்­வாறு காதி நீத­வா­னினால் அனு­மதி வழங்­கப்­ப­டாது நடை­பெ­று­கின்ற திரு­மணம் செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கப்­பட வேண்டும் என்று சிபார்சு செய்­துள்­ளனர். இதற்­கான ஷரீ­ஆவின் பார்­வை­யி­லான நியா­யங்கள் ஆங்­கில அறிக்­கையின் 107ஆம் பக்கம் முதல் 112ஆம் பக்கம் வரையில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

B பிரி­வி­னரின் சிபார்சு என்­ன­வெனில், பல­தா­ர­ம­ணத்­திற்கு ஷரீஆ ரீதியில் கார­ணங்கள் காணப்­ப­டு­கின்ற போதும், மனை­வி­யரைக் கவ­னிப்­ப­தற்கு போது­மான பொரு­ளா­தார வசதி இருக்­கின்ற போதும் பல­தா­ர­ம­ணத்­திற்கு காதி அனு­மதி வழங்­கலாம். அனு­மதி வழங்­காமல் பல­தா­ர­மணம் செய்­கின்ற ஆணுக்கு தண்­டப்­ப­ணமும், சிறைத்­தண்­ட­னையும் வழங்­கப்­பட வேண்டும். அத்­துடன் மனை­வியின் அனு­ம­தி­யின்றி கணவன் பல­தா­ர­ம­ணத்தில் ஈடு­ப­டும்­போது கண­வ­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்து கோரு­வ­தற்­கான அனு­மதி மனை­விக்கு வழங்­கப்­பட வேண்டும் என்­பன B பிரி­வி­னரின் சிபார்­சு­க­ளாகும்.

அடுத்த விடயம் திரு­ம­ணத்தை பதிவு செய்­தலும், வலியின் தேவைப்­பா­டு­மாகும். திரு­ம­ணத்தைப் பதிவு செய்­தலைப் பொறுத்­த­வ­ரையில் A பிரி­வினர் திரு­ம­ணத்தின் வலி­துத்­தன்மை, நிகாஹ்­விலும், பதி­விலும் தங்­கி­யி­ருக்க வேண்­டு­மெனக் கூறு­கின்ற அதே­வேளை B பிரி­வினர் பதிவை வலி­துத்­தன்­மைக்கு கட்­டா­ய­மாக்­க­வில்லை.

வலி சம்­பந்­த­மான விட­யத்தைப் பொறுத்­த­வ­ரையில் A பிரிவு திரு­மண வய­தை­ய­டை­யாத திறத்­தினர் அல்­லது திரு­மண வய­தை­ய­டைந்தும் ஏதேனும் இய­லா­மை­யினால் பாதிக்­கப்­பட்ட ஆண், பெண் இரு திறத்­த­வர்­க­ளுக்கும் திரு­மணப் பாது­கா­வலர் எனும் வலி அவ­சி­ய­மென்று கூறு­கின்ற அதே­வேளை B பிரி­வினர் எல்லாப் பெண்­க­ளி­னதும் திரு­ம­ணத்­திற்கு வலி அவ­சியம் எனக் கூறு­கின்றனர். A பிரி­வினர் தங்­க­ளது சிபார்­சு­க­ளுக்­கான காரண காரி­யங்கள் ஷரீஆ கண்­ணோட்­டத்தில் ஆங்­கில அறிக்­கையின்  82ஆம் பக்கம் முதல் 96ஆம் பக்கம் வரை காணப்­ப­டு­கின்­றது.

திரு­மண வய­தெல்­லையைப் பொறுத்­த­வ­ரையில் A பிரி­வி­னரின் சிபார்­சா­னது 18 வயதைப் பூர்த்­தி­ய­டை­யாத முஸ்­லிம்­களின் திரு­மணம் நிகழ்த்­தப்­ப­டவும் பதி­வு­செய்­யப்­ப­டவும் முடி­யாது எனக் கூறி அதற்­கான பின்­வரும் விதி­வி­லக்­கு­க­ளையும் சிபார்சு செய்­துள்­ளது. 18 வயது பூர்த்­தி­ய­டை­யாத சந்­தர்ப்­பத்தில் 16 வயது பூர்த்­தி­ய­டைந்­துள்­ள­போது அம்­முஸ்­லிமின் மேலான நல­னிற்­காகத் திரு­மணம் நடை­பெற வேண்­டு­மென்ற விட­யத்தில் நீதி­மன்றம் திருப்­தி­ய­டையும் பட்­சத்தில் அத்­தி­ரு­ம­ணத்தை நடாத்திப் பதிவு செய்­வ­தற்­கான அனு­ம­தியை நீதி­மன்றம் வழங்­க­லா­மெனக் கூறு­கின்­றது. A பிரி­வி­ன­ரது சிபார்­சு­க­ளுக்­கான கார­ண­கா­ரி­யங்கள் ஷரீஆ கண்­ணோட்­டத்தில் ஆங்­கில அறிக்­கையின் 97ஆம் பக்கம் முதல் 107ஆம் பக்கம் வரை காணப்­ப­டு­கின்­றது.

B பிரிவு ஆணிற்­கான திரு­மண வய­தெல்லை 18 ஆகவும் பெண்­ணிற்­கான திரு­மண வய­தெல்லை 16 ஆகவும் இருக்­க­வேண்­டு­மென்று சிபார்சு செய்யும் அதே­வேளை, அவ் வய­துக்கு கீழ்ப்­பட்­ட­வர்­களின் திரு­ம­ணத்­திற்கும் காதி நீதவான் தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் அனு­ம­திக்­கலாம் என்ற நெகிழ்வைத் தனது சிபார்சில் முன்­வைத்துள்­ளது.

கண­வனின் கொடுமை போன்ற தவ­றுகள் கார­ண­மாக ஒரு பெண் விவா­க­ரத்துக் கோரும்­போது அப்­பெண்­ணிற்கு இழப்­பீடு ஆணினால் வழங்­கப்­பட வேண்­டு­மென்று A பிரிவும், வழங்­கப்­ப­டத்­தே­வை­யில்­லை­யென B பிரிவும் சிபார்சு செய்­கின்­றது. இதற்­கான A பிரிவின் நியா­யங்கள் ஷரீ­ஆவின் கோணத்தில் ஆங்­கில அறிக்­கையின் 123 முதல் 130  வரை­யான பக்­கங்­களில் காணப்­ப­டு­கின்­றன.

காதி நீதி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் மூலம் ஆஜ­ரா­கு­வ­தற்­கான தேர்­வு­ரிமை திறத்­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என A பிரிவு சிபார்சு செய்யும் அதே­வேளை, அத்­தேர்­வு­ரிமை தடுக்­கப்­பட வேண்டும் என்றும், காதி நீதி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் திறத்­த­வர்கள் சார்பில் ஆஜ­ரா­கக்­கூ­டாது என்றும் B பிரிவு சிபார்சு செய்­கின்­றது. A பிரிவின் சிபார்­சு­க­ளுக்­கான கார­ணங்கள் ஆங்­கில அறிக்­கையின் 130 முதல் 136ஆம் பக்­கங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இது இவ்­வா­றி­ருக்க A பிரிவின் சிபார்­சுகள் ஷரீ­ஆ­விற்கு முரண்­பட்­ட­வை­யாக உள்­ளன என்றும் B பிரிவின் சிபார்­சுகள் ஷரீ­ஆ­விற்கு உட்­ட­பட்­ட­வை­யாக உள்­ளன என்றும் சமூ­கத்­திற்கு தவ­றாக விளக்­க­ம­ளித்து A பிரிவில் உள்ள சிபார்­சு­க­ளுக்கு சார்­பாகக் கையொப்­ப­மிட்­ட­வர்கள் மீது பாரிய பழி­யொன்று அண்­மைக்­கா­ல­மாகச் சுமத்­தப்­பட்டு வரு­வது நாம­னை­வரும் அறிந்த விடயம். அதே­வே­ளையில் இஸ்­லாத்தை ஒரு தீவி­ர­வாதப் போக்கில் அவ­தா­னிக்­காமல், அழ­கிய மார்க்­க­மான இஸ்­லாத்தின் ஷரீ­ஆச்­சட்­டத்தைப் பிக்­ஹு­டைய கண்­ணோட்­டத்தில் அவ­தா­னிக்­கின்ற இஸ்­லா­மிய அறி­ஞர்கள் பலர் A பிரிவின் மீது இடப்­பட்ட பழி அபாண்­ட­மா­ன­தென்றும், அச்­சி­பார்­சுகள் அனைத்தும் ஷரீ­ஆ­விற்கு உட்­பட்­ட­வையே என்றும் பல சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளி­னூ­டாகத் தமது கருத்­துக்­களை முன்­வைப்­பது  A பிரிவின் சிபார்­சு­க­ளுக்குச் சார்­பாகக் கையொப்­ப­மிட்ட எனக்கும் ஒரு பாரிய திருப்­தியை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

2003ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்­று­வரை பல பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு காதி நீதி­மன்றம் செல்­வ­தற்­கு­ரிய சட்ட ஆலோ­ச­னைகள் வழங்­கிய அனு­ப­வமும், காதிகள் சபை முதல் உயர் நீதி­மன்றம் வரை சட்­டத்­த­ர­ணி­யாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பி­லான  பல வழக்­கு­களில் வாதா­டிய அனு­ப­வமும் என்னை இந்தக் கையெ­ழுத்­தை­யிடத் தூண்­டி­யது. 2003ஆம் ஆண்­டி­லி­ருந்து 2013ஆம் ஆண்டு வரையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­ன­ணியின் சட்ட ஆலோ­ச­க­ராக இருந்து, காதி நீத­வான்­களைப் பற்றி யாருமே சிந்­திக்­காத காலத்தில் அவர்­க­ளைப்­பற்றிச் சிந்­தித்து, எவ்­வி­த­மான பயிற்­சி­க­ளு­மின்றி அவர்கள் பத­வியில் அமர்த்­தப்­ப­டு­வ­தனால் அவர்­களும் பாதிப்­புக்­குள்­ளாகி அவர்­க­ளினால் நிவா­ரணம் பெற வேண்­டி­ய­வர்­க­ளுக்கும் பாதிப்­பை­யேற்­ப­டுத்திப் பரி­த­வித்துக் கொண்­டி­ருந்த காதி நீத­வான்­களைப் பற்றி முதன் முதலில் சிந்­தித்­தது ஒரு பெண்கள் நிறு­வ­னமே முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி.

காதி நீத­வான்­க­ளுடன் வருடம் தோறும் கலந்­து­ரை­யா­டல்கள் நடத்தி, அவர்­க­ளுக்குப் பயிற்­சியை அளித்­தது அந்­நி­று­வ­னத்தின் காதி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் நிகழ்­வு­களின் பிர­தான வள­வா­ள­ராக சுமார் 10 வரு­டங்கள் சேவை­யாற்­றிய எனது அனு­ப­வமும் நீதி­ப­திகள் பயிற்சி நிலை­யத்தில் காதி நீத­வான்­க­ளுக்கு பயிற்சி அளித்த அனு­ப­வமும் என்னை இக்­கை­யெ­ழுத்­தை­யிடத் தூண்­டி­யது. நாட­ளா­விய ரீதியில் காதி நீதி­மன்­றங்கள் தொடர்­பிலும், முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் தொடர்­பிலும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­ன­ணி­யி­னாலும் பின்னர் மற்றும் சில நிறு­வ­னங்­க­ளி­னாலும் நடாத்­தப்­பட்ட பரா சட்­ட­வி­ய­லா­ளர்­களைப் பயிற்­று­விப்­ப­தற்­கான நிகழ்ச்­சித்­திட்­டத்தின் பயிற்­று­விப்­பா­ள­ராக இருந்து இன்­று­வரை அடி­மட்ட மக்­க­ளுக்கு சட்ட விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­கின்ற சந்­தர்ப்­பங்­களில் எனக்குக் கிடைக்­கப்­பெற்ற அனு­ப­வமும் என்னை இந்தக் கையெ­ழுத்­தை­யிட வைத்­தது.

இலங்­கையின் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற இடை­வெ­ளி­க­ளி­னாலும், ஓட்­டை­க­ளி­னாலும் காதி நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் ஒழுங்­காக நடை­பெ­றா­மை­யினால் கண்­ணீரும் கம்­ப­லை­யு­மாக பரி­த­விக்­கின்ற சமூ­கத்தின் கண்ணீர்க் காவி­யங்­களைக் கண்டும் கேட்டும் நான் பெற்ற வேத­னையின் வலி என்னை இக்­கை­யெ­ழுத்­தை­யிடத் தூண்­டி­யது.

இவ்­வ­றிக்­கையில் நான் உட்­பட A பிரி­வினால் கையொப்­ப­மி­டப்­பட்ட சிபார்­சுகள் எது­வுமே ஷரீ­ஆ­விற்கு முரண்­பட்­ட­வையோ  அப்­பாற்­பட்­ட­வையோ அல்ல. ஷரீ­ஆ­விற்­குட்­பட்ட காலத்தின் தேவைக்­கேற்ற நிவா­ர­ணங்­க­ளாகும்.

பல முஸ்லிம் நாடு­களின் சட்­டங்­களைப் பற்றி நாம் ஆராய்ந்தோம். நாட­ளா­விய ரீதி­யிலும், உல­க­ளா­விய ரீதி­யிலும் பல முஸ்லிம் அறி­ஞர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினோம். பல இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் நூல்­களை ஆராய்ந்தோம். அகில இலங்கை ஜம்­மி­யதுல் உல­மாவின் பத்வா குழு­வி­ன­ருடன் நாம் பல முறை யதார்த்­த­மான பிரச்­சி­னை­களை முன்­வைத்துக் கலந்­தா­லோ­சித்­துள்ளோம். அகில இலங்கை ஜம்­மி­யதுல் உல­மாவின் அலு­வ­ல­கத்­தி­லேயே எமது பல கூட்­டங்கள் நடை­பெற்­றன என்­பதை நான் நன்­றி­யுடன் நினைக்­கின்றேன்.  பல இஸ்­லா­மிய அறி­ஞர்­க­ளு­டனும், உல­மாக்­க­ளு­டனும் ஆலோ­சனை செய்­துள்ளோம். ஜாமிஆ நளீ­மியா கலா­பீ­டத்­திற்குச் சென்று கலந்­து­ரை­யா­டல்கள் நடாத்­தினோம். இதன் பின்னர் தான் நாம் எமது கருத்­துக்­களைச் சிபார்­சு­க­ளாக முன்­வைத்­துள்­ள­போது ஷரீ­ஆ­விற்கு முர­ணான கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ள­தாக எமது அடிப்­படை ஈமானையே கேள்­விக்­குட்­ப­டுத்திக் குற்றம் சுமத்­து­வது மிகவும் பார­தூ­ர­மான செய­லாகும் என்­பதை அனை­வரும் உணர வேண்டும்.            

முஸ்லிம் விவாக விவா­க­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னைகள் தோன்றும் போது, அப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வைக் காணும் விட­யத்தில் ஒரு குறிப்­பிட்ட மத்­ஹ­பு­டைய கோட்­பாட்­டினுள் மாத்­திரம் தீர்­வுக்­கான வழி­மு­றை­களைத் தேடு­வது என்ற மட்­டுப்­பாட்டை விதிக்­காமல் எல்லா மத்­ஹ­பு­க­ளி­னதும் கருத்­துக்­க­ள­டங்­கிய முஸ்லிம் சட்­டத்தின் பார்­வையில் பர­வ­லான வழி­மு­றை­களில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வை நாடு­வதும், அத்­தீர்ப்­புக்­கான வழி­களில் பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வதில் கூடி­ய­ளவு நன்மை பயக்­கக்­கூ­டிய வழி­வகை எதுவோ அதைக்­க­டைப்­பி­டிப்­ப­தற்கு உரிமை வழங்­கு­வதும் எவ்­வாறு ஷரீ­ஆ­விற்கு முர­ணாகும்?

 கட்­டா­ய­மாக ஒரு மத்­ஹ­பினால் ஆளப்­ப­டு­ப­வர்கள் என்று பிர­க­டனம் செய்­யப்­ப­டவே வேண்டும் என்றும் அவ்­வா­றின்றி அதற்­கு­ரிய தேர்­வு­ரிமை வழங்­கப்­ப­டு­வது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என்றும் கரு­தினால் அதனை ஆத­ரிக்கும் வகையில் இலங்கை மக்கள் பெரும்­பான்­மை­யானோர் ஷாபி மத்­ஹ­பினால் ஆளப்­ப­டு­ப­வர்­களே என்ற கருத்­தையும் முன்­வைக்­கும்­போது ஷாபி மத்­ஹபைத் தவிர ஏனைய மத்­ஹ­புகள் ஷரீ­ஆ­விற்கு முர­ணா­ன­வையா? என்ற பகுத்­த­றி­வுடன் கூடிய கேள்வி பகுத்­த­றி­வு­டைய ஒவ்­வொரு மனி­த­னுக்கும் நிச்­ச­ய­மாக எழும்.

உண்­மை­யி­லேயே அறிக்­கையின் சிபார்சில் என்ன கூறப்­பட்­டுள்­ளது என்­பதை அறி­வதைத் தவிர்த்து தவ­றான வழியில் பொருள்­கோடல் செய்து ஷரீ­ஆ­விற்கு முர­ணான கருத்து முன்­வைத்­துள்­ளனர் என்று மக்கள் மத்­தியில் பிழை­யான தக­வல்­களைப் பரப்­பு­வது எந்­த­வி­தத்தில் நியா­ய­மாகும் என்­ப­தனை மக்­களே முடி­வு­செய்ய வேண்டும். சட்டம் மக்­களை வழி­ந­டாத்­து­வ­தற்கும், மக்­க­ளிற்­கான கட்­டுக்­கோப்­பான வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்­க­வுமே ஆக்­கப்­பட வேண்டும். அச்­சட்­ட­மா­னது ஷரீ­ஆ­விற்கு முர­ணாக அமை­யக்­கூ­டாது என்­பதில் யாருக்கும் மாற்­றுக்­க­ருத்­துக்கள் கிடை­யாது. ஆனால் ஒரு மத்­ஹ­பினுள் மாத்­தி­ரமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டுத் தீர்­வு­களைத் தேடாமல் ஷரீ­ஆ­விற்கு முர­ணா­காத, ஷரீ­ஆ­விற்கு உட்­பட்ட முஸ்லிம் சட்­டத்­தினுள் தீர்­வு­காண வழி­வ­குக்க வேண்­டு­மென்­பதில் எந்த இடத்தில் ஷரீ­ஆ­வி­லி­ருந்து இவ்­வு­றுப்­பி­னர்கள் வில­கி­யுள்­ள­தாகக் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்­பது புரி­யாத புதி­ரா­கவே இருக்­கின்­றது.

பெண்கள் காதி நீத­வான்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டலாம் என்ற சிபார்சு ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என்­பது அடுத்­த­தொரு வாத­மாகும். எமது அறிக்­கையில் பெண்கள் காதி நீத­வான்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­ன­தல்ல என்ற விட­யத்தை நாம் இஸ்­லா­மியக் கோட்­பா­டு­களின் அடிப்­ப­டை­யிலும், ஷரீ­ஆவின் பார்­வை­யிலும் தெளி­வாக முன்­வைத்­துள்ளோம். இதனை அறிக்­கையில் பார்க்­கலாம். அத்­துடன் நம் நாட்டைச் சேர்ந்­த­வர்கள் உட்­பட பல இஸ்­லா­மிய அறி­ஞர்கள் பெண்கள் காதி நீத­வான்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வது ஷரீ­ஆ­விற்கு முர­ணான விட­ய­மல்ல என்று கார­ண­கா­ரி­யங்­க­ளுடன் நிரூ­பித்­துள்ள உண்மை நம் அனை­வரும் அறிந்த விட­யமே. இதனைக் கருத்­திற்­கொண்­ட­வாறே இது தொடர்பில் யதார்த்­தத்தை ஆராய்­வோ­மானால், பல முஸ்லிம் நாடுகள் ஷரீஆ சட்­டத்தை பின்­பற்­று­கின்ற முஸ்லிம் நாடுகள் பெண்­களைக் காதி நீத­வான்­க­ளாக நிய­மித்­துள்­ளார்கள் எனில் அந்­நா­டுகள் அனைத்­துமே ஷரீ­ஆ­விற்கு முர­ணாகச் செல்­கின்ற பாரிய தீமையைச் செய்­கின்­ற­னவா என்ற கேள்வி எழு­கின்­றது. நிச்­ச­ய­மாக அப்­படி இருக்க முடி­யாது. அது யதார்த்­தத்­திற்கு முற்­றிலும் மாறு­பட்ட விட­ய­மாகும்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் முஸ்லிம் பெற்­றோரின் பிள்­ளை­களின் பாது­காப்­பு­ரிமை தொடர்­பி­லான வழக்­கு­க­ளிற்­கு­ரிய நியா­யா­திக்­கங்கள் காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு இல்லை. மாவட்ட நீதி­மன்­றங்­க­ளுக்கே உண்டு. மாவட்ட நீதி­மன்­றங்கள் முஸ்லிம் சட்டக் கோட்­பா­டு­களின் அடிப்­ப­டையில் இப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை வழங்­கு­கின்­றன.

அம்­மா­வட்ட நீதி­பதி ஒரு பெண்­ணாக இருந்தால் அப்பெண் நீதி­பதி தீர்ப்பு வழங்­கினால், அத்­தீர்ப்பு ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என வாதாடப் போகின்­றோமோ? முஸ்லிம் மரண சாச­ன­மில்லா வழி­யு­ரிமை தொடர்­பி­லான வழக்­குகள் மாவட்ட நீதி­மன்­றத்தின் நியா­யா­திக்­கத்­திற்­குட்­பட்­டவை. முஸ்லிம் மரண சாச­ன­மில்லா வழி­யு­ரிமைச் சட்­டத்தைப் பின்­பற்றி மாவட்ட நீதி­ப­தி­யினால் இத்­தீர்ப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது. அம்­மா­வட்ட நீதி­பதி ஒரு பெண் நீதி­ப­தி­யாக இருந்தால் அப்பெண் நீதி­பதி தீர்ப்பு வழங்­கிய கார­ணத்­தினால் அத்­தீர்ப்பு ஷரீ­ஆ­விற்கு முரண்­பட்­டது என நாம் வாதா­டப்­போ­கின்­றோமா? முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பி­லான விட­யங்­க­ளுக்­கு­ரிய நீதி­மன்ற நியா­யா­திக்­கக்­கட்­ட­மைப்பு பின்­வ­ரு­மாறு செல்­கின்­றது. காதி நீதி­மன்றம், காதிகள் சபை, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், உயர் நீதி­மன்றம். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பி­லான மேன்­மு­றை­யீ­டு­களின் விசா­ர­ணைகள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­திலும், உயர் நீதி­மன்­றத்­தி­னாலும் பெண் நீதி­ய­ர­சர்­க­ளினால் விசா­ரணை செய்து தீர்ப்­ப­ளிக்­கப்­படும் போது அது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என வாதா­டப்­போ­கின்­றோமா? முடி­யாது. அவ்­வாறு வாதாட வேண்­டிய அவ­சி­ய­மு­மில்லை. ஏனெனில் அது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது அல்ல. ஏனெனில் எக்­கா­லத்­திற்கும் எச்­சந்­தர்ப்­பத்­திற்கும், எச்­சூழ்­நி­லைக்கும் எல்லா மனி­தர்­க­ளுக்கும் ஏற்ற ஒன்­றுதான் ஷரீஆ சட்டம். அதனைத் தவ­றாகப் பொருள்­கோடல் செய்து பாமர மக்­களைத் தவ­றாக வழி­ந­டாத்­து­வ­தி­லி­ருந்து நம்­ம­னை­வ­ரையும் எல்லாம் வல்ல அல்­லா­ஹுத்­த­ஆலா காப்­பாற்ற வேண்டும்.

பல­தா­ர­ம­ணத்­திற்கு இஸ்லாம் அனு­மதி அளித்­துள்ள போதிலும் ஒரு­தார மணத்­தையே ஆத­ரித்­துள்­ளது என்­பதை நாம் யாரும் மறுக்­க­மு­டி­யாது. தம் மனை­வியர் மத்­தியில் நீத­மாக நடப்­ப­தற்கு ஆற்­றல்­பெற்ற ஆண்­க­ளுக்கு மாத்­தி­ரமே இஸ்லாம் பல­தார மணத்தை  அனு­ம­தித்­துள்­ளது. தற்­போ­துள்ள சட்­டத்தில் பல­தா­ர­மணம் தொடர்பில் எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி அனு­மதி வழங்­கக்­கூ­டிய நெகிழ்­வுத்­தன்மை காணப்­ப­டு­வ­தனால், அந்­நெ­கிழ்­வுத்­தன்மை துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வதை காதி நீதி­மன்­றங்­க­ளுக்கும், காதிகள் சபைக்கும் சென்­று­பார்த்தால் மாத்­தி­ரமே அறி­ய­லா­மே­யொ­ழிய உயர்­மட்­ட­மொன்றில் அமர்ந்­து­கொண்டு பல­தா­ர­மணம் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­ட­வில்லை என்று சூளு­ரைப்­பது மிகவும் தவ­றா­ன­தொரு விட­ய­மாகும்.

மனை­வியும், பிள்­ளை­களும் அடிப்­படை வச­திகள் எது­வு­மின்றி பரி­த­விக்கும் நிலையில் அதற்­கான வச­தி­களைச் செய்து கொடுக்க வேண்­டிய தகப்­பனோ, கண­வனோ தனது கட­மையைச் செய்­யத்­த­வறி அவர்­களைக் கைவிட்டு பல­தா­ர­மணம் எனும் தனது உரி­மையை மாத்­திரம் சரி­யாகப் பிர­யோ­கித்துக் கொண்டு செல்­வ­தனால் குடும்­பங்கள் பரி­த­வித்துக் கொண்­டி­ருக்கும் பரி­தா­ப­க­ர­மான நிலையை அடி­மட்ட சமூ­கத்­தி­லி­ருந்து கண்­கூ­டாக அவ­தா­னிக்க வேண்­டு­மே­யொ­ழிய உயர்­மட்­டத்­தி­லி­ருந்து கனவு காணக் கூடாது.

பல­தா­ர­ம­ணத்தைச் சட்­டத்­தி­லி­ருந்து அகற்­று­வ­தற்­காகச் சிபார்சு முன்­வைக்­கப்­பட்­டி­ருந்தால், ஷரீ­ஆ­விற்கு முர­ணாக சமூ­கத்­தினை திசை­தி­ருப்­பு­கி­றார்கள் என்று அடித்துக் கூறலாம். ஆமோ­திக்­கின்றோம். ஆனால்  மனை­வி­ய­ரி­டையே நீத­மாக நடப்­ப­தற்கு வேண்­டிய எல்லா நிபந்­த­னை­களும் பூர்த்­தி­செய்­யப்­பட்­டுள்­ளதா என்­ப­தனை அனைத்து திறத்­த­வர்­க­ளையும் அழைத்து தகுந்த விசா­ர­ணை­களை செய்­வ­தற்கும் அதன் பின்னர் அனு­ம­தியை வழங்­கு­வ­தற்கும், அனு­ம­தியை மறுப்­ப­தற்­கு­மான அதி­கா­ரத்தைக் காதி நீதி­மன்­றத்­திற்கு வழங்கி, பல்­தா­ர­மண உரிமை துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வதைத் தடுப்­ப­தற்­கான சிபார்­சு­களை முன்­வைத்தால் அவை ஷரீ­ஆ­விற்கு முர­ணா­ன­வையா? சமூ­கத்தைச் சீர்­கேட்­டி­லி­ருந்து தடுப்­ப­தற்­காக ஷரீ­ஆ­விற்கு உட்­பட்ட நிபந்­த­னை­களை உள்­ள­டக்கிச் சட்­டத்தைத் திருத்­து­வது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என்று கோஷ­மெ­ழுப்­பப்­பட்டால் எமது சமு­தா­யத்தை நாம் எந்­நி­லையை நோக்கி இட்டுச் செல்ல எத்­த­னிக்­கின்றோம் என்­பதைச் சிந்­திக்க வேண்டும்.   

திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டு­வதை வலி­தான திரு­ம­ணத்­திற்­கு­ரிய ஒரு தேவைப்­பா­டாக ஆக்­கினால் நெறி­மு­றை­யற்ற முறையில் பிறந்த பிள்­ளை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் என்ற வாதம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­த­தொன்­றாகும். பதிவு செய்­யப்­ப­டு­வதைத் திரு­ம­ணத்தின் வலி­து­ட­மைக்கு ஏற்­பு­டை­ய­தான கார­ண­மாக்­கினால் அது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என்ற கோஷத்தை எவ்­விதக் கார­ணத்தைக் கொண்டும் நியா­யப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

நிகாஹ் இன்றிப் பதிவை மாத்­திரம் தேவைப்­பா­டாக்­கு­கின்­றோ­மென்றால் அது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­ன­துதான். அதில் மறு­க­ருத்து கிடை­யாது. ஆனால் இங்கு நிகாஹ்­வுடன் சேர்த்துப் பதி­வையும் கட்­டா­ய­மாக்க வேண்­டு­மென்றே சிபார்சு செய்­யப்­ப­டு­கின்­றது.  வாய்­மொழி மூலம் கூறப்­ப­டு­கின்ற ஈஜாப் கபூலை, எழுத்­திலும் உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரு­வ­துதான் பதிவைக் கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தாகும். காணிக் கைமாற்­றங்­களின் வாக்­கு­று­தி­க­ளுக்கு வாய்­மொ­ழியில் நம்­பிக்­கை­யில்­லாமல் எழுத்­து­மூலம் பதிவு செய்­யவே வேண்டும் என்று கட்­டா­யப்­ப­டுத்­து­கின்றோம். வெறும் காணிக்கு இந்தப் பாது­காப்பு என்றால் வாழும் வாழ்க்­கைக்கு எந்­த­ளவு பாது­காப்பு வேண்டும். ஏன் இதனை சிந்­திக்கத் தவ­று­கின்றோம். திரு­மணம் பதிவு செய்­யப்­ப­டு­வதைக் கட்­டா­ய­மாக்­கினால் நெறி­மு­றை­யற்ற பிள்­ளை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் என அச்சம் கொள்ளும் நாம், பதி­வின்­மையின் கார­ண­மாகத் திரு­ம­ணமே இல்­லை­யென்று தப்­பித்­துக்­கொள்­வ­த­னூ­டாக பிள்­ளை­களின் நெறி­மு­றைத்­தன்­மை­யையே கேள்­விக்­குட்­ப­டுத்­து­கின்ற சீர்­கேட்டை எப்­படித்; தடுப்­பது? சிந்­திக்க மாட்­டோமா? பதி­வின்­மையை தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக்­கினால் மாத்­திரம் போது­மென்­றி­ருந்தால் அத்­தண்­ட­னையை யார் பெற்றுக் கொடுப்­பது? எப்­போது பெற்­றுக்­கொ­டுப்­பது? குடும்பம் சந்­தோ­ச­மாக வாழ்­கின்­ற­போது இப்­பி­ரச்­சினை எழாது. ஆனால் பிரச்­சினை ஒன்று வரும்­போ­துதான் பதிவு பற்­றிய எண்ணம் தோன்றும். அப்­போது யார் யாரைக் குற்றம் சுமத்­து­வது. கண்­கெட்ட பின்னர் சூரிய நமஸ்­காரம் என்ற கதை­போல்தான் ஆகி­விடும். இந்­நிலை சமூ­கத்தில் தோன்­று­வ­தற்கு இட­ம­ளிக்­காது தவிர்த்து சமூ­கத்தைச் சீர்­கேட்­டி­லி­ருந்து காப்­பது எவ்­வாறு ஷரீ­ஆ­விற்கு முர­ணாகும்?

வலியின் தேவைப்­பாடு தொடர்­பி­லான A பிரிவின் சிபார்சு ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என மார்­தட்­டு­ப­வர்கள் ஹனபி மத்­ஹபின் பிர­காரம் வலியின் தேவைப்­பாடு அவ­சி­ய­மில்லை என்று B பிரிவின் அறிக்­கை­யிலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்ற உண்­மை­யையும் கவ­னத்தில் எடுக்க வேண்டும். இருந்­த­போ­திலும் வலியின் தேவைப்­பாடு அவ­சியம் என்ற B பிரிவின் சிபார்சை ஆத­ரிப்­ப­வர்கள், ஹனபி மத்ஹப் ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என்று வாதா­டு­கின்­றார்­களா? என்ற கேள்வி பகுத்­த­றி­வுள்ள அனை­வ­ருக்கும் நிச்­ச­யா­மாக எழும்.

திரு­மண வய­தெல்­லையை நிர்­ண­யிப்­பதை எதிர்த்து வாதி­டு­ப­வர்கள், தகப்­ப­னையும், ஆண் சகோ­த­ரர்­க­ளையும் இழந்த நிலையில் உள்ள ஒரு குடும்­பத்தில் முதல் பிள்­ளைக்குத் திரு­மணம் செய்து ஒரு ஆணை வீட்­டுக்குள் எடுப்­பதன் மூலம் ஆண் துணை­யொன்றைப் பாது­காப்­புக்­காகப் பெற்­றுக்­கொள்­வ­தா­கவும், அநா­த­ர­வான பிள்­ளைகள் பாலியல் வன்­முறை போன்ற வன்­மு­றை­க­ளி­லி­ருந்து தடுப்­ப­தற்கு பால்ய திரு­மணம் வழி­கோலும் என்­பன போன்ற கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர்.

பெண் குழந்தை தனது கண­வனின் ஆசா­பா­சங்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்­கா­மை­யினால் பல முறை­கே­டான சம்­ப­வங்கள் நடை­பெ­று­வதை  அடி­மட்ட சமூ­கத்­திற்குச் சென்று பார்த்தால் தெரியும். பெண் குழந்தை ஒன்று தான் தனது திரு­மண வாழ்க்­கைக்குத் தயா­ரா­காத நிலையில் திரு­மண பந்­தத்­தினுள் நுழைக்­கப்­பட்­ட­தனால் பொறு­மை­யாக அக்­கு­ழந்­தையைக் கையா­ள்வ­தற்கு பொறு­மை­யில்­லாமல் கணவன் கைவிட்டுச் சென்ற நிலையில் பல குழந்­தைகள் வாழா­வெட்டி என்று பட்டம் சூட்­டப்­பட்டுப் பரி­த­விக்கும் நிலையை மேலே­யி­ருந்து அவ­தா­னித்தால் எந்த வகை­யிலும் புரி­வ­தற்கு வாய்ப்­பில்லை. அடி­மட்­டத்­தினுள் ஊடு­ருவிப் பார்க்க வேண்டும். பாது­காப்பு என்ற ரீதியில் சமூ­கத்தை கிணற்றில் தள்­ளி­விடக் கூடாது என்ற தலை­யாய பொறுப்பு எமது சமூ­கத்தில் உள்ள அனை­வ­ருக்கும் இருக்க வேண்டும்.

குழந்­தை­களின் குழந்தை என்ற எண்­ணமும் சிந்­த­னையும், உரி­மையும் பறிக்­கப்­பட்டு அவர்­க­ளது கல்­விக்­கான உரி­மைகள் மறுக்­கப்­பட்டு அவர்­களை கஷ்­டத்­திற்கும் துன்­பத்­திற்கும் இட்டுச் செல்­வது என்ன நியாயம். வெற்­றிக்­கொடி நாட்­டிய பால்ய திரு­ம­ணங்­களின் எண்­ணிக்­கையை விடத் தோல்­வியைத் தழு­வி­ய­வற்றின் எண்­ணிக்­கையே அதிகம் என்­பது மறுக்­க­மு­டி­யாத உண்மை. பால்ய திரு­ம­ணங்கள் சமூ­கத்தில் அரு­கிக்­கொண்டு வரு­கின்­றது என்ற சிந்­தனை உண்­மையில் வெறும் மாையயே தவிர வேறில்லை. சமு­தா­யத்­தினுள் ஊடு­ரு­விப்­பார்த்தால் உண்மை விளங்கும். பெண்­க­ளி­னதும், குழந்­தை­க­ளி­னதும் உரி­மை­களை முதன் முதலில் காப்­பாற்­றிய மார்க்கம் இஸ்லாம். அதன் கோட்­பாட்டை புறக்­க­ணிக்­காது காலத்தின் தேவைக்­கேற்ற வகையில் சீர்­தி­ருத்­தங்கள் செய்­வது எவ்­வாறு அதற்கு முர­ணாகும்?

ஒரு கண­வனின் தீராத கொடுமை தாங்­க­மு­டி­யாமல் அம்­ம­னைவி கண­வ­னி­ட­மி­ருந்து விவா­க­ரத்துப் பெறு­கையில் கண­வனின் அத்­த­வறை நிரூ­பிக்கும் பட்­சத்தில் அவ்­வி­வா­க­ரத்­திற்கு முழுப்­பொ­றுப்­பு­தா­ரி­யு­மான அக்­க­ண­வ­னி­ட­மி­ருந்து, எவ்­வி­தக்­குற்­ற­மு­மி­ழைக்­காத நிலையில் நிர்க்­க­திக்­குள்­ளாக்­கப்­ப­டு­கின்ற அம்­ம­னை­விக்கு நட்­ட­ஈடு பெற்றுக் கொடுத்து அம்­ம­னை­வியின் எதிர்­கால வாழ்க்­கைக்கு வழி­ய­மைத்­துக்­கொ­டுப்­பது ஷரீ­ஆ­விற்கு முர­ணா­னது என்றால்  அந்த அபலைப் பெண்ணின் நிலை என்ன?

தனது கண­வ­னாக வாழ்ந்த ஒரு ஆணி­ட­மி­ருந்து, தன்­மீது எந்த தவ­று­மற்ற நிலையில் முழுத்­த­வ­றிற்கும் அந்தக் கண­வனே பொறுப்­பு­தா­ரி­யாக உள்ள நிலையில், திரு­மண வாழ்க்கை பற்­றிய தனது கன­வு­க­ளெல்லாம் தொலைந்து எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள அந்த ஏழைப் பெண்­ணிற்கு அக்­க­ண­வ­னி­ட­மி­ருந்து நட்­ட­ஈடு பெற்றுக் கொடுப்­பது தவறா? வாழ்­வ­தற்கு வழி­யற்று நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டுள்ள நிலையில், அந்­நிர்க்­க­திக்குக் கார­ண­மாக இருந்த அந்­தப்­பெண்ணின் கண­வ­னி­ட­மி­ருந்து நட்­ட­ஈட்டைப் பெற்­றுக்­கொ­டுத்து அம்­ம­னை­வியின் எதிர்­கால வாழ்க்­கையை ஒழுங்­க­மைத்­துக்­கொ­டுப்­பது ஷரீ­ஆ­விற்கு முர­ண­னதா? நாம் சிந்­திக்க வேண்டும்.

காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்குச் சட்­டத்­த­ர­ணிகள் தோன்­று­வதை அனு­ம­தித்தால் அதனால் பெண்­க­ளுக்கு பாரிய பிரச்­சி­னைகள் ஏற்­படும் என்றும் பொரு­ளா­தார ரீதியில் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்குப் பணம் செலுத்­து­வதில் பெண்கள் சிர­மங்­களை மேற்­கொள்­வார்கள் என்றும் இதனால் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் பிரிவு 74 ஐ அதா­வது சட்­டத்­த­ர­ணிகள் காதி­நீ­தி­மன்­றத்­திற்குத் தோன்­று­வதை தடுக்கும் சட்­டத்தில் எவ்­வித மாற்­றமும் கொண்­டு­வ­ரப்­ப­டக்­கூ­டா­தென B பிரி­வினர் தமது சிபார்­சு­களை முன்­வைத்­துள்­ளனர்.

இச்­சி­பார்­சு­களை ஆத­ரிக்கும் வகையில் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்ள விமர்­ச­னங்­களில், A பிரி­வினர் காதி­நீ­தி­மன்­றத்­திற்கு சட்­டத்­த­ர­ணிகள் தோன்ற வேண்டும் என்று சிபார்சு செய்­கின்­றார்கள் என்றும், 'சில பெண்கள் தங்­களை மறைத்­துக்­கொண்டு அப்­பாவிப் பெண்­களைப் பாதையில் இறக்கி விட்டு வேடிக்கை பார்க்­கின்­றார்கள் என்றும் தங்­க­ளது எதிர்­கால வரு­மா­னத்­திற்­கு­ரிய வழி­களை அமைத்துக் கொள்­கின்­றார்கள்” என்றும் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளனர். காதி­நீ­தி­மன்­றத்­திற்கு சட்­டத்­த­ர­ணிகள் தோன்­று­வதை ஆத­ரித்து சிபார்சு செய்த உறுப்­பி­னர்­களின் சிபார்சு எவ்­வாறு அமைந்­துள்­ளது என்­ப­தனை ஆழ­மாகத் தெரிந்த பின்னர் தான் இவர்கள் இவ்­வாறு விமர்­சனம் செய்­கி­றார்­களா? என்­பது இங்கு ஒரு கேள்­விக்­கு­றி­யாகும்.

அக்­குழு உறுப்­பி­னர்­களின் சிபார்சு ஆனது 'இந்தச் சட்­டத்­திலோ அல்­லது இந்­தச்­சட்­டத்­திற்கு ஏற்­பு­டைத்­தான அட்­ட­வ­ணை­யிலோ குறிப்­பிட்டு ஏதேனும் மாறு­பா­டாகக் குறிப்­பி­டப்­ப­டாத வரையில், ஒவ்­வொரு திறத்­த­வரும் காதி நீதி­மன்­றத்­திலோ அல்­லது காதிகள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­திலோ தங்­க­ளது வழக்­கு­க­ளுக்கு தாங்­க­ளா­கவோ அல்­லது தங்­க­ளது சட்டப் பிர­தி­நி­தி­க­ளி­னூ­டா­கவோ ஆஜ­ரா­கலாம்".

இங்கு சட்­டத்­த­ர­ணிகள் கட்­டாயம் காதி நீதி­மன்­றத்தில் தோன்ற வேண்­டு­மென்று சிபார்சு செய்­யப்­ப­ட­வில்லை, தேர்­வு­ரி­மையே வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நாட்டின் எல்லாச் சட்­டங்­க­ளையும் போன்று முஸ்லிம் விவாக விவா­க­ரத்­துக்­கா­கவும், 1951 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் நடைமுறையிலுள்ளது. ஏனைய சட்டங்களைப் போல இச்சட்டத்திற்கும் நிலையான சட்டமும் நடைமுறைச்சட்டமும் உள்ளது.

காதிநீதிமன்றத்திலிருந்து செய்யப்படும் மேன்முறையீடு காதிகள் சபை மற்றும் இலங்கையின் பொது நீதிமன்றங்களான மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அதே போன்று வலியுறுத்தற் கட்டளைகள் நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அவற்றின் மேன்முறையீடுகள் மேல் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்று இலங்கை நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள் வரையிலும் இவ்வழக்குளின் தொடர் கொண்டு செல்லப்படுகின்றன. இவையனைத்திற்கும் முதல்நிலை நீதிமன்றம் காதி நீதிமன்றமே.

"வழக்கு நிகழ்வுகள் தொடர்பான வினாக்கள் முதல்நிலை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்படாவிடின் மேன்முறையீட்டில் முதன்முதலாகக் கேள்விக்குட்படுத்தப்பட முடியாது" என்பது இந்நாட்டின் பொதுவான சட்ட விதி என்பது சட்டம் படித்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆகவே, சட்ட அறிவு எதுவுமேயில்லாத திறத்தவர்கள் மாத்திரம் முதல்நிலை நீதிமன்றமான காதி நீதிமன்றத்தில் தோன்றுகின்றபோது ஏற்படுகின்ற சில தவறுகள் இறுதி வரையில் திருத்தப்பட முடியாத துரதிர்ஷ்ட நிலை உண்டாவதைத் தடுக்கும் முகமாகவே, காதி நீதிமன்றத்திலும் சட்டத்தரணிகள் தோன்றுவதற்குரிய தேர்வுரிமையை சிபார்சு செய்த உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். முதல்நிலை நீதிமன்றத்தில் (காதி நீதிமன்றத்தில்) அறியாமல் விடப்படுகின்ற தவறுகளினால் மேன்முறையீடுகளில் அநியாயமாகத் தோல்விக்குட்படுகின்ற வழக்குகளின் வரலாறுகள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் காதிகள் சபை முதல் உயர் நீதிமன்றம் வரை வாதாடச் செல்கின்ற சட்டத்தரணிகளுக்கு மாத்திரம் தான் அறியக்கிடைக்கின்ற துரதிர்ஷ்டங்கள்.

மேலும், பண உதவிகள் எனும்போது சட்ட உதவி ஆணைக்குழு நாடாளாவிய ரீதியில் தொழிற்படுகின்றது. இலவச சட்ட உதவிகள் வழங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் நாடாளாவிய ரீதியில் காணப்படுகின்றன. அது மாத்திரமல்லாமல் திறத்தவர்களின் வசதிக்கேற்ப தங்களது ஊதியத்தின் அளவுகளிலும் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுபவர்களாகவும், தேவையேற்படும் போது இலவசமாகவே சேவையாற்றுபவர்களாகவும் பல சட்டத்தரணிகள் உள்ளனர் என்பதனை பலரும் அறியாமல் இருப்பது இச்சமூகத்தின் துரதிர்ஷ்டமே.

தேவையேற்படும் பட்சத்தில், திறத்தவர்களுக்குக் காதி நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடாகத் தோன்றுவதற்குரிய தேர்வுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற சிபார்சு எவ்வாறு ஷரீஆவிற்கு முரணாகும்.

மக்களுக்கு விடயங்களில் பூரண தெளிவு வழங்கப்பட வேண்டும். பிழையான தகவல்களை வழங்குவதன் மூலமும், விடயங்களைத் திரிபடையச் செய்வதன் மூலமும் சமூகத்தை திசை திருப்பக் கூடாது. யார் சொல்கின்றார்கள் என்பதை விட எதைச் சொல்கின்றார்கள் என்ற விடயத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதைச் சொல்கின்றார்கள் என்பதை விட யார் சொல்கின்றார்கள் என்ற விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதனால்தான் சமூகமும் சமூகத்திலுள்ள மக்களும் நிச்சயமற்ற தன்மைக்குட்படுத்தப்படுகின்றார்கள்.

சட்டம் மக்களை ஒழுங்கமைக்க வேண்டும், சமூகத்தைச் சீரான முறையில் கட்டியெழுப்ப வேண்டும், பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளையும், நிவாரணங்களையும் வழங்கக்கூடியதாக அமைய வேண்டும். அவை ஷரீஅவிற்குட்பட்டதாகவே இருக்க வேண்டுமேயொழிய, தனிப்பட்ட கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் மட்டுப்பட்டதாக அமையக் கூடாது. சட்டத்தினால் ஷரீஆவின் கட்டுப்பாட்டினுள் சமூகத்திற்குச் சீர்திருத்தம் வேண்டுமேயொழிய, தனிப்பட்டவர்களினதும் குழுக்களினதும் கோட்பாடுகளும், கொள்கைகளும், சிந்தனைகளும் ஷரீஆ என்ற பெயரில் சட்டத்திலும் சமூகத்திலும் செல்வாக்குச் செலுத்தக் கூடாது.

ஒவ்வொருவரும் தங்களது எல்லாக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கைவிட்டு தங்களது மனச்சாட்சியைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்குப் பொருத்தமான வகையில் சரியாகச் செய்கின்றோமா என்பதற்கு 'ஆம்' என்று நியாயமான விடை கிடைத்தால் நாம் வெற்றியாளர்களேயாவோம். சமூகத்தைப் பற்றிச் சிந்திப்போம். அதற்குத் தேவையான விடயங்களை காலத்தின் தேவைக்கேற்ற வகையில் ஷரீஆவிற்கு முரண்படாமல் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொருவரும் தைரியமாக முன்வருவோமாக.
-Vidivelli