Verified Web

இம்­ரான்கான் கட்­சியில் அவ­ரது மூன்­றா­வது மனை­வியின் மகள்

2018-08-09 01:55:17 M.I.Abdul Nazar

இம்­ரான்­கானின் 3 ஆவது மனை­வி­யான புஷ்ரா மனே­காவின் மகள் மெஹ்ரு ஹயாத் பாகிஸ்தான் தெக்­ரிக்-இ- இன்சாப் கட்­சியில் உறுப்­பி­ன­ராக சேர்ந்­துள்ளார்.

பாகிஸ்­தானில் நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தெக்­ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்­களில் வெற்றி பெற்­றது. இதைத் தொடர்ந்து அக்­கட்சித் தலைவர் இம்ரான் கான் பிர­த­ம­ராக பதவி ஏற்­க­வுள்ளார்.

சமீ­பத்தில் அவர் தனது மத ஆலோ­சகர் புஷ்ரா மனே­காவை 3 ஆவது திரு மணம் செய்து கொண்டார். அவர் ஏற்­க­னவே திரு­ம­ண­மா­னவர். 5 குழந்­தை­களும் உள்­ளனர்.

இந்த நிலையில் புஷ்ரா மனே­காவின் மகள் மெஹ்ரு ஹயாத் இம்­ரான்­கானின் பாகிஸ்தான் தெக்­ரிக்-இ- இன்சாப் கட்­சியில் உறுப்­பி­ன­ராக சேர்ந்தார். அவ­ருடன் மேலும் 2 பேர் இணைந்­தனர்.கட்சியில் இணைந்த மெஹ்ரு கூறும்போது, நாட்டில் நடைபெறும் குற்றங்களை களைய பாடுபடப் போவதாகத் தெரிவித்தார்.

இவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பும் நிலை உள்ளது. ஏனெனில் இம்ரான்கான் தனது கட்சியில் தகுதி அடிப்படையில்தான் பதவி வழங்கிவருகிறார். தேவையின்றி உறவினர்களுக்கு பதவி வழங்குவதையும், வாரிசு முறை தலைமையையும் அவர் எதிர்த்து வருகிறார்.
-Vidivelli