Verified Web

பந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம்

A.R.A Fareel

சிரஷே்ட ஊடகவியலாளரான .ஆர்..பரீல் உடத்தலவின்னையை பிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவி வகிக்கிறார்.

 

2018-08-03 03:49:20 A.R.A Fareel

'68 Year old Law Need Immediate Reform'

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நாட்டின் சட்­ட­வாக்­கங்­களை மேற்­கொள்ளும் பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்னால் எமது முஸ்லிம் பெண்கள் இவ்­வா­றான பதா­தை­களை ஏந்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். ஆர்ப்­பாட்­டத்தில் முஸ்லிம் அல்­லாத சில­ரையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

‘Fear Allah do not do Injustice to your Women & Girls’ என்றும் பதா­தைகள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. இத்­த­னையும் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்தச் சட்­டத்தில் திருத்­தங்­களை உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­காகும். ‘அமைச்­சரே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்த அறிக்­கையை உட­ன­டி­யாக அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பி­யுங்கள்’ எனவும் அவர்கள் பதா­தைகள் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

ஆம். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் கால­தா­ம­தப்­ப­டுத்­தக்­கூ­டாது. இந்தத் திருத்­தங்­க­ளுக்­காக நாங்கள் எமது நீண்­ட­கா­லத்தை அர்ப்­பணம் செய்து விட்டோம். சட்­டத்தில் திருத்­தங்கள் தேவை என்­பதில் மாற்றுக் கருத்­துகள் இல்லை. ஆனால், எந்­தெந்த விட­யங்­களில் எவ்­வா­றான திருத்­தங்கள் தேவை என்­ப­தி­லேயே எமது சட்ட வல்­லு­நர்கள், சட்­ட­வா­திகள், நீதி­ப­திகள், உல­மாக்கள், முஸ்லிம் பெண்கள் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு இடையே கருத்து முரண்­பா­டுகள் நில­வு­கின்­றன.

இந்­நிலை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை கால­தா­ம­தப்­ப­டுத்தி வரு­கி­றது. எனவே இச்­சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் உறுப்­பி­னர்­களே முதலில் தங்­க­ளுக்குள் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்குள் வர­வேண்டும். அவர்கள் முரண்­பட்­டுக்­கொண்டு இழு­ப­றியில் இருந்தால் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்ந்தும் கால­தா­ம­த­மாகும்.

குழுவின் சட்­டத்­தி­ருத்த அறிக்கை

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்கு முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில்18 பேர் கொண்ட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு தனது சிபா­ரிசு அறிக்­கையை கடந்த ஜவரி மாதமே நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ள­விடம் கைய­ளித்­தது.

முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்த அறிக்­கையைச் சமர்ப்­பிப்­ப­தற்கு 8 வரு­டத்­துக்கும் மேற்­பட்ட காலத்தை செல­விட்­டுள்­ளது. நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள, குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்­றதும் அதனைப் படித்துப் பார்த்தார்.

அச்­சந்­தர்ப்­பத்­தி­லேயே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்பில் குழு­வுக்குள் முரண்­பா­டுகள் இருப்­பது தெளி­வா­கி­யது. குழு இரண்­டாகப் பிள­வு­பட்­டி­ருப்­பதை அவர் அறிந்­து­கொண்டார்.

அமைச்­சரின் இணக்­கப்­பாட்டு முயற்சி தோல்வி

குறிப்­பிட்ட குழு அதன் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் தலை­மையில் ஒரு அறிக்­கையும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மையில் ஒரு அறிக்­கையும் இரு­வே­று­பட்ட சிபா­ரி­சுகள் கொண்ட அறிக்கை நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ள­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டதால் அவர் குழு உறுப்­பி­னர்­களை அழைத்து அவர்­களை இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வரு­வ­தற்கு முயற்­சித்தார். அவர் இது தொடர்­பாக பல முயற்­சி­களை மேற்­கொண்டார். ஆனால், அவ­ரது முயற்­சிகள் அனைத்தும் தோல்­வி­யி­லேயே முடிந்­தன.

‘குழுவின் இரு தரப்­பி­ன­ரையும் இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வரு­வ­தற்­காக பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டும் பலன் ஏற்­ப­டா­ததால் நான் இக்­கட்­டான நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளேன்’ என அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள கவலை வெளி­யிட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

'நான் நீதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் பின்பு பெண்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை மகளிர் விவ­கார அமைச்­ச­ருடன் இணைந்து செயற்­ப­டும்­போது பெண்கள் குழு­வொன்று முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் தொடர்­பாக கேள்­வி­யெ­ழுப்­பி­னார்கள். அதன் பின்பு குழுவின் தலைவர் சலீம் மர்­சூ­புடன் கதைத்து தொடர்ந்தும் காலம் தாழ்த்­தாது அறிக்­கையை ஒப்­ப­டைக்­கும்­படி வேண்­டுகோள் விடுத்தேன். அதன் பின்பே அறிக்­கை கடந்த ஜன­வரி மாதம் என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டது' என்­ப­தையும் அவர் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

முஸ்லிம் எம்.பி.க்களுடன் சந்­திப்பு

நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள சிபா­ரிசு அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிப்­ப­தற்கு முன்பு அறிக்­கையின் பிர­தி­யினை அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கைய­ளித்து அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்ளத் தீர்­மா­னித்தார். அதற்கு முன்பு குழுவின் உறுப்­பி­னர்கள் 18 பேரையும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்­றுக்கும் ஏற்­பாடு செய்தார்.

முஸ்லிம் எம்.பி.க்களுக்கு விளக்கம்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த, குழு இறுதி அறிக்­கையைத் தயா­ரிக்­கும்­போது குழுவின் அங்­கத்­த­வர்­க­ளி­டையே ஏற்­பட்ட கருத்து முரண்­பா­டுகள் தொடர்பில் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் கடந்த 19 ஆம் திகதி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்தார். பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் இடம்­பெற்ற சந்­திப்­பி­லேயே இந்த விளக்கம் அளிக்­கப்­பட்­டது.

குழு அங்­கத்­த­வர்கள் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தின் திருத்தம் தொடர்­பாக அநேக விட­யங்­களில் இணக்கம் கண்­டுள்­ள­தா­கவும் ஒரு­சில விட­யங்­க­ளி­லேயே கருத்து முரண்­பா­டு­களைக் கொண்­டுள்­ள­தா­கவும் விளக்­க­ம­ளித்தார்.

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை, பெண் காதி­நீ­தி­ப­திகள் நிய­மனம், காதி­ நீ­தி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ராகல், சட்­டத்­த­ர­ணி­க­ளையே காதி ­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மித்தல், மத்­ஹபை சட்­டத்­தி­லி­ருந்து நீக்­குதல் போன்ற விட­யங்­களில் குழு அங்­கத்­த­வர்­க­ளி­டையே முரண்­பா­டான கருத்­துகள் நில­வு­வ­தா­கவும் அவர் கூறினார்.

கடந்த 19 ஆம் திகதி நடை­பெற்ற சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ், பிர­தி­ய­மைச்­சர்­க­ளான அலி­சாஹிர் மௌலானா, காதர் மஸ்தான் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹமான், எம்.எஸ்.தௌபீக், எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் ஆகியோர் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

இதே­வேளை, கடந்த 24 ஆம் திகதி இரண்டாம் கட்ட சந்­திப்­பொன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இரண்டாம் கட்ட சந்­திப்பு

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்தம் தொடர்­பான முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான இரண்டாம் கட்ட சந்­திப்பு பாரா­ளு­மன்றக் கட்டடத் தொகு­தியில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை 24 ஆம் திகதி நடை­பெற்­றது. இச்­சந்­திப்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்கு இடையில் நடை­பெற்­றது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் சந்­திப்பில் வெறும் 6 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே கலந்­து­கொண்­டி­ருந்­தனர். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு முன்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள இருக்­கின்ற நிலையில், இச்­சட்டத் திருத்­தங்கள் தொடர்பில் எமது பிர­தி­நி­திகள் அக்­க­றை­யின்றி இருக்­கின்­றமை சமூ­கத்தின் சாபக்­கே­டாகும்.

தமது அர­சியல் நிகழ்ச்­சி­க­ளுக்­காக தூர இடங்­க­ளுக்கு பய­ணங்­களை மேற்­கொள்­வ­தற்கும் மேடை­களில் உரை­யாற்­று­வ­தற்கும் பல மணித்­தி­யா­லங்­களைச் செல­வி­டும எமது அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சமூ­கத்தின் நலத்­துக்­காக நேரத்தை ஒதுக்க முடி­யா­தி­ருக்­கின்­றமை வேத­னை­ய­ளிக்­கி­றது. இவ்­வா­றான எமது அர­சி­யல்­வா­திகள், பிர­தி­நி­தி­களை சமூகம் இனங்­கண்டு தேர்தல் காலங்­களில் பதி­லடி கொடுக்­க­வேண்டும்.

கடந்த 24 ஆம் திகதி நடை­பெற்ற சந்­திப்பில் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுடன் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், எம்.எச்.ஏ. ஹலீம், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ், பிர­தி­ய­மைச்சர் காதர் மஸ்தான், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபும் கலந்­து­கொண்­டி­ருந்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உதவித் தலைவர் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி, மௌல­வி­க­ளான பாஸில் பாரூக், அர்க்கம் நூராமித், முர்சித் முளப்பர் ஆகியோர் பங்கு கொண்­டி­ருந்­தனர்.

இச்­சந்­திப்பில் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு உலமா சபை எதிர்ப்புத் தெரி­வித்­தது.

'எமது மூதா­தை­யர்கள் எமக்கு அழ­காக கைய­ளித்து விட்­டுச்­சென்­றுள்ள சட்­டத்தில் கைவைத்து நாம் பழு­தாக்கிவிடக்­கூ­டாது?' என்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உலமா சபையின் நிலைப்பாடுக்கு உடன்­பட்­டனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்த குழு அங்­கத்­த­வர்­க­ளி­டையே முரண்­பா­டுகள் காணப்­ப­டு­வதால் ஓர் இணக்­கப்­பாட்­டினை எட்­டு­வ­தற்­காக அது தொடர்பில் ஆராய மூவ­ர­டங்­கிய குழு­வொன்றும் கடந்த 24 ஆம் திக­திய சந்­திப்­பின்­போது நிய­மிக்­கப்­பட்­டது.

இக்­கு­ழுவில் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான பாயிஸ் முஸ்­தபா, சிப்லி அஸீஸ் ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.

மீண்டும் குழு நிய­மனம்

குழுவின் அங்­கத்­த­வர்­க­ளுக்கு இடையே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டத் திருத்­தங்கள் தொடர்பில் நிலவும் கருத்து முரண்­பா­டு­களில் தீர்­வொன்­றினைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு மீண்டும் எம்­ம­வர்கள் மூவர் கொண்ட குழு­வொன்­றினை அமைத்துக் கொண்­டுள்­ளமை நிச்­சயம் சட்­டத்­தி­ருத்­தங்­களை கால­தா­ம­தப்­ப­டுத்தும். 8 வரு­டங்­க­ளாக முரண்­பட்­டுக்­கொண்­டுள்ள எமது உல­மாக்­களும் சட்ட வல்­லு­நர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் விரைந்து செயற்­ப­டு­வார்கள் என்­பதில் சந்­தே­கமே. இவ்­வாறு எமது சட்­டத்­தி­ருத்­தங்கள் இழுத்­த­டிக்­கப்­ப­டு­வதை அனு­ம­திக்­கவே முடி­யாது. எனவே மூவ­ர­டங்­கிய குழு ஒரு கால அட்­ட­வ­ணைக்குள் தமது இறுதித் தீர்­வினை மக்கள் முன்­வைக்­க­வேண்டும்.

அந்தத் தீர்­வுகள் ஷரீ­ஆ­வுக்கு முரண்­ப­டாத வகையில் அமைய வேண்­டு­மென்றே சமூகம் எதிர்­பார்க்­கி­றது.

பெண்கள் ஆர்ப்­பாட்டம்

கடந்த 24 ஆம் திகதி பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­ற­வே­ளையில் எமது முஸ்லிம் பெண்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்னால் ஆர்ப்­பாட்­ட­மொன்றில் ஈடு­பட்­டனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை தாம­தப்­ப­டுத்த வேண்டாம் என அமைச்­சரைக் கோரியே இந்த ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றது.

68 வருட வர­லாறு கொண்ட பழைமை வாய்ந்த சட்­டத்தில் உட­ன­டி­யாகத் திருத்­தங்கள் தேவை போன்ற பதா­தை­களை அவர்கள் ஏந்­தி­யி­ருந்­தனர். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்­களே சட்­டத்தில் திருத்­தங்­களைக் கோரு­வ­தா­கவும் தொடர்ந்தும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதில் பய­னில்லை எனவும் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளு­டனே பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட வேண்­டு­மெ­னவும் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தெரி­வித்­துள்­ளமை அவர்­க­ளது நிலைப்­பாட்­டினைத் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

எமது முஸ்லிம் பெண்­களின் கோரிக்­கைகள் மசூ­ராக்கள் மூலம் முன்­வைக்­கப்­ப­டு­வதே சிறந்­த­தாகும். வீதிப்­போ­ராட்­டங்கள் எதிர்­பார்க்கும் வெற்­றியை அளிக்கும் என கற்­பனை செய்­வது பயன்­தரப் போவ­தில்லை.

முஸ்லிம் பெண்­க­ளுக்­கென தனி­யான கலா­சாரம், பண்­பா­டுகள், வகுக்­கப்­பட்­டுள்­ளன. அந்த வரை­ய­றைக்குள் அவர்­க­ளது போராட்­டங்கள் அமை­யு­மென்றால் அவர்­களால் சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பை இவ்­வி­வ­காரம் தொடர்பில் பெற்றுக் கொள்­ளலாம்.

முஸ்லிம் பெண்கள் அமைப்பின் ஊடக மாநாடு

மூன்று முஸ்லிம் பெண்கள் அமைப்­புகள் ஒன்­றி­ணைந்து கடந்த திங்­கட்­கி­ழமை கொழும்பில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் ஊடக மாநா­டொன்­றினை நடத்­தின.

இம்­மா­நாட்டில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் தி-ருத்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான சட்­டத்­த­ரணி சபானா குல் பேகமும் கலந்து கொண்­டி­ருந்தார். ஊட­க­மா­நாட்டில் உரை­யாற்­றிய அவர்,

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் தி-ருத்த சிபா­ரிசு குழுவில் ஷரீஆ சட்­டத்­துக்கு உட்­பட்­ட­தா­கவே எமது சிபா­ரி­சு­களை முன்­வைத்தோம். அந்த அடிப்­ப­டை­யிலே அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எமது கருத்­துகள் ஷரீ­ஆ­வுக்கு முர­ணாக அமை­ய­வில்லை. ஒன்­பது வரு­டங்­க­ளாக இடம்­பெற்று தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை மீண்டும் கலந்­து­ரை­யா­டப்­பட வேண்­டிய தேவை­யில்லை. இதை சட்­ட­மாக்­கு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும் என்றார்.

கடந்த 8 வரு­டங்­க­ளாக இந்­தக்­கு­ழுவில் கட­மை­யாற்­றிய அனு­பவம் எனக்­கி­ருக்­கி­றது. காதி­நீ­தி­பதி மன்­றங்­க­ளி­லி­ருந்து மேற்­மு­றை­யீட்­டுக்கு வரும் வழக்­கு­களில் நான் ஆஜ­ரா­கிய அனு­பவம் இருக்­கி­றது.

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2018 வரை பல சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் பணி­யாற்றி அறிக்­கையை தயா­ரித்து நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளித்தோம். ஒரு­சில விட­யங்­களில்  மாத்­தி­ரமே எங்­க­ளுக்குள் முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. நாம் முன்­வைத்த கருத்­துக்கள் எவை­யாக இருந்­தாலும் ஷரீ­ஆ­வுக்கு முர­ணாக அமை­ய­வில்லை.

அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு விட்­டது. மீண்டும்  கலந்­து­ரை­யா­டல்கள் தேவை­யில்லை. இதைச் சட்­ட­மாக்­கு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். சட்­ட­வ­ரைபு திணைக்­க­ளத்­துக்கு  அனுப்­பு­வது தான் மீத­மாக உள்­ளது. உலமா சபை­யுடன்  மீண்டும் ஏன் கூட்டம் நடத்­தப்­பட வேண்டும்? என்று சட்­டத்­த­ரணி சபானா குல் பேகம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

 சட்ட திருத்த குழுவின் உறுப்­பி­ன­ரான சட்­டத்­த­ரணி சபானா குல் பேகம் தனது தரப்பு ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்ட திருத்­தங்­க­ளையே முன்­வைத்­தி­ருக்­கி­றது என்று கூறு­கிறார். ஆனால்  உலமா சபையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி குழுவில் அங்கம் வகிக்கும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, சட்­டத்­த­ரணி சபானா குல் பேகம் உள்­ள­டங்­கிய சலீம் மர்சூப் தலை­மை­யி­லான பிரி­வினர் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான சில திருத்­தங்­களைச்  சிபா­ரிசு  செய்­துள்­ளனர் என்று  குற்றம் சுமத்­தி­யுள்ளார். இதில் யார் சொல்­வதை நம்­பு­வது என்று மக்கள் குழம்­பிப்­போ­யுள்­ளார்கள். எனவே பிள­வு­பட்­டுள்ள இரு­த­ரப்­பி­னரும் மது­ராக்­களை மேற்­கொண்டு முரண்­பா­டு­களைத் தீர்த்து விரை­வான சட்­டத்­தி­ருத்­தத்­திற்கு உத­வி­பு­ரிய வேண்டும்.
-Vidivelli