Verified Web

மண்­டேலா

2018-07-20 06:33:25 Administrator

சக்தி சரவணன்

1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி தென்­னா­பி­ரிக்­காவின் பிரிட்­டோ­ரியா நகரில் நடந்த  விழாவில் நாட்டின் முதல் கறுப்­பின அதி­ப­ராகப் பத­வி­யேற்றுக் கொண்டார் நெல்சன் மண்­டேலா. காயங்­களை ஆற்­று­வ­தற்­கான நேரம் வந்­து­விட்­டது என அவர் உரக்கச் சொன்­ன­போது, கூடி­யி­ருந்­த­வர்கள் கண்­ணீ­ருடன் அதை ஆமோ­தித்­தார்கள்.

இன­வெ­றிக்­கொள்­கைக்கு எதி­ராக அமை­தி­யான முறையில் போராட்­டத்தைத் தொடங்கி, ஆயுதப் போராட்­டத்­திலும் ஈடு­பட்­டவர் மண்­டேலா. 27 ஆண்­டுகள் சிறை­வாசம் அனு­ப­வித்­தவர். சிறை­வாசம் முடிந்து வெளி­வந்த அவர் மக்­க­ளாட்­சியின் மகத்­து­வத்தை உணர்த்தும் வகை­யி­லான ஆட்­சியைத் தந்தார். மக்கள் செல்­வாக்கு இருக்கும் நேரத்­தி­லேயே ஆட்­சி­யிலும், அர­சி­ய­லிலும் இருந்தும் விலகி அடுத்த தலை­மு­றைக்கு வழி­விடும் நாக­ரி­கத்தைக் கடைப்­பி­டித்­தவர்.

20 ஆம் நூற்­றாண்டு கண்ட மாபெரும் போரா­ளி­யான மண்­டேலா, தென் ஆபி­ரிக்­காவின் க்யூனு என்ற குக்­கி­ரா­மத்தில் பிறந்­தவர். 9 வய­தி­லேயே தந்­தையை இழந்து தவித்த அவர், தனியார் நிறு­வ­னத்தில் பாது­கா­வ­ல­ராக பணி­பு­ரிந்து கொண்டே தொலை­தூரக் கல்­வியில் இள­நிலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஜோஹன்­னஸ்பர்க் சென்று சட்டம் பயின்ற மண்­டேலா, பின்னர் ஆப்­ரிகன் லீகல் பார்ட்­னெர்ஷிப் (African Legal Partnership) என்ற அமைப்பை நிறு­வினார்.

1942 இல் ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரசில் சேர்ந்த மண்­டே­லா­வுக்கு, 1950 இல் அதன் இளைஞர் அமைப்பின் தலைமைப் பொறுப்பு கிடைத்­தது. 1952 இல் கட்­சியின் துணைத் தலை­வ­ரானார். கறுப்பர், இந்­தியர் உள்­ளிட்­டோரின் கட்­டற்ற விடு­த­லைக்­காக பிர­சாரம் செய்த மண்­டேலா, அதே ஆண்டின் இறு­தியில் கைது செய்­யப்­பட்டார். முதன்­மு­றை­யாக மண்­டேலா அனு­ப­வித்த சிறை­வா­சம்தான்  அவ­ரது எதிர்­கா­லத்தை செதுக்­கி­யது. இன­வெ­றிக்கு எதி­ரா­கவும், சுதந்­தி­ரத்­திற்கு ஆத­ர­வா­கவும் நாடு முழு­வதும் பிர­சாரம் செய்தார்.

1950 களில் நிற­வெ­றியின் பிடியில் சிக்கித் தவித்து வந்த தென்­னா­பி­ரிக்க கறுப்­பின  மக்­களை கார­ண­மின்றி கைது செய்து சித்­தி­ர­வதை செய்­வதை வழக்­க­மாக கொண்­டி­ருந்­தது நிற­வெறி அரசு. கறுப்­பின மக்­களை தனி­யாகக் குடி­ய­மர்த்­து­வ­தற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வந்­தது. 1960 களில் நிற­வெறி அரசின் கொடுமை கறுப்­பின பெண்­க­ளையும் விட்­டு­வைக்­க­வில்லை. நிற­வெ­றிக்கு ஆத­ர­வான சட்­டங்­களை எதிர்க்கும் வகையில் நெல்சன் மண்­டேலா அங்கம் வகித்த ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி 1960ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அறப்­போ­ராட்­டத்­திற்கு அழைப்பு விடுத்­தது.

அப்­ப­டி­யொரு போராட்­டத்­துக்கு 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி குறிக்­கப்­பட்­டது. சார்ப்­வெய்ல்லி நகரக் காவல்­நி­லையம் முன்பு ஏழா­யி­ரத்­திற்கும் அதி­க­மான கறுப்­பின மக்கள் கூடி­யி­ருந்­தனர். கண்­ணீர்­புகைக் குண்­டு­களும், காவல் துறை­யி­னரின் மற்ற ஆயு­தங்­களும் போராட்­டக்­கா­ரர்கள் முன் எடு­ப­டாமல் போகவே, விமா­னங்­களை தாழ்­வாக பறக்­கச்­செய்து மக்­களை கலைக்க முயன்­றது அரசு. கறுப்­பின மக்கள் அஞ்­ச­வில்லை. காவ­லர்கள் துப்­பாக்­கியால் அப்­பாவி மக்­களைக் குறி­வைத்­தனர். அப்­போதும் போராட்­டக்­கா­ரர்கள் கலைந்­து­வி­ட­வில்லை. காவல்­து­றை­யி­னரின் துப்­பாக்­கி­களில் இருந்து வெளி­வந்த குண்­டுகள் 69 பேரை ஈவு இரக்­க­மின்றி கொன்­றது. 180க்கும் அதி­க­மானோர் படு­கா­ய­ம­டைந்­தனர்.

அது­வரை அமை­தி­வ­ழியில் போரா­டிய நெல்சன் மண்­டேலா உள்­ளிட்ட ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் போரா­ளிகள் கொதித்­தெ­ழுந்­தனர். நிற­வெ­றியை ஒழிப்­ப­தற்கு ஆயுதம் ஏந்­து­வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற தீர்­மா­னத்­துக்கு அவர்கள் வரு­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தது இந்தப் படு­கொ­லைதான். இதனால் மண்­டே­லாவைத் தேடத் தொடங்­கி­யது தென்­னாப்­பி­ரிக்க வெள்ளை இன அரசு.

ஜோஹ­னஸ்­பர்க்கின் புற­நகர் பகு­தி­யான ரிவோ­னாவில் கைது செய்­யப்­பட்ட ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் தலை­வர்கள் மற்றும் மண்­டேலா மீதும் அர­சுக்­கெ­தி­ராக போராட புதிய நபர்­களைத் தேர்ந்­தெ­டுத்­தமை, அவர்­களை குண்டு வெடிப்பு போன்ற நாச வேலை­களில் ஈடு­ப­டுத்­தி­யது, வெளி­நா­டு­களில் இருந்து தேசத் துரோக வேலை­க­ளுக்கு பணம் திரட்­டி­யது போன்ற குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­யது, அப்­போ­தைய நிற­வெறி அரசு. மேலும் இந்த வழக்கு தொடர்­பாக கைது செய்­யப்­பட்ட மண்­டேலா உட்­பட அனைத்து போரா­ளி­க­ளையும் 90 நாட்கள் எந்­த­வித விசா­ர­ணையும் இல்­லாமல் தனிமைச் சிறையில் அடைத்­தது.

பின்னர் 1963 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கின் விசா­ரணை நீதி­பதி குவார்டஸ் டி வெட் முன்­னி­லையில் நடந்­தது. இந்த வழக்கு விசா­ரணை சர்­வ­தேச சமூ­கத்­தாலும், ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபை­யாலும் கடும் கண்­ட­னத்­திற்­குள்­ளா­கி­யது. இந்த வழக்கு விசா­ர­ணையில் தனது தரப்பு நியா­யத்தை எடுத்­து­ரைக்கும் வித­மாக நெல்சன் மண்­டேலா ஆற்­றிய உரை வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெற்­றது. சுமார் மூன்று மணி நேரம் அவர் ஆற்­றிய உரையில், நான் ஆபி­ரிக்க மக்­க­ளுக்­காக போரா­டு­வ­தற்­காக என் வாழ்­நாளை அர்ப்­ப­ணித்­தி­ருக்­கிறேன். எவ்­வாறு வெள்­ளை­யின ஆதிக்­கத்தை எதிர்க்­கி­றேனோ, அதே அளவு கறுப்­பின ஆதிக்­கத்­தையும் எதிர்க்­கிறேன்.  அனைத்து இன மக்­களும் ஒருங்­கி­ணைந்து பேத­மில்­லாமல் வாழும் ஒரு சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வதே எனது நோக்கம் என்றார்.

இந்த நோக்கம் நிறை­வே­று­வ­தற்­காக நான் உயிர் துறக்­கவும் தயார் என்ற மண்­டே­லாவின் வாக்­கு­மூலம் அவர் தரப்பு வழக்­க­றி­ஞர்­க­ளையே அதிர வைத்­தது. காரணம் அவ­ருக்கு மரண தண்­டனை வழங்க அது கார­ண­மா­கி­வி­டக்­கூடும் என அவர்கள் அஞ்­சினர். ஆனால் வழக்கு விசா­ர­ணையின் முடிவில் மண்­டேலா உட்­பட எட்டு பேருக்கு ஆயுள் தண்­டனை வழங்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக 27 வரு­டங்கள் சிறையில் இருந்தார் மண்­டேலா. அதில் 18 வரு­டங்­களை ராபன் தீவில் உள்ள சிறையில் கழித்தார்.

க்ளாஸ் டீ பிரிவில் மண்­டேலா 46664 என்ற சிறை எண்ணில் 8 அடிக்கு 7 அடி அறையில் அடைக்­கப்­பட்டார். அங்கு மாதம் ஒரு­முறை மட்­டுமே பார்­வை­யா­ளர்­களை காண முடியும், கடி­தங்கள் அனுப்ப முடியும். அந்த கடி­தங்­களும் அதி­கா­ரி­களால் தணிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­படும். சில நேரங்­களில் செய்­தித்­தாள்­களை திருடிப் படித்­த­தாகக் குற்­றம்­சாட்­டப்­பட்டு அவ­ருக்கு தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டது. அந்த நேரத்தில் சிறைக் கைதிகள் நிலையை மாற்றும் வகையில் குழு ஒன்றை அமைத்து கைதி­க­ளிடம் சுதந்­திரம் குறித்த விழிப்­பு­ணர்வை கொண்டு வரவும் மண்­டேலா முயற்சி மேற்­கொண்டார்.

தனது ­நாட்டில் உள்ள சாதா­ரண குடி­மக்­களை எப்­படி நடத்­து­கி­றது என்­பதைக் கொண்டே அந்­நாட்டை மதிப்­பிட முடியும் என்­பது மண்­டே­லாவின் கருத்து. அந்த வகையில் ராபன் தீவில் உள்ள சிறையில் தம் இன மக்கள் அனு­ப­வித்த கொடு­மை­களைக் கண்ட மண்­டேலா, அதை மாற்­று­வ­தற்கு பாடு­பட்டு வெற்றி கண்­டதன் மூலம், தென் ஆபி­ரிக்­காவின் நிலை­யையும் உலக அரங்கில் மாற்­றிக்­காட்­டினார். சர்­வ­தேச சமூ­கத்தின் தொடர் அழுத்தம், தென் ஆபி­ரிக்கா மீது விதிக்­கப்­பட்ட பொரு­ளா­தாரத் தடைகள் போன்­ற­வை­களால் 1990ஆம் ஆண்டு பெப்­ர­வரி 11 ஆம் திகதி தம் போராட்­டத்தில் வெற்றி பெற்று விடு­த­லை­யானார். 1994 ஆம் ஆண்டு நடந்த தேர்­தலில் அவ­ரது ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி  அபார வெற்றி பெற்­றது.

பாரா­ளு­மன்­றத்தால் ஏக­ம­ன­தாக அதி­ப­ராகத் தேர்வு செய்­யப்­பட்டார் நெல்சன் மண்­டேலா. 1994 மே 10- ஆம் திகதி நடந்த அவ­ரது பத­வி­யேற்பு விழாவை நூறு கோடி பேர் தொலைக்­காட்­சி­களில் பார்த்­தார்கள். தனது 5 ஆண்டு கால ஆட்­சியில் பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொண்ட மண்­டேலா, 1999 ஆம் ஆண்டு அர­சி­யலில் இருந்து வில­கினார். தொடர்ந்து அர­சுக்கு ஆலோ­ச­னை­களை வழங்கி வந்த அவர், 2013 ஆம் ஆண்டு உடல் நலக்­கு­றைவால் மர­ண­ம­டைந்தார்.

இன்­றைய நமது வாழ்வைக் கட்­ட­மைத்­ததில் வர­லாற்­றுக்கு இருக்கும் பங்கை மறந்­து­விட்டு ஒரு சமூகம் செயற்­ப­டு­மானால் அது மோச­மான திசையை நோக்­கித்தான் செல்ல முடியும். அதன்­பொ­ருட்டு, ஒரு சமூகம் தனது வர­லாற்றைத் தெரிந்து வைத்­துக்­கொள்ள வேண்­டி­யது அவசியம். மண்டேலாவைத் தனது தேசத்தின் தந்தையாகப் பார்க்கிறது தென்னாபிரிக்கா. ஒவ்­வொரு ஆண்டும் அவரைப் பல்­வேறு விதங்­களில் நினை­வு­கூர்ந்து கொண்­டாடி மகிழ்­கி­றது. அவர் கறுப்­பர்­க­ளுக்கு எதி­ராக மட்டும் போரா­டி­யவர் அல்லர். ஆதிக்க மனோ­நி­லைக்கு எதி­ராகக் கிளர்ந்­தெ­ழுந்­தவர். ஆதிக்கம் செலுத்தும் கறுப்­பி­னத்­த­வர்­க­ளையும் நான் ஏற்க மாட்டேன் என்­றவர். ஆதிக்க மனோ­பா­வத்­துக்கு எதி­ராகப் போரா­டி­ய­துடன், அன்­பையும் கரு­ணை­யையும் மன்­னிப்­பையும் தனது தாரக மந்­தி­ர­மாகக் கொண்­டி­ருந்­தவர். அத­னா­லேயே அவர் உல­க­ளா­விய தலைவர் ஆகிறார். அத­னால்தான் அவ­ரது நூறா­வது பிறந்த தினத்தை இம்­முறை உல­கமே நினைவு கூர்ந்­தது. நாமும் அவ­ரது நற்­ப­ணி­க­ளையும் சிந்­த­னை­க­ளையும் நினைவுபடுத்துவோம். அவற்றிலிருந்து படிப்பினை பெறுவோம்.
-Vidivelli