Verified Web

மஹிந்த சீனாவிடம் இருந்து பெற்ற பணத்தை மீள கையளிக்க வேண்டும்

2018-07-20 06:32:36 MM.Minhaj

 

நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்­தியின் பிர­காரம் சீனா­விடம் இருந்து நிதி­யு­தவி எடுக்­க­வில்லை என்றால் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து பகி­ரங்­க­மாக பதில் கூற வேண்டும். ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டில் இல்லை. சிங்­கப்­பூ­ருக்கு சென்று விவா­தத்­திற்கு முகங்­கொ­டுக்க முடி­யாமல் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இது மோச­டி­யல்ல. நாட்­டுக்கு செய்த பாரிய துரோ­க­மாகும். அத்­துடன் இது பொது­மக்­களின் பண­மாகும். ஆகவே ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சீனா­வி­ட­மி­ருந்து  பெற்ற பணத்தை மீளக் கைய­ளிக்க வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சபையில் வலி­யு­றுத்­தினர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு சீனா நிதி உதவி வழங்­கி­ய­தாக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துஷார இந்­துநில் கொண்­டு­வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

துஷார இந்­துநில்

இதன்­போது குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துஷார இந்­துநில் உரை­யாற்­று­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சீனா­விடம் நிதி­யு­தவி பெற்­றமை தொடர்­பாக செய்தி நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இது தொடர்­பாக நாம் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­கின்றோம். இந்த சந்­தர்ப்­பத்தில் இந்த மோச­டி­யுடன் சம்­பந்­தப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்­றத்தில் இல்லை. இந்த மோச­டி­யுடன் சம்­பந்­தப்­ப­ட­வில்லை என்றால் மஹிந்த ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து உண்­மையை ஒப்­புக்­கொள்ள வேண்டும். இல்­லையேல் இது தவறு என்று சுட்­டிக்­காட்ட வேண்டும். எதுவும் இல்லை. மத்­திய வங்கி மோசடி தொடர்­பாக குற்­றச்­சாட்டு வரும்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து பதில் அளித்­த­துடன் ஆணைக்­குழு முன்பு சென்று சாட்­சி­யமும் அளித்தார். ஆனால் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­ம­றை­வா­கி­யுள்ளார் என்றார்.

முஜிபுர் ரஹ்மான்

இத­னை­ய­டுத்து ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தை ஆமோ­தித்து கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் உரை­யாற்­று­கையில்,

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தேர்தல் பரப்­பு­ரைக்கு சீனா 7.6 மில்­லியன் டொலர் நிதி உதவி வழங்­கி­யமை தொடர்­பாக நியுயோர் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் செய்தி வெளி­யி­டப்­பட்­டது. இந்த செய்தி வெளி­வரும் வரை எமக்கு இது­பற்றி ஒன்றும் தெரி­யாது. நிதி உதவி வழங்­கி­ய­தாக சீனா தூத­ரகம் கூட உண்­மையை ஒப்­புக்­கொண்­டது. இந்­நி­லையில் சீன அர­சாங்­கத்­தினால் இலங்கை கடன் வழங்­கிய சைனா ஹார்பர் நிறு­வ­னமே மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் தேர்­த­லுக்கு நிதி உதவி வழங்­கி­யுள்­ளது. ஆகவே நாம் செலுத்த வேண்­டிய கடனில் மஹிந்­த­வுக்கு வழங்­கிய பணத்­தொ­கையும் உள்­ளது. ஆகவே இது பொது மக்­களின் பண­மாகும். ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சீனா­விடம் இருந்து பெற்ற பணத்தை மீள கைய­ளிக்க வேண்டும். அது தொடர்­பாக மஹிந்த ராஜ­பக்ஷ பதிலும் வழங்­க­வில்லை. சீனா­விடம் பணத்தை பெற்­றுக்­கொண்டு எத்­தனை வளங்­களை விற்­றாரோ தெரி­ய­வில்லை. 2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் சீனா உதவி வழங்­கி­யது எனில் அவர் ஆட்­சிக்கு வந்­தி­ருந்தால் எத்­தனை வளங்­களை விற்­றி­ருப்பார் என நினைக்க தோன்­று­கின்­றது என்றார்.

கபீர் ஹாஷிம்

இதன்­போது அதி­வேக நெடுஞ்­சாலை மற்றும் வீதி அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் உரை­யாற்­று­கையில்,

நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையை காரணம் காட்டி முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உறு­தி­யான பதில்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்­றத்­திற்கு வரவும் இல்லை. இந்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் தனக்கு தொடர்­பில்லை என்று கூறினால் போது­மா­னது. மத்­திய வங்கி மோசடி தொடர்­பாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்ட போது நானும் பிர­த­மரும் எந்­த­வொரு அச்­சமும் இல்­லாமல் முகங்­கொ­டுத்தோம். ஆகவே சீனா­விடம் பணம் பெற்­ற­மையை மோசடி என்று கூற முடி­யாது. இது நாட்­டுக்கு செய்த பாரிய துரோ­க­மாகும். எனவே இது தொடர்பில் பூரண விசா­ர­ணை­யொன்றை ஆரம்­பிக்க வேண்டும் என்றார்.

நளின் பண்­டார

இதன்­போது அரச முகா­மைத்­துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்­டார உரை­யாற்­று­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ரா­கவே தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­தப்­ப­டு­கின்­றது. எனினும் முன்னாள் ஜனா­தி­ப­தியை காண­வில்லை. அவர் சிங்­கப்­பூ­ருக்கு சென்­றுள்ளார். விவாதம் நடக்கும் போது அவர் சிங்­கப்­பூரில் உள்ளார். பாரா­ளு­மன்­றத்தில் செவ்­வாய்­கி­ழ­மை­யன்று சிங்­கப்பூர் தொடர்­பான ஒப்­பந்­த­திற்கு எதி­ரா­கவே கூட்டு எதிர்க்­கட்­சியின் விவாதம் நடத்­தினர். ஆனால் அதன்­போதும் அவர் சிங்­கப்­பூரில் இருந்தார். ஆகவே முன்னாள் ஜனா­தி­பதி தொடர்பில் மக்கள் சிந்­திக்க வேண்டும் என்றார்.

ரஞ்ஜன் ராம­நா­யக்க

இதன்­போது சமூக நலன்­புரி பிரதி அமைச்சரன் ரஞ்சன் ராம­நா­யக்க உரை­யாற்­று­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் வெளி­யான செய்­தியில் சீனா­விடம் நிதி பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இது மாத்­திரம் அவர் செய்த மோசடி இல்லை. நாட்டில் நடை­பெற்ற பல்­வேறு மோச­டி­க­ளுடன் அவ­ருக்கு தொடர்­புள்­ளது. என்­றாலும் தற்­போது வெளி­யான மோச­டியை சாதா­ர­ண­மாக எண்ண முடி­யாது. நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கையின் செய்­தி­யாளர் ஹபீப் பல உண்­மை­களை உல­கிற்கு வெளிப்­ப­டுத்­தி­ய­வ­ராவார். ஆகவே மஹிந்த ராஜ­பக்ஷ சீனா­விடம் இருந்து தேர்­த­லுக்­காக பணம் பெற்­றமை உண்­மை­யாகும். எனினும் இது தொடர்பில் பதி­ல­ளிப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டில் இல்லை. அவர் சிங்­கப்­பூ­ருக்கு தப்­பி­யோ­டி­யுள்ளார். எனவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சீனா­விடம் பணம் பெற­வில்லை என உறு­திப்­ப­டுத்தி அதற்­கான சத்­திய கட­தா­சியை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்க வேண்டும் என்றார்.

அகில விராஜ் காரி­ய­வசம்

இதன்­போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் உரை­யாற்­று­கையில்,

இந்த விவா­தத்தில் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் எவரும் நியூயோர்க் டைம்ஸ் செய்­திக்கு பதி­ல­ளிப்­ப­தாக இல்லை. அர­சாங்­க­த­திற்கு எதி­ரா­கவும் அமைச்­சர்கள் தொடர்­பா­க­வுமே பேசு­கின்­றனர். எனினும் நியூயோர்க் டைம்ஸ் செய்­தியை கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் எவரும் நிரா­க­ரிக்­க­வில்லை என்றார்.

அஜித் பீ.பெரேரா

இதன்­போது பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா குறிப்­பி­டு­கையில்,

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்கள் வாயிலாக நிராகரித்திருந்தார். அதனை பூரணமாக நிராகரிக்கவில்லை. அப்படியான நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எம்மிடமும் நாட்டு மக்களிடம் நல்ல மதிப்பு உள்ளது. ஆனாலும் அவரது நன்மதிப்பை போக்கும் நோக்கில் அவர் பாராளுமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டும். ஆனால் அவரை விடுத்து சமல் ராஜபக்ஷவோ அல்லது நாமல் ராஜபக்ஷவோ பாராளுமன்றத்திற்கு வரவும் இல்லை. பதில் அளிக்கவும் இல்லை. ஏன் வரவில்லை. எனவே சீனாவிடம் பணம் பெற்றமை தொடர்பான விசாரணை நடைபெறுகின்றது என்றார்.
-Vidivelli