Verified Web

தனியார் சட்ட திருத்தத்தில் முஸ்லிம் எம்.பி.க்களின் பொறுப்பு

2018-07-20 01:49:48 Administrator

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு பல மாதங்­க­ளா­கின்ற போதிலும் அதன் அடுத்த கட்ட நகர்­வுகள் தாம­த­மா­கின்­றமை தொடர்பில் பலரும் தமது கரி­ச­னையைச் செலுத்­தி­யுள்­ளனர். இந் நிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் நேற்­றைய தினம் முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளமை வரவேற்கத்தக்கதாகும்.

இந் நிலையில் குறித்த விவ­காரம் தொடர்பில் எதிர்­வரும் 24 ஆம் திகதி இரண்டாம் கட்ட சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் இச் சந்­திப்பில், அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா பிர­தி­நி­திகள், நீதி அமைச்சின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்டோர் கலந்து­ கொள்­ள­வுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளி­யிட்ட நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள  "முஸ்லிம் தனியார் திருத்தச் சட்ட அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க முடி­யாமல் இருப்­ப­தற்கு திருத்தம் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட குழு­வினுள் ஏற்­பட்­டி­ருக்கும் பிளவே கார­ண­மாகும். இக் குழு இரண்­டாக பிள­வு­பட்­டுள்­ளது. அவர்­களை இணக்­கப்­பாட்­டுக்கு கொண்­டு­வர பல முயற்­சி­களை எடுத்தும் பய­ன­ளிக்­க­வில்லை.  இவர்­களின் பிளவால் நானே இக்­கட்­டான நிலைக்கு ஆளா­கி­யுள்ளேன் " என தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த அறிக்­கையில் குழுவின் உறுப்­பி­னர்கள் இரு வேறு குழுக்­க­ளாகப் பிரிந்து கையொப்­ப­மிட்­டுள்­ள­மையும் கருத்து வேறு­பா­டான பல அம்­சங்கள் உள்­ள­மையும் தமக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். என­வேதான் இந்த சிபா­ரிசு அறிக்­கையை முஸ்லிம் எம்.பி.க்களிடம் சமர்ப்­பித்து அவர்­க­ளது ஆலோ­ச­னை­களைப் பெற தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் நீதி­ய­மைச்சர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதற்­கி­டையில் சகல முஸ்லிம் எம்.பி.க்களி­னதும் ஒப்­பு­தலைப் பெற்ற பின்பே இவ் அறிக்­கையை அமைச்­ச­ர­வை­யிலோ அல்­லது பாரா­ளு­மன்­றத்­திலோ சமர்ப்­பிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் ரிஸ்வி முப்தி குறிப்­பிட்­டி­ருந்­த­மையும் இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான தனியார் சட்ட திருத்த குழு­வா­னது 9 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் நிய­மிக்­கப்­பட்­டது. இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் பலர் நீதி­ய­மைச்­சர்­க­ளாக பதவி வகித்­துள்­ளனர். முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூட இவ்­வி­டைப்­பட்ட காலத்தில் நீதி­ய­மைச்­ச­ரா­க­வி­ருந்தார். எனினும் இந்த அறிக்­கையை பூர­ணப்­ப­டுத்தி திருத்­தங்­களை சட்ட ரீதி­யாக அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான முயற்­சிகள் குறிப்­பி­டத்­தக்­க­ளவு நடை­பெ­ற­வில்லை.

இந்­நி­லையில் தான் தற்­போ­தைய நீதி­ய­மைச்­ச­ரிடம் பெண்கள் அமைப்­புகள் சில விடுத்த கோரிக்­கை­க­ளுக்­கி­ணங்க அவர் குறித்த அறிக்­கையை பூர­ணப்­ப­டுத்தி தரு­மாறு குழுவின் தலை­வரை கோரி­யி­ருந்தார். இதற்­க­மை­வா­கவே 9 வரு­டங்­களின் பின்னர் இவ்­வ­றிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அந்த வகையில் தற்­போது குறித்த அறிக்கை தொடர்பில் தீர்­மா­னிக்கும் பொறுப்பு 21 முஸ்லிம் எம்.பி.க்களி­டமும் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற இது தொடர்­பான சந்­திப்பில் ஒன்­பது எம்.பி.க்கள் மாத்­தி­ரமே கலந்து கொண்­டி­ருந்­தனர். ஏனைய 12 பேர் இதில் பங்­கேற்­க­வில்லை.

குறித்த சட்­ட­மா­னது இலங்கை முஸ்­லிம்­களின் தனித்­து­வத்­துடனும் மார்க்க விழு­மி­யங்­க­ளு­டனும் பின்னிப் பிணைந்­தது என்­பதால் முஸ்லிம் எம்.பி.க்கள் இது விட­யத்தில் கூடுதல் கரி­சனை காட்ட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அத்­துடன் ஷரீ­ஆ­வுக்கு முரண்­ப­டாத வகையில் இந்த சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சக­ல­வி­த­மான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் முஸ்லிம் எம்.பி.க்கள் வழங்க முன்­வர வேண்டும்.

இதே­வேளை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தரப்பும்  இந்த விடயத்தில் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். ஷரீஆவில் நெகிழ்வுப்போக்குக்கு இடமுள்ள விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு இந்த சட்டத் திருத்த முயற்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.  அதைவிடுத்து தொடர்ந்தும் குழுக்களை அமைத்து, கருத்துமுரண்பாடுகளை வளர்த்து மேலும் பலரது அபிப்பிராயங்களை பெறும் நோக்கில் காலத்தை கடத்துவது ஆரோக்கியமானதல்ல என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli