Verified Web

விலையேற்றங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது

2018-07-19 04:42:09 Administrator

எரி­பொருள் விலை­யேற்­றத்தைத் தொடர்ந்து மக்­களின் அன்­றாட வாழ்க்கைச் செலவு அதி­க­ரித்­தி­ருக்கும் நிலையில் ஏனைய பொருட்கள் மற்றும் சேவை­க­ளுக்­கான கட்­ட­ணங்­களும் உயர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. இதனால் மக்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். அது மாத்­தி­ர­மன்றி மாதாந்தம் எரி­பொருள் சூத்­திரம் மீளாய்வு செய்­யப்­படும் என்றும் அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில்  எரி­பொருள் விலை மற்றும் அதி­க­ரித்­துள்ள வாழ்க்கைச் சுமையை அர­சாங்கம் குறைக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்தி மக்கள் விடு­தலை முன்­னணி நாட­ளா­விய ரீதியில் ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

எரி­பொருள் மற்றும் அன்­றாட தேவை­க­ளுக்­கான பொருட்­களின் விலை குறைக்­கப்­பட வேண்டும், தேவையற்ற வரிகள் நீக்­கப்­பட வேண்டும் என்பன உள்­ளிட்ட கோரிக்­கைகள் இந்த ஆர்ப்­பாட்­டங்­களில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அர­சாங்கம் எரி­பொருள் சூத்­திரம் எனும் அடிப்­ப­டையில், எந்­த­வொரு கார­ணமும் இன்றி திடீ­ரென எரி­பொ­ருளின் விலையில் மாற்­றத்தை கொண்டு வந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள மக்கள் விடு­தலை முன்­னணி, இதனால் சாதா­ரண மக்­க­ளது வாழ்க்கைச் செல­வினம் அதி­க­ரிப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இதே­வேளை அண்­மையில் எரி­பொருள் விலைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர, விலை சூத்­தி­ரத்­திற்கு அமைய எரி­பொருள் விலை குறை­வ­டையும் போது அதன் பலனை பொது­மக்கள் அனு­ப­விப்­பார்கள் எனத் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் இவ்­வாறு எரி­பொருள் விலை குறை­வ­டை­யு­மாயின் வியா­பா­ரிகள் எந்­த­ளவு தூரம் பொருட்கள் மற்றும் சேவை­களின் விலையைக் குறைப்­பார்கள் என்­பதை எவ­ராலும் உறு­திப்­ப­டுத்த முடி­யாது என்­பதே யதார்த்­த­மாகும்.

எரி­வா­யுவின் விலையை அண்­மையில் அர­சாங்கம் குறைத்­தி­ருந்த போதிலும் அதன் விளை­வாக ஹோட்டல் உணவுப் பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­ப­ட­வில்லை. மாறாக சில தினங்­க­ளுக்கு முன்னர் பாண் தவிர்ந்த பேக்­கரி உணவுப் பண்­டங்­களின் விலை 5 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­பட்­டது. இது மக்­களை மேலும் நெருக்­க­டிக்குள் தள்­ளி­யுள்­ளது.

துர­திஷ்­ட­வ­ச­மாக இவ்­வா­றான விலை அதி­க­ரிப்­புகள் அர­சி­யல்­வா­தி­களை ஒரு­போதும் பாதிப்­ப­தில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்தும் ஆடம்­பர வாழ்க்­கையில் மூழ்­கி­யி­ருப்­ப­துடன் மக்­களின் வரிப்­ப­ணத்­தையும் வீண­டித்து வரு­கின்­றனர். இவ்­வாறு அர­சி­யல்­வா­திகள் மக்­களின் வரிப்­ப­ணத்தை வீண­டித்துக் கொண்­டி­ருக்க நாட்டின் பொரு­ளா­தாரச் சுமையை மக்­கள்தான் சுமக்க வேண்­டி­யி­ருக்கும். இந்த நிலை­மைக்கு முற்றுப் புள்ளி வைத்து பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்­பொன்றைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான பணிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இந் நிலை தொடர்ந்து நீடிக்குமானால் பொது மக்களே வீதிக்கு இறங்கி வேண்டி வரலாம். அது இந்த நாட்டை மேலும் பின்னோக்கித்தள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.