Verified Web

ஹமாஸுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட துருக்கிய பெண் இஸ்ரேலினால் விடுதலை

2018-07-17 23:30:19 M.I.Abdul Nazar

அங்­கா­ர­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடையே கோபம் ஏற்­படக் கார­ண­மா­ய­மைந்த சுற்­றுலா விசாவில் வந்­தி­ருந்த வேளை பலஸ்­தீனக் குழு­வான ஹமா­ஸுக்கு உத­வி­ய­தாகக் குற்­றம்­சாட்­டப்­பட்ட பெண்­ணொ­ருவர் இஸ்­ரே­லினால் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக திங்­கட்­கி­ழ­மை­யன்று அவ­ரது சட்­டத்­த­ரணி தெரி­வித்தார்.

கடந்த மாதம் எப்ரு ஒஸ்கான் தடுத்து வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­வ­தாக துருக்கி எச்­ச­ரித்­தி­ருந்­தது. முன்னர் இரு நாடு­களும் நல்­லு­றவைப் பேணி வந்­தன. பின்னர் பலஸ்­தீன மக்கள் மற்றும் ஜெரூ­ச­லத்தின் அந்­தஸ்து தொடர்­பான கருத்து வேறு­பா­டு­க­ளினால் இரு நாடு­களும் முரண்­பட்­டுக்­கொண்­டுள்­ளன.

இஸ்­ரே­லிய இரா­ணுவ நீதி­மன்றம் அவரை குற்­ற­வா­ளி­யாக அறி­வித்து ஒரு வாரத்தின் பின்னர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அவர் இஸ்­தான்­பூலை நோக்கி பய­ணித்­த­தாக ஒஸ்­கானின் சட்­டத்­த­ர­ணி­யான ஒமர் கமைஸி தெரி­வித்தார். மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அவரை விடு­விக்­கு­மாறு உத்­த­ர­விட்­ட­தோடு அவ­ரது கட­வுச்­சீட்­டையும் மீள ஒப்­ப­டைக்­கு­மாறு பணித்­தது. குற்­றச்­சாட்டு கைவி­டப்­படும் என தான் எதிர்­பார்ப்­ப­தாக சட்­டத்­த­ரணி மேலும் தெரி­வித்தார்.

எமது வழக்கில் அதிக கரி­சனை எடுத்­த­மைக்­காக ஜனா­தி­பதி அதுர்கானுக்கு தான் நன்றிகளைத் தெரிவிப்பதாக துருக்கியை வந்தடைந்த ஒஸ்கான் தெரிவித்ததாக துருக்கி செய்தி முகவரகமான அனட்லூ தெரிவித்துள்ளது.
-Vidivelli