Verified Web

காணாமல் போனோர் அலுவலகம் தீர்வு தருமா

2018-07-17 06:31:28 Administrator

 

இலங்கை அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அமர்­வுகள் நாட்டின் பல பாகங்­க­ளிலும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. அந்த வகையில் யாழ்ப்­பாண மாவட்­டத்­திற்­கான அமர்வு நேற்று முன்­தினம் யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் தமது உற­வு­களை இழந்த முஸ்லிம் மக்­களும் கலந்து கொண்டு தமது ஆதங்­கத்தை முன்­வைத்­தனர்.

யாழ்ப்­பா­ணத்தில் யுத்த காலத்தில் காணாமல் போன 33 முஸ்­லிம்கள் சார்பில் எம்.நெயினா முக­மமட் என்­பவர் காணாமல் போன­வர்கள் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் '' காணா­மற்­போன எமது உற­வு­களை பிரிந்து நீண்­ட­கா­ல­மாக கவ­லை­யு­டனும் கண்­ணீ­ரு­டனும் வாழ்­கின்றோம். அர­சாங்கம் தொடர்ந்து பல ஆணைக்­கு­ழுக்­களை நிய­மித்து விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தாக கூறு­கின்­றது. இன்றும் புதி­தாக ஓர் ஆணைக்­கு­ழு­வுடன் வந்­துள்­ளீர்கள். இதனால் எமக்கு எதுவும் பலன் கிடைக்கும் என தெரி­ய­வில்லை'' என அவர் இதன்­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

''தொடர்ந்து பல வரு­டங்­க­ளாக  விசா­ர­ணைக்­காக வந்து போகிறோம். காணாமல் போன­வர்­களில் குடும்­பங்­க­ளுக்­கு­ரிய நிவா­ரண உத­வி­களோ அல்­லது சிறு­வர்­க­ளுக்­கான உத­வி­களோ எது­வு­மின்றி  கஷ்­டப்­ப­டு­கின்­றனர். அனே­க­மான குடும்­பங்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்­கின்­றன. தமது உற­வு­களைப் பறி­கொ­டுத்து மன நோயால் பாதிக்­கப்­பட்ட நிலை­யிலும் பல குடும்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன'' என்றும் அவர் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதே­வேளை மேற்­படி விசா­ரணை அமர்­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து வடக்கில் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர். இவ்­வா­றான எத்­த­னையோ ஆணைக்­கு­ழுக்கள் முன்­னி­லையில் தாம் வாக்­கு­மூ­லங்­களை அளித்தும் இது­வரை ஆக்­க­பூர்­வ­மான எந்த பதிலும் தமக்கு கிடைக்­க­வில்லை என்றும் இந்த அலு­வ­ல­கத்தின் செயற்­பா­டு­களில் தமக்கு நம்­பிக்­கை­யில்லை என்றும் அவர் இதன்­போது ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்­டனர்.

எனினும் காணாமல் போனோரின் உற­வி­னர்கள் மத்­தியில் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பக் கூடிய வகையில் காணாமல் போனோ­ருக்­கான காரி­யா­லயம் செயற்­ப­டு­கி­றது என்று அதன் ஆணை­யாளர் கலா­நிதி நிமல்கா பெர்­னாண்டோ தெரி­வித்­துள்ளார்.  காணாமல் போனோர் தொடர்பில் விரி­வான விசா­ர­ணை­களை காரி­யா­லயம் முன்­னெ­டுத்து வரு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தக் கூடிய வகையில், சில தீர்­வு­களை வழங்க வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் வலி­யு­றுத்­தி­யுள்ள அவர் இது எமது சமூக கட­மை­களில் ஒன்று என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை காணாமல் போனோரின் உற­வி­னர்கள் மத்­தியில் கருத்து வெளி­யிட்ட    காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், ''உட­னடித் தீர்வு என்ற பொய்­யான வாக்­கு­றுதி தர­மாட்டேன். காணாமல் போனோரைக் கண்டு பிடிப்­ப­தென்­பது மிகவும் சிக்­க­லான விடயம். ஆனால் உங்­க­ளுக்குப் பொய்­யான வாக்­கு­றுதி தந்து ஏமாற்­ற­மாட்டேன். காணாமல் போனோர் தொடர்­பாக பக்­கச்­சார்­பற்ற, சுயா­தீ­ன­மான விசா­ர­ணை­களை நடாத்­துவோம். பிர­தேச காரி­யங்­களை உங்­க­ளிடம் இருக்கும் தக­வல்­களை உத்­தி­யோ­கத்­தர்­க­ளிடம் வழங்கி ஆத­ரவு வழங்­குங்கள் '' என்றும் கோரிக்கை விடுத்­துள்ளார்.

காணாமல் போனோரின் அலு­வ­லக காரி­யா­ல­யங்­க­ளாக வடக்கில் 5 கிளைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அந்த 5 கிளை­களின் ஊடாக காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் விட­யங்கள் ஆரா­யப்­பட்டு உரிய தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் 1983 –---2009 போர் காலத்தில், சுமார் 20 ஆயிரம் பேர் வரை காணாமல் போன­தாக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட காணாமல் போனோர் பற்­றிய விசா­ர­ணைக்­கு­ழுவின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.  எனினும் யுத்த கால குடி­மக்கள் கணக்­கெ­டுப்­பின்­படி ஒரு இலட்­சத்து 40 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் காணாமல் போயி­ருப்­ப­தாக மன்னார் ஆயர் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் முறை­யிட்­டி­ருந்தார்.

இப் பின்­ன­ணியில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளது குடும்ப உறுப்பினர்களது இறுதி நம்பிக்கையே இந்த அலுவலகமாகும். அந்த வகையில் இலங்கையில் காணமால் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு ஆயிரக் கணக்கான இந்த மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கென நியமிக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறோம்.
-VIdivelli