Verified Web

மரண தண்டனையை நிறைவேற்ற கயிறு தயார்

10 days ago MFM.Fazeer

 மரண தண்­டனைக் கைதி­க­ளாக சிறையில் இருந்­து­கொண்டு போதைப்­பொருள் வர்த்­த­கத்தை முன்­னெ­டுக்கும் போதைப் பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­ட­னையை நிறை­வேற்ற அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதனை நிறை­வேற்ற சிறையில் அடிப்­படை வச­திகள் இன்னும் பூர்த்தி செய்­யப்­ப­டாது உள்­ள­தாக சிறைச்­சாலை ஊடகப் பேச்­சாளர்  துஷார உப்­புல்­தெ­னிய  தெரி­வித்தார்.

 முக்­கி­ய­மாக  மரண தண்­ட­னையை நிறை­வேற்றும் அலு­கோசு எனும் பதவி நிலை தொடர்ந்தும் வெற்­றி­ட­மாக உள்­ள­தா­கவும் அப்­ப­த­விக்கு இருவர் அவ­சி­ய­மா­கி­யுள்­ளதால்,  அதற்­காக இரு­வரை இணைத்­துக்­கொள்ள நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும்  துஷார உப்­புல்­தெ­னிய தெரி­வித்தார். இதற்­கான நட­வ­டிக்­கை­களை சிறைச்­சாலை திணைக்­களம் முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

 எவ்­வா­றா­யினும் இலங்­கையின் ஐந்து சிறை­களில் மரண தண்­டனை கைதிகள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள போதும், மரண தண்­டனை நிறை­வேற்­றத்­தக்க தூக்­கு­மேடை வெலிக்­கடை சிறையில் மட்­டுமே உள்­ள­தா­கவும், அங்கு தூக்­கு­மேடை, தூக்குக் கயிறு என்­பன தயார்­நி­லையில் உள்­ள­போதும் அலு­கோ­சுக்­கான வெற்­றி­டத்தால் தற்­போ­தைக்கு அதனை பூர்த்­தி­செய்யும் வரை  மரண தண்­ட­னையை அமுல்­செய்­வதில் சிக்­க­லுள்­ள­தாக துஷார உப்­புல்­தெ­னிய சுட்­டிக்­காட்­டினார்.

 முன்­ன­தாக போகம்­பறை சிறையில் தூக்­கு­மேடை இருந்த போதும், தற்­போது அந்த சிறை பல்­லே­க­லைக்கு இட­மாற்­றப்­பட்­டுள்­ளதால் அங்கு அம்­மேடை இல்லை என சிறைச்­சாலை தக­வல்கள்  தெரி­வித்­தன.  வெலிக்­கடை, மஹர,  பல்­லே­கலை,  அனு­ரா­த­புரம் மற்றும் பதுளை ஆகிய சிறை­க­ளி­லேயே மரண தண்­டனைக் கைதிகள் தடுத்து வைக்­கப்பட்­டுள்ள நிலையில், பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் மரண தண்­டனை விதிக்­கப்பட்டு, மேன் முறை­யீட்­டிலும் அது உறுதி செய்­யப்­பட்ட கைதிகள் 374 பேர் அச்­சி­றை­களில் உள்­ளனர். அதில் வெலிக்­கடை சிறையில் மட்டும் போதைப்­பொருள் தொடர்பில் மரண தண்­டனை உறுதி செய்­யப்­பட்ட 17 கைதிகள் உள்­ள­தாகக் கூறும்  சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் துஷார உப்­புல்­தெ­னிய, ஏனைய சிறை­களில் உள்­ள­வர்கள் தொடர்­பிலும் தகவல் கோரப்பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் நேற்­று­வரை மரண தண்­டனை நிறை­வேற்ற முடி­யு­மான கைதி­களின் பட்­டியல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. நீதி­ய­மைச்சின் செய­லாளர்  மங்­க­லிகா அதி­கா­ரியின் தகவல்படி,  மரண தண்டனைக் கைதிகளில் தண்டனை நிறைவேற்ற முடியுமானவர்கள் தொடர்பில், வழக்குக் கோவைகளை பரீசிலித்து வருவதாகவும் இன்னும் ஒருவார காலத்தில்  பெயர் பட்டியல் அடங்கிய கோவைகளை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியுமாக இருக்கும் எனவும்  கூறினார். 
-Vidivelli