Verified Web

இஸ்­ரேலினால் காஸா எல்லை மூடப்­பட்­டமை தொடர்பில் ஐ நா விசனம்

2018-07-12 05:26:55 M.I.Abdul Nazar

காஸா பள்­ளத்­தாக்­கு­ட­னான தனது பொருட்கள் கொண்டு செல்­வ­தற்­கான கட­வை­யினை இஸ்ரேல் மூடி­யமை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபை விமர்­சித்­துள்­ள­தோடு, இது எதிர்­மறை விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளது.

இஸ்ரேல் தனது தீர்­மா­னத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும் என ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட இணைப்­பாளர் நிக்­கோலே மிலாண்­டனேவ் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

கடந்த சில மாதங்­க­ளாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இஸ்­ரே­லியப் பிர­தே­சத்­தினுள் பறக்­க­வி­டப்­ப­டு­கின்ற எரியும் தன்மை கொண்ட பட்­டங்கள் மற்றும் ஹீலியம் நிரப்­பப்­பட்ட பலூன்­க­ளினால் ஏற்­ப­டுத்­தப்­படும் தீயினைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அத்தியவசிய மனிதாபிமான விநியோகம் தவிர்ந்த அனைத்து விநியோகங்களுக்கும் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலினால் கெரீம் ஷலோம் (எல்லைக்) கடவை மூடப்பட்டது.

ஹமாஸை பலவீனப்படுத்துவதற்காக பல தசாப்தங்களாக இஸ்ரேலும் எகிப்தும் தடைகளை விதித்து வருகின்றன. இத் தடைகள் காரணமாக காஸாவில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தற்போதைய எல்லைக் கடவை மூடலினால் ஏற்படவுள்ள விளைவுகள் தொடர்பில் கவலையடைவதாக மிலாண்டனேவ் தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் வணிகச் செயற்பாடுகளுக்கு மனிதாபிமான உதவிகள் மாத்திரம் போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ள மிலாண்டனேவ் காஸாவிலுள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களும் தமது பகுதியில் அமைதியைப் பேணுவதோடு எரியும் தன்மைகொண்ட பட்டங்கள் விடுவதனையும் ஏனைய ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மேற்கொள்ளப்பட்டுவரும் எல்லைக்கருகிலான ஆர்பாட்டங்களின் போது ஆரம்பிக்கப்பட்ட எரியும் தன்மைகொண்ட பட்டங்களை விடும் நடவடிக்கைகள் காரணமாக பெருமளவிலான இஸ்ரேலியப் பண்ணை நிலங்கள் எரிந்துபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli