Verified Web

இறக்­கு­மதி செய்­யப்­பட்ட டின்மீன் குறித்த பிரச்­சினை

2018-07-12 05:02:47 Administrator

'அண்­மைக்­கா­ல­மாக டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன் விவ­காரம் தொடர்பில் பல பிரச்­சி­னைகள் எழுந்­தன. இதனால் சீனாவில் மீன்கள் விநி­யோகம் செய்யும் பிர­தி­நி­திகள் குழுவை நாங்கள் இலங்­கைக்கு வர­வ­ழைக்க விரும்­பு­கின்றோம்' என கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம்  கைத்­தொழில் அமைச்சில், டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன்­களின் இறக்­கு­மதி தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்­பெற்ற சந்­திப்­பொன்­றின்­போதே அமைச்சர் இதனை தெரி­வித்தார்.

கொழும்­பி­லுள்ள சீனத் தூத­ர­கத்தின் இரண்டாம் செய­லா­ள­ரான ரன்­சியோங் மற்றும் சீன தூத­ரகம், சுங்கத் திணைக்­களம், இறக்­கு­ம­தி­யா­ளர்கள், இலங்கை நிய­மங்கள் நிறு­வனம் மற்றும் சுகா­தார அமைச்சு ஆகி­ய­வற்றின் அனைத்து பங்­கு­தா­ரர்­களும் இச்­சந்­திப்பில் இணைந்­து ­கொண்­டனர்.

அமைச்சர் ரிஷாட் இச்­சந்­திப்பில் மேலும் கருத்து தெரி­விக்­கையில்: “நாளாந்த வாழ்க்கை செல­வி­னத்தை நிர்­வ­கிப்­பதில் ஒரு முக்­கி­ய­மான அம்­ச­மாக விளங்கும் டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன்கள் உள்ளூர் நுகர்­வோரால் பாரி­ய­ளவில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. 60 இலங்கை நிறு­வ­னங்கள் வரு­டத்­திற்கு 40 மில்­லியன் கிலோ­வினை உள்ளூர் சந்­தைக்கு இறக்­கு­மதி செய்­கின்­றன. சீனா­வி­லி­ருந்து டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன் விநி­யோ­கத்­தினை 2018 ஆம் ஆண்டு மே மாதத்­தி­லி­ருந்து இலங்கை பெற்­றுக்­கொள்­ள­வில்லை. இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்ட டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன்­களில் புழுக்கள் இருப்­பதை இலங்கை சுங்க அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்­த­தோடு, சுங்­கத்­தினால் இறக்­கு­ம­திகள் தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக செய்தி ஊடங்­களில் பர­வ­லாக பதி­வா­கி­யது. சில டின்கள் மறு ஏற்­று­மதி செய்­யப்­பட வேண்டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது. இதன் விளை­வாக, பெப்­ர­வரி மாதம் முதல்  உள்ளூர்  துறை­மு­கங்­களில் உள்ளூர் சந்­தை­க­ளுக்­கென இறக்­கப்­பட்ட டின் மீன்­களில் சில   சிதைந்த மற்றும் தகு­தி­யற்­றது எனவும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. சீன விநி­யோ­கஸ்­தர்­க­ளி­ட­மி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட  31 சரக்­கு­களில்  3 ஒட்­டுண்­ணிகள் பரவி யிருந்­த­தை­ய­டுத்து உள்ளூர் சந்­தை­க­ளுக்கு இவை விடு­விப்­பது தகு­தி­யற்­றது இலங்கை நிய­மங்கள் நிறு­வ­னமும் மற்றும் சுகா­தார அமைச்சின் உணவு கட்­டுப்­பாட்டு திணைக்­க­ளமும் இணைந்து  தீர்­மா­னித்­தன. 0 முதல் மூன்று வரை­யி­லான இடை­வெளி ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கது. ஆனால் இந்த சரக்குப் பொருட்­களில் அதிக அளவு ஒட்­டுண்­ணிகள் இருந்­தன.

92 கொள்­க­லன்­களில், சீன விநி­யோ­கஸ்­தர்­க­ளி­ட­மி­ருந்து  டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன்கள் இந்த ஆண்டு தொடக்­கத்தில் வந்து சேர்ந்­தன. அத்­துடன் 80 கொள்­க­லன்கள் சான்­றிதழ் வழி­மு­றை­களை அடிப்­ப­டை­யாக இலங்கை அதி­கா­ரி­க­ளினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. எங்கள் அதி­கா­ரிகள் தங்கள்  கட­மை­களை சரி­யாக செய்­துள்­ளனர். இருப்­பினும், டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன் இறக்­கு­ம­தியின் முழு­மை­யான நிறுத்தம் எங்கள் நுகர்­வோரை பாதிக்கும் அதே­வேளை, சந்­தையில் பற்­றாக்­கு­றையும் ஏற்­ப­டலாம்.  சீன அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­களை நாங்கள் அழைக்க விரும்­பு­கிறோம். சிநேக பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் இந்த சூழ்­நி­லையைத் தீர்ப்­ப­தற்கு சீன அதி­கா­ரிகள் எங்­களை ஆத­ரிப்­பார்கள் என்­பதில் உறு­தி­யாக உள்ளோம். இந்தப் பிரச்­சி­னையை எதிர்­கொண்ட தங்­க­ளு­டைய சொந்த ஏற்­று­ம­தி­யா­ளர்கள், எமது சுகா­தாரத் தரங்­களை கருத்­திற்­கொள்ள வேண்டும். இந்த சூழ்­நி­லையை இணக்­க­மான பேச்­சு­வார்த்தை மூலம் தீர்க்க சீன அர­சாங்­கத்தின் ஆத­ரவை நாங்கள் எதிர்­பார்க்­கிறோம். சீன சுகா­தார அதி­கா­ரிகள் இந்த பிரச்­சி­னையை எதிர்­கொண்­டுள்ள எங்­க­ளது சுகா­தாரத் தரத்தை பூர்த்தி செய்ய எங்­க­ளுக்கு உத­வு­வார்கள் என்று நாங்கள் நம்­பு­கிறோம். இலங்கை நிய­மங்கள் நிறு­வ­னத்தின் தரத்­திற்கு இணங்க எங்கள் இறக்­கு­ம­தி­யா­ளர்­க­ளுக்கு அர­சாங்க அதி­கா­ரி­க­ளா­கிய நாங்கள் ஆத­ர­வ­ளிக்கத் தயா­ராக உள்ளோம். இந்த விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு சீனா­வி­லி­ருந்து இலங்­கைக்கு டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன்  விநி­யோகம் செய்யும் சீன பிர­தி­நி­தி­களை நாங்கள் அழைக்­கிறோம். அதன் பின்னர் இறுதி முடி­விற்­கான சந்­திப்­பிற்கு இலங்கை இறக்­கு­மதி பிர­தி­நி­தி­களை; பெய்­ஜிங்­கிற்கு அனுப்­புவோம்” என்றார் அமைச்சர்.

இலங்கை டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன் சங்­கத்தின் செய­லாளர் சத்­துர விக்­கி­ர­ம­நா­யக்க அமைச்­சரின் கருத்­துக்­க­ளுக்கு உடன்­பட்டார். 'சீனாவில் பெரு­ம­ள­வி­லான ஏற்­று­ம­தி­யா­ளர்கள் உள்­ளனர். சில சம­யங்­களில் இவ்­வாறு கவ­ன­யீ­ன­மாக ஒரு முறை நடக்­கலாம். 22 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் இலங்­கையில் இதே­போல நடந்­தது. ஆனால் இவை சிலி­யி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட மீன்கள். கடந்த 8 ஆண்­டு­க­ளாக நாங்கள் சீனா­வி­லி­ருந்து மீன் இறக்­கு­மதி செய்து வரு­கிறோம். சில நேரங்­களில் சில கெட்­டுப்­போன டின்கள் கல­வை­யா­னவை தவிர,  சீன பொருட்கள் மோச­மா­ன­வை­யல்ல. சீன ஏற்­று­ம­தி­யா­ளர்கள் இப்­போது படிப்­ப­டி­யா­கவும், நம்­ப­க­மான விநி­யோ­கஸ்­தர்­க­ளா­கவும் இருப்­ப­தாக நாங்கள் நம்­பு­கிறோம். இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் தர­நி­லை­களின் மாற்­றங்­களை விநி­யோ­கஸ்­தர்கள் பெய்­ஜிங்கில் அதனை புதுப்­பிப்­பா­ர்கள் என நாங்கள் நம்­பு­கிறோம்' என செய­லாளர் விக்­கி­ர­ம­நா­யக்க சுட்­டிக்­காட்­டினார்.

டின்­களில் அடைக்­கப்­பட்ட மீன் இறக்­கு­ம­திக்கு நாங்கள் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை என இலங்கை நிய­மங்கள் நிறு­வனம் மற்றும் சுகா­தார அமைச்சின் உத்­தி­யோ­கத்­தர்கள் கூறி­யுள்­ளனர்.   ஆனால் இலங்­கைக்கு ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளாக இருந்தால் தரத்­தினை உறு­தி­செய்ய வேண்டும். இல்­லா­விடின் நிலை­யான கொள்­முதல் முறைமை    மீறல் ஏற்­ப­டலாம், இதனால் எமது வாடிக்­கை­யா­ளர்கள் பாதிக்­கப்­ப­டு­வார்கள்' என்று அவர்கள் வலி­யு­றுத்­தினர்.

இரு நாடு­களின் நல­னுக்­காக தரங்கள் பரா­ம­ரிக்­கப்­பட வேண்டும். இலங்கை அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து மேலும் தெளி­வு­ப­டுத்­தல்­க­ளுக்­கான ஆவ­ணங்கள் வர்த்­தக தீர்­வுகள் பிரி­வுக்கு தேவைப்­ப­டு­கின்­றன.   எமது ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு சரி பார்ப்­ப­தற்கு ஒரு இடை­நிலை காலத்­திற்கு நாங்கள் அழைப்பு விடுக்­கின்ற அதே­வேளை, இலங்­கையின் திருத்­தப்­பட்ட தரத்­திற்கு நாங்கள் உடன்­ப­டு­கிறோம். தற்­போது நாங்கள் எங்கள் சீன விநி­யோ­கஸ்­தர்கள்  மற்றும் சீன சம்­மே­ள­னங்­க­ளுடன்  கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடுபட்டு வருகின்றோம்.  அனைத்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இலங்கை இறக்குமதியாளர்கள்  இந்தப் பிரச்சினையை ஒத்துழைப்புடன் தீர்க்கப்பட முடியும் என  நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரான ரன்சியோங் வலியுறுத்தினார்.

வர்த்தகத் திணைக்களத்தின் அறிக்கையின் படி, சீனாவிலிருந்து டின்களில் அடைக்கப்பட்ட மீன்களின் இறக்குமதி சமீபத்திய ஆண்டுகளில் சீராக அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2014 ஆம் ஆண்டில் 4.85 மில்லியன்  டொலராகவும், 2015 ஆம் ஆண்டில் 9.65 மில்லியன் அமெரிக்க டொலராகவும், 2016 ஆம் ஆண்டில் எட்டு மடங்கு அதிகரித்துள்ள 16.85 மில்லியன் அமெரிக்க டொலராக ஒரு பெரிய அதிகரிப்பை காட்டிள்ளது.
-Vidivelli