Verified Web

மாதாந்தம் பத்தாம் திகதியன்று எரிபொருள் விலை நிர்ணயம்

10 days ago ARA.Fareel

எதிர்­கா­லத்தில் பிரதி மாதமும் 10 ஆம் திகதி எரி­பொருள் விலை­யினை நிர்­ணயம் செய்­வ­தென ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற நிதி­ய­மைச்சு, பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சின் அதி­கா­ரிகள் மற்றும் அமைச்­சர்கள் கலந்­து­கொண்ட கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. எரி­பொருள் விலையில் வீழ்ச்சி ஏற்­பட்டால் அல்­லது அதி­க­ரிப்பு ஏற்­பட்டால் அதற்­கி­ணங்க விலையில் மாற்­றங்கள் செய்­யப்­படும் என சுகா­தாரம் போசணை மற்றும் சுதேச மருத்­துவ அமைச்­சரும் அமைச்­ச­ர­வையின் இணை ஊடக பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

நேற்று தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­துள்­ள­தா­வது;

"செவ்­வாய்க்­கி­ழமை எரி­பொ­ருட்­களின் விலையில் ஏற்­பட்ட அதி­க­ரிப்பில் ஒரு பகு­தியே சேர்க்­கப்­பட்­டுள்­ளது. 14 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டிய பெற்றோல் 8 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எஞ்­சிய 6 ரூபாவை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

புதிய விலை சூத்­தி­ரத்­துக்கு அமை­வா­கவே எதிர்­கா­லத்தில் எரி­பொ­ருட்­களின் விலை நிர்­ண­யிக்­கப்­படும். மாதத்­துக்கு ஒரு முறை சிங்­கப்­பூரின் எரி­பொருள் விலை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எரி­பொருள் விலை இலங்­கையில் நிர்­ண­யிக்­கப்­படும்.

எரி­பொருள் விலை­யேற்­றத்­தினை அடிப்­ப­டை­யாக வைத்து தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது. அவ்வாறு அதிகரிப்பார்கள் என்றால், எரிபொருள் விலை குறையும்போது அவர்கள் பஸ் கட்டணங்களைக் குறைக்க வேண்டியேற்படும்" என்றார்.
-Vidivelli