Verified Web

பாரா­ளு­மன்­றத்தில் தமிழ் மொழி வகுப்பை புறக்­க­ணிக்கும் எம் பி க்கள்

10 days ago MFM.Fazeer

தேசிய மொழிகள் கொள்­கைக்கு அமைய, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கென ஆரம்­பிக்­கப்­பட்ட தமிழ், சிங்­கள வகுப்­பு­களை பெரும்­பா­லான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் புறக்­க­ணிப்­ப­தாக தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்­லி­ணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். சிங்­கள மொழி பேசும் எம்.பிக்­க­ளுக்கு தமிழ் மொழி­யையும், தமிழ் மொழி பேசும் எம்.பிக்­க­ளுக்கு சிங்­கள மொழி­யையும் பயிற்­று­விக்கும் வித­மாக பாரா­ளு­மன்­றி­லேயே நடாத்­தப்­படும் இந்த வகுப்­பு­க­ளுக்கு ஆரம்­பத்தில் பெரும்­பா­லான எம்.பிக்கள் வருகை தந்­த­போதும் தற்­போது ஓரி­ரு­வரே கலந்­து­கொள்­வ­தாக அவர் கூறினார்.

 இந்த மொழி வகுப்­புகள் ஆரம்­பிக்கும் நிகழ்வில் சபா­நா­யகர் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்­ட­தா­கவும், அதன்­போது அந்த வகுப்பு தொடர்பில் கொடுக்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வத்­துடன் ஒப்­பீடு செய்­யும்­போது, தற்­போது அந்த வகுப்­பு­களின் நிலை பரி­தா­ப­க­ர­மாக உள்­ள­தாக அவர் கூறினார்.

 இத­னை­விட பாரா­ளு­மன்­றத்தில், அர­ச­க­ரும மொழி­யான தமிழில் ஒருவர் உரை­யாற்­றும்­போது, மொழி பெயர்ப்­புடன் வழங்­கப்­படும் செவி­ம­டுப்­பானைக் கூட மாட்டி அந்த உரையைச் செவி­ம­டுக்­காது, பாரா­ளு­மன்­றி­லி­ருந்தே வெளியில் செல்லும்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்­றத்தில் உள்­ள­தா­கவும் இந்­நி­லைமை ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல எனவும் அமைச்சர் மனோ தெரி­வித்தார்.

 எனவே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி அறிவினை கட்டாய தகைமையாகக் கொண்டுவர வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-Vidivelli