Verified Web

போதைக்கு எதிரான பாரிய யுத்த பிரகடனம் அவசியம்

2018-07-12 03:49:09 Administrator

நாட்டில் மீண்டும் போதைப் பொருள் விவ­காரம் பார­தூ­ர­மான பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. கடந்த ஒரு வார காலப்­ப­கு­தியில் மாத்­திரம் பெருந்­தொகை போதைப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­மையே இதற்குக் கார­ண­மாகும்.

கடந்த சனிக்­கி­ழமை 1248 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான 103 கிலோ கிராம் எடை­யு­டைய ஹெரோயின் போதைப் பொருள் களு­போ­வில மற்றும் பத்­த­ர­முல்ல ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து கைப்­பற்­றப்­பட்­ட­மை­யா­னது பலத்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­தி­ருந்­தது.

1973 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் கைப்­பற்­றப்­பட்ட மிகப் பாரிய தொகை போதைப் பொருள் இது­வாகும். இதில் கவ­னிக்­கத்­தக்க அம்சம் என்­ன­வெனில், இந்த போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநி­யோ­கத்தை வழி­ந­டத்­தி­யவர் ஏலவே 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்­திய குற்­றச்­சாட்டில் கைதாகி தற்­போது மரண தண்­டனை அனு­ப­வித்து வரும் கைதி ஒருவர் என்­ப­தே­யாகும். சிறை­யி­லி­ருந்­த­வாறே அவர் வெளி­யி­லுள்ள நபர்கள் மூல­மாக இந்த வர்த்­த­கத்தை மேற்­கொண்டு வந்­துள்ளார்.

அதே­போன்­றுதான் நேற்­றைய தினம் 118 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான 9.9 கிலோ ஹெரோயின் மாவ­டிச்­சேனை , சேரு­வ­வில பகு­தி­யி­லி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் இந்­தி­யா­வி­லி­ருந்து தபால் மூல­மாக இலங்­கைக்கு அனுப்­பப்­பட்ட 3 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோ­யினும் சுங்கப் பிரிவால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

கடந்த ஜூன் 14 ஆம் திகதி 25 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான 2 கிலோ ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டது. கடந்த மே மாத்தில் மாத்­திரம் பாரிய தொகை போதைப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட 4 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

பொலிஸ் திணைக்­கள புள்­ளி­வி­ப­ரங்­க­ளுக்­க­மைய கடந்த மூன்­றரை ஆண்­டு­களில் மாத்­திரம் 2500 கிலோ போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் இவை தொடர்பில் 1 இலட்­சத்­துக்கும் அதி­க­மான சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 8 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 25 ஆயிரம் பேருக்கு கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வா­றி­ருந்த போதிலும் நாட்டில் போதைப் பொருள் கடத்தல், விநி­யோகம், பாவனை என்­பன குறைந்­த­பா­டில்லை. என­வேதான் நாட்­டையும் நாட்டின் எதிர்­கால சந்­த­தி­யையும் குட்டிச் சுவ­ராக்கும் வகையில் பெரும் தலை­யி­டி­யாக உரு­வெ­டுத்­துள்ள இந்த விவ­கா­ரத்தை கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் மிகவும் இறுக்­க­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அந்­த­வ­கையில் போதைப் பொருள் குற்­றச்­சாட்டில் சிறை­யி­லுள்ள 19 பேருக்கும் மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க நகர்­வாகும். இதற்­க­மைய போதைப் பொருள் குற்­றச்­சாட்டில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளோ­ருக்கு அத்­தண்­ட­னையை நிறை­வேற்றும் வகையில் கையொப்­ப­மிட்டு அனு­ம­தியை வழங்க தான் தயார் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்­றைய தினம் கண்­டியில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் குறிப்­பிட்­டுள்­ள­மையும் இந்த இடத்தில் கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

பிலிப்­பைன்ஸில் அந்­நாட்டு ஜனா­தி­பதி ரொட்­ரிகோ,  போதைப் பொருள் மாபி­யாவை ஒழித்­துக்­கட்ட முன்­னெ­டுத்து வரும் ஈவி­ரக்­க­மற்ற நட­வ­டிக்­கைகள் போன்று இலங்­கை­யிலும் போதைப் பொருள் மாபி­யா­வுக்கு எதி­ரான பாரிய யுத்தம் பிர­க­டனம் செய்­யப்­ப­டா­த­வரை இதன் மூலம் ஏற்படப் போகும் அழிவிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது கஷ்டமாகும்.

அந்தவகையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலமும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதன் மூலமுமே எமது எதிர்கால சந்ததியை பாதுகாக்க முடியும். இன்றேல் இலங்கை போதைப் பொருள் வியாபாரிகளின் உல்லாச புரியாக மாறும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது மட்டும் திண்ணம்.
-Vidivelli