Verified Web

போதைப்பொருளை கட்டுப்படுத்த முப்படையினருக்கு அதிகாரம்

10 days ago ARA.Fareel

நாட்டில் அதி­க­ரித்­துள்ள போதைப்­பொருள் நட­வ­டிக்­கை­களை முற்­றாகக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக முப்­ப­டை­யி­ன­ருக்கு ஒரு குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்கு சில அதி­கா­ரங்­களை வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இது தொடர்பில் முப்­ப­டை­யி­ன­ருக்கு சட்­டமா அதி­ப­ரினால் சிபார்சு செய்­யப்­பட்ட சில அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்­காக விசேட ஒழுங்கு விதிகள் தொடர்­பான  திருத்தச் சட்­டத்தை தயா­ரிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

நாட்டில் அதி­க­ரித்து வரும் போதைப்­பொ­ருளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக தற்­போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணி­யகம் உட்­பட பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை மற்றும் இரா­ணு­வத்தின் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

எனினும் போதைப்­பொருள் நட­வ­டிக்­கை­களை முற்றும் முழு­தாக கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்ற வகை­யிலே முப்­ப­டை­யி­னதும் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக விசேட ஒழுங்கு விதிகள் தொடர்­பான திருத்தச் சட்டம் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் அரச நிர்­வாகம், முகா­மைத்­துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
-Vidivelli