Verified Web

எகிப்­தில் மூன்று சிறு­வர்­களின் சட­லங்கள் குப்பையிலிருந்து மீட்பு

10 days ago M.I.Abdul Nazar

கறுப்பு குப்பைப் பையினால் சுற்­றப்­பட்டு உடல் சிதைந்த நிலையில் காணப்­பட்ட மூன்று சிறு­வர்­களின் சட­லங்கள் கெய்ரோ வீதி­யொன்றின் அரு­கி­லி­ருந்து செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று மீட்­கப்­பட்­ட­தாக உள்ளூர் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

பெண்­ணொ­ருவர் கெய்­ரோவின் மெட்­ரி­யோ­டேயா மாவட்­டத்தில் வேலைக்­காகச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது குப்­பைகள் காணப்­பட்ட இடத்தில் நாய்கள் சண்­டை­யிட்­டுக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­துள்ளார். குப்­பையில் கிடக்கும் பொருட்­க­ளுக்­காக சண்டை பிடிக்­கின்­றன என அவர் நினைத்துக் கொண்டார். ஆனால் அருகில் சென்­ற­போ­துதான் மனிதத் தலை­யினை அவ­தா­னித்­துள்ளார்.

ஆரம்ப கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து குறித்த உடல்கள் ஒரு வருடக் குழந்தை மற்றும் மூன்று மற்றும் ஐந்து வய­து­டைய சிறு­வர்­களின் உடல்கள் என தெரி­ய­வந்­துள்­ளது.  சிறு­வர்கள் வெட்­டுக்­கா­யங்­க­ளினால் உயி­ரி­ழந்­துள்­ளார்கள் என உள்ளூர் வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்ள போதிலும், சிறு­வர்கள் எவ்­வாறு இறந்­தார்கள் எனத் தெரி­ய­வ­ர­வில்லை.
-Vidivelli