Verified Web

2020 இல் தனி ஆட்சி அமைப்­பதே நோக்கம்

10 days ago MFM.Fazeer


2020 ஆம் ஆண்­டாகும் போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் ஒன்றை அமைப்­பதே கட்­சியின் நோக்கம் என கட்­சியின் பொதுச் செய­லாளர் பேரா­சி­ரியர் ரோஹன ல­க்   ஷ்மன் பிய­தாஸ தெரி­வித்­துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றை அடுத்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

கடந்த தேர்­தலில் மக்கள் எதிர்ப்பு தெரி­வித்­தது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு இல்லை, ஐக்­கிய தேசியக் கட்­சிக்​கே எனவும் கடந்த தினத்தில் இடம்­பெற்ற மத்­திய செயற்­குழு கூட்­டத்தின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த­தா­கவும் கட்­சியின் வளர்ச்­சிக்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னொ­டுக்­கப்­பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-VIDIVELLI