Verified Web

இஸ்­ரே­லுக்­காக உளவு பார்த்த ஏழு பேருக்கு லெபனான் நீதி­மன்றம் கடூ­ழிய சிறைத் தண்­டனை

10 days ago M.I.Abdul Nazar

இஸ்ரேல் அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து இஸ்­ரே­லிய மொசாட் உளவு முக­வ­ர­கத்­திற்­காக உள­வு­பார்த்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் லெபனான் இரா­ணுவ நீதி­மன்றம் ஏழு லெபனான் பிர­ஜை­க­ளுக்கு அவர்கள் சமு­க­ம­ளிக்­காத நிலையில் கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீனப் பிர­தே­சங்­க­ளுக்கு எல்லை கடந்து சென்­றமை, இஸ்ரேல் அதி­கா­ரி­க­ளுடன் பணி­யாற்­றி­யமை மற்றும் அங்கு வசிப்­ப­தற்கு அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றி­ருந்­தமை என்­ப­வற்­றிற்­காக குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்­ட­தை­ய­டுத்து பிரி­கே­டியர் ஜெனரல் ஹுஸைன் அப்­துல்லாஹ் தலை­மை­யி­லான நீதி­மன்றம் பாதி ஹாஷெம், சார்பெல் ஹாஷெம், மரௌன் ஹாஷெம் மற்றும் லினா ஆனிட் ஆகி­யோ­ருக்கு எதி­ராக கடந்த செவ்­வாய்­க்கி­ழமை தீர்ப்பு வழங்­கிது. அத்­துடன் லெபனான் குடி­யு­ரி­மையும் நீதி­மன்­றத்­தினால் பறிக்­கப்­பட்­டது.

மேலும் மூன்று எதி­ரா­ளி­க­ளான சலாம் பகௌரி, ஆசாட் சக்ர் மற்றும் அன்­டெ­யினேட் அல்-­நதாப் ஆகி­யோ­ருக்கு இஸ்­ரே­லுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­மைக்­காக அவர்கள் சமு­க­ம­ளிக்­காத நிலையில் 15 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தோடு இம் மூவ­ரி­னதும் குடி­யு­ரி­மையும் பறிக்­கப்­பட்­டது.

கடந்த வருடம் ஜன­வரி மாதம் மொசாட்­டுக்­காகப் பணி­யாற்­றிய ஐந்து பேர் லெபனான் பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டனர்.

இவர்கள் ஐந்து பேரும் துருக்கி, ஜோர்தான், பிரிட்டன் மற்றும் நேபாளம் ஆகிய நாடு­க­ளி­லுள்ள இஸ்ரேல் தூத­ர­கங்­க­ளி­னூ­டாக மொசாட்­டுக்கு தக­வல்­களை வழங்­கி­ய­தாக லெப­னானின் பொதுப் பாது­காப்­புக்­கான பணி­ய­கத்தின் ஊடக அலு­வ­லகம் அறிக்­கை­யொன்றின் மூலம் அறி­வித்­தது.
-Vidivelli