Verified Web

ட்ரம்பின் உடன்­பாட்டுத் திட்­டத்­தினை நிரா­க­ரித்­தது ஹமாஸ் அமைப்பு

10 days ago M.I.Abdul Nazar

நூற்­றாண்டின் உடன்­ப­டிக்கை எனக் கூறப்­படும் வொஷிங்­டனின் உடன்­பாட்டுத் திட்­டத்­தினை நிரா­க­ரிப்­ப­தா­கவும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களைத் தொட­ரப்­போ­வ­தா­கவும் பலஸ்­தீன மக்­களின் எதிர்ப்பு இயக்­க­மான ஹமாஸ் அறி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் திட்டம் பலஸ்­தீன மக்­களின் சட்ட ரீதி­யான உரி­மை­களை மீறு­வதை உள்­ள­டக்­கி­யுள்­ளது என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஹமாஸ் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்துக் குறிப்­புக்­களும் பிர­தா­ன­மாக, மீளத் திரும்­பு­வ­தற்­கான உரிமை, எமது நிலங்­களை விடு­வித்து ஜெரூ­சலம் அல்-­குத்ஸை தலை­ந­க­ராகக் கொண்ட சுதந்­திர தேசத்தை உரு­வாக்­குதல் உள்­ளிட்ட எமது சட்­ட­ரீ­தி­யான உரி­மை­களை மீறு­வ­தாக அமைந்­துள்­ளன என அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்க தூத­ரகம் டெல் அவி­வி­லி­ருந்து ஜெரூ­ச­லத்­திற்கு மாற்­றப்­பட்­டமை பாரிய சூழ்ச்சி எனத் தெரி­வித்­துள்ள ஹமாஸ் பலஸ்­தீ­னத்­தி­லுள்ள அனைத்துப் பிரி­வு­களும் அமெ­ரிக்­க-­இஸ்ரேல் நட­வ­டிக்­கை­களை எதிர்­கொள்ள ஒன்­றி­ணை­யு­மாறும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

தற்­போ­தைய சூழ்­நிலை உள்­ளக இணக்­கப்­பாட்­டி­னையும் உண்­மை­யான பலஸ்­தீன ஒற்­று­மை­யி­னையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மிகச் சிறந்த தருணம் என நம்­பு­வ­தா­கவும் ஹமாஸ் அவ்­வ­றிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

கடந்த வருட இறு­தியில் அமெ­ரிக்க நிரு­வா­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்ட இஸ்ரேல் - பலஸ்­தீ­னத்­திற்கு இடையே சமா­தான உடன்­பாட்டைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான திட்டம் எனத் தெரி­விக்­கப்­படும் இத் திட்டம் பின்­வ­ழியால் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தாகும். இத்­திட்டம் முழு­மை­யாக வெளி­யி­டப்­ப­டா­விட்­டாலும் கசிந்­துள்ள தக­வல்­க­ளின்­படி ஏற்­க­னவே முயற்­சித்து தோல்வி கண்ட விட­யங்­களே அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
-Vidivelli