Verified Web

19 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அங்கீகாரம்

10 days ago ARA.Fareel

போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரர்கள் 19 பேரை ஜனா­தி­பதி இனம் கண்­டுள்ளார். இவர்கள் மிக­வும பிர­பல்­ய­மான போதைப்­பொருள்  கடத்­தல்­கா­ரர்­க­ளா­வார்கள். இவ்வாறானவர்கள் தூக்­கி­லி­டப்­பட வேண்டும் என்று அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்வாறானவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றினை ஜனாதிபதி நீதியமைச்சரிடம் கோரியுள்ளார். அறிக்கை கிடைத்ததும் ஜனாதிபதி மரண தண்டனைக்கு கையொப்பமிடுவார்.

அத்­தோடு போதைப்­பொருள் கடத்­த­லையும், வர்த்­த­கத்­தையும், பயன்­பாட்­டி­னையும் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இரா­ணு­வத்தின் உத­வி­யையும் பெற்­றுக்­கொள்­வ­தற்குத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது என சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச மருத்­துவ அமைச்­சரும் அமைச்­ச­ர­வையின்  இணை ஊடகப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்­பெற்ற அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில் தெரி­வித்­த­தா­வது; போதைப்­பொருள் கடத்தல் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­பட்டு, குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்டு, மரண தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை வைக்­கப்­பட்­டி­ருக்கும் போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­களின் பெயர் உட்­பட முழு­மை­யான அறிக்­கையை தனக்கு சமர்ப்­பிக்­கும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் கோரி­யுள்ளார்.

போதைப்­பொ­ரு­ளுடன் தொடர்­பு­பட்டு, மரண தண்­டனை நிய­மிக்­கப்­பட்டு சிறையில் இருந்­து­கொண்டே மீண்டும் போதைப்­பொருள் விநி­யோகம் மற்றும் கடத்­தலை நெறிப்­ப­டுத்­து­ப­வர்கள் தொடர்பில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தும்­போது விஷேட கவனம் செலுத்­தப்­படும். இவ்­வா­றா­ன­வர்­களின் பெயர் பட்­டியல் நீதி­ய­மைச்­சி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்­றதும் ஜனா­தி­பதி மரண தண்­டனை வழங்­கு­வ­தற்கு கையொப்­ப­மி­டுவார்.

நீதி­ய­மைச்­சி­லி­ருந்து கிடைக்­கப்­பெறும் மரண தண்­டனை  நிய­மிக்­கப்­பட்டு, சிறையில் உள்­ள­வர்­களின் விப­ரங்கள் அடங்­கிய அறிக்­கை­யின்­ப­டியே மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும்.

நான் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை எதிர்த்­த­வ­னாவேன். மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டாமல் இருந்­தாலும் போதைப்­பொருள் குற்­றச்­செ­யல்கள் குறைந்­த­தாகத் தெரி­ய­வில்லை. அவ்­வா­றா­ன­வர்கள் சிறையில் இருந்­து­கொண்டே போதைப்­பொருள் கடத்­த­லையும், விநி­யோ­கத்­தையும் வழி நடத்­து­கி­றார்கள். அதனால் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வதன் மூலமே இந்த குற்­றச்­செ­யல்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடியும்.

பாரி­ய­ள­வி­லான போதைப்­பொருள் கடத்­த­லுடன் ஒன்­றுக்கு மேற்­பட்ட தட­வைகள் தொடர்­பு­பட்டு, மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள கைதிகள் தொடர்பில் முன்­னு­ரிமை வழங்கி மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­படும்.

மேலும், பல கொடூர குற்­றச்­செ­யல்கள், பாலியல் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் போன்ற குற்­றங்­க­ளுக்கு இவ்­வா­றான தண்­டனை வழங்க முடி­யுமா? என்று ஆரா­யப்­படும்.

இலங்­கை­யி­லி­ருந்து போதைப்­பொ­ருளை முற்­றாக இல்­லாமற் செய்­வ­தற்கு இவ்­வா­றான கடு­மை­யான சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். பிரேசில் நாட்டில் போதைப்­பொருள் மாபியா செயற்­ப­டு­கி­றது. பிரேஸில் ஜனா­தி­பதி போதைப்­பொ­ருளை கட்­டுப்­ப­டுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டார். மூன்று மாத கால­மாகப் பொலிஸ், இராணுவம் மூலம் முயற்சிகளை மேற்கொண்டும் முடியாமற்போனது. பின்பு கடற்படையின்  உதவியின் மூலம் முயற்சித்தார். அதனாலும் முடியாமற் போகவே விமானப்படை மூலம் குண்டெறிந்து முயற்சிகளை மேற்கொண்டார். அங்கு போதைப்பொருள் மாபியாக்கள் செயற்படுகின்றன.

இலங்கையில் முப்படைகளின் உதவியை பெற்றுக்கொள்வதுடன் மரண தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
-Vidivelli