Verified Web

ஆப்கான் யுத்­தத்தை நிறுத்­து­மாறு முஸ்லிம் அறி­ஞர்கள் கோரிக்கை

2018-07-11 22:40:40 M.I.Abdul Nazar

முஸ்­லிம்கள் தமக்­கி­டையே சண்­டை­யிட்டுக் கொள்­வது இஸ்­லாத்தில் கண்­டிப்­பாக தடை­செய்­யப்­பட்ட ஒன்­றாகும் எனத் தெரி­வித்­துள்ள ஆப்­கா­னிஸ்­தானில் சமா­தானம் மற்றும் பாது­காப்­புக்­கான சர்­வ­தேச உல­மாக்கள் மாநாடு, நாட்டில் வன்­மு­றை­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

ஆப்­கா­னிஸ்தான் மார்க்க வழி­காட்­டல்­களைப் பின்­பற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என மக்கா ஆளுநர் இள­வ­ரசர் காலித் அல்-­பைசல் தலை­மை­யி­லான சவூதி அரே­பியா மற்றும் முஸ்லிம் உலகின் சிரேஷ்ட உல­மாக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

செவ்­வாய்­க்கி­ழமை ஆரம்­ப­மான இம் மாநாட்டில் இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்­கான சவூதி அரே­பிய அமைச்சர் ஷெய்க் அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் அல்-­அஷ்ஷெய்க், பெரிய பள்­ளி­வா­சலின் இமாம் ஷெய்க் ஸாலிஹ் பின் ஹுமைட், சிரேஷ்ட உலமா உறுப்­பி­னரும், இப்தா நிரந்­தரக் குழுவின் உறுப்­பி­னரும், சவூதி அரண்­மனை ஆலோ­ச­க­ரு­மான அப்­துல்லாஹ் அல்-­முத்லக் ஆகி­யோரும் பங்­கு­பற்­றினர்.

முஸ்­லிம்கள் தமக்­கி­டையே சண்­டை­யிட்டுக் கொள்­வது இஸ்­லாத்தில் கண்­டிப்­பாக தடை செய்­யப்­பட்ட ஒன்று என ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளதால் எம்மைப் பொறுத்­த­வரை முஸ்லிம் அறி­ஞர்­களின் ஒன்­று­கூடல் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும் என ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­ப­தியின் விஷேட தூதுவர் மொஹமட் அக்ரம் கஹ­பல்வாக் தெரி­வித்தார்.

முஸ்லிம் உலகின் பல்­வேறு பாகங்­க­ளையும் சேர்ந்த முன்­னணி இஸ்­லா­மிய அறி­ஞர்­களின் பின்­பு­லத்­தி­லேயே இம்­மா­நாடு நடை­பெ­று­வ­தாக ஆப்­கா­னிஸ்தான் உலமா சபையின் பேச்­சாளர் காசிம் ஹலிமி தெரி­வித்தார்.

இஸ்­லா­மிய அறி­ஞர்கள் சொல்­வதை முஸ்­லிம்கள் அனை­வரும் கவ­னத்­தி­லெ­டுத்துப் பின்­பற்ற வேண்டும். சில வாரங்­க­ளுக்கு முன்னர் புனித பள்­ளி­வா­சல்­களின் இமாம்­களால் செய்­யப்­பட்ட குத்பாப் பிர­சங்­கங்கள் தலி­பான்­களால் ஏற்றுக் கொள்­ளப்­படும், விசே­ட­மாக ஆப்­கா­னிஸ்­தானில் மோதலில் ஈடு­பட்­டுள்ள இரு தரப்­பி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என தான் நம்­பு­வ­தா­கவும் ஹலிமி தெரி­வித்தார்.

2001 ஆம் ஆண்டு தொடக்கம் ஆப்­கானில் 40,000 மக்கள் மோதல் கார­ண­மாகக் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இந்த அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு பின்னால் இருக்­கின்ற காரணம் என்­ன­வென்றால் பயங்­க­ர­வா­திகள் தமது கொள்­கைகள் கருத்­துக்கள் மாத்­தி­ரமே சரி­யா­னவை என நம்­பு­வ­தாகும். அவர்கள் தமது அர­சியல் பொரு­ளா­தார இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்கு மார்க்­கத்தைப் பயன்­ப­டுத்­து­கின்­றனர் இல்­லா­விட்டால் போலி­யான முகம்­கொண்­ட­வர்­களில் மறை­க­ர­மாகச் செயற்­ப­டு­கின்­றனர் எனவும் அவர் தெரி­வித்தார்.
-Vidivelli