Verified Web

போதைப்­பொருள் கடத்தி தண்­டனை விதிக்­கப்­பட்­டோ­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்ற ஒப்பமிடுவேன்

2018-07-11 21:39:03 Administrator

போதைப்­பொருள் கடத்­தலில் ஈடு­பட்டு நீதி­மன்­றத்­தினால் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலை­யிலும் போதைப்­பொருள் வியா­பா­ரத்­துடன் தொடர்­பு­பட்­டுள்ள சிறைக்­கை­தி­க­ளுக்கு மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்ற ஜனா­தி­பதி என்ற வகையில் தான் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

பௌத்த சமூகம் என்ற வகையில் மர­ண­தண்­டனை குறித்து பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­ற­போதும் உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் இல்­லாத வகையில் உப­தே­சங்­களை நிகழ்த்­தியும் உப­தே­சங்­களை செவி­ம­டுத்தும் வரு­கின்ற ஒரு சமூகம் இந்­த­ள­வுக்கு பிழை­யான வழி­களில் செல்­லு­மாக இருந்தால் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்க வேண்­டிய தீர்­மா­னங்­களை உரிய நேரத்தில் எடுக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

நேற்று முற்­பகல் கண்டி கெட்­டம்பே விளை­யாட்­ட­ரங்கில் இடம்­பெற்ற ”போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான பாட­சா­லையின் பலம்” என்ற நிகழ்ச்­சித்­திட்­டத்தின் அங்­கு­ரார்ப்­பண நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி இதனைத் தெரி­வித்தார்.

பாட­சாலை பிள்­ளை­களை போதைப்­பொ­ரு­ளி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­காக தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு நிகழ்ச்­சித்­திட்­டத்­துடன் இணைந்­த­தாக கல்வி அமைச்சும் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­ல­ணியும் இணைந்து இந்த நிகழ்ச்­சித்­திட்­டத்தை நாட­ளா­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன.

இந்­நி­கழ்­வின்­போது ஜனா­தி­பதி மேலும் தெரி­விக்­கையில்,

எதிர்த்­த­ரப்பு அர­சி­யல்­வா­திகள் எத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்த போதிலும் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­தியில் நாட்டில் கொலை மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் குறை­வ­டைந்­தன.  2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடக் காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற மனித கொலைகள் தொடர்­பாக நேற்று முன்­தினம் தேசிய பாது­காப்பு சபைக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக சில ஊட­கங்கள் முன்­வைக்கும் தவ­றான ஊடக அறிக்­கை­களை சில அர­சி­யல்­வா­திகள் தமது குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தி­கொள்­கின்­றனர்.

எவ்­வா­றா­ன­போதும் கொலை மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் அதி­க­ரிப்­ப­தற்கு போதைப்­பொ­ருளைப் போன்று சமூக வலைத்­த­ளங்­களும் இன்று முக்­கிய கார­ண­மாக அமைந்­துள்­ளது. இந்த நிலை­மை­களில் இருந்து பிள்­ளை­களை பாது­காப்­ப­தற்­காக அர­சாங்­கமும் பெற்­றோரும் முக்­கிய கவனம் செலுத்த வேண்டும்.

போதைப்­பொ­ரு­ளி­லி­ருந்து விடு­த­லை­பெற்ற சிறந்­ததோர் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நிகழ்ச்­சித்­திட்­டங்­களில் பாட­சாலை பிள்­ளை­க­ளுக்கு அறி­வூட்டி அவர்­களை சமூ­கத்­திற்கு முக்­கிய தூது­வர்­க­ளாக மாற்ற வேண்டும் என்றும் தெரி­வித்தார்.

தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு நிகழ்ச்­சித்­திட்­டத்தின் வெற்­றிக்­காக விசேட பங்­க­ளிப்­பு­களை வழங்­கிய அரச அதி­கா­ரி­களை கௌர­வித்து ஜனா­தி­ப­தியால்  விரு­துகள் மற்றும் பரி­சில்கள் வழங்­கி­வைக்­கப்­பட்­டன.

பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் வாய்ப்­புற்று நோய் பிரிவின் எதிர்­கால நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் பேரா­சி­ரியர் உபுல் திசா­நா­யக்­க­விடம் ஜனா­தி­ப­தி­யினால் 20 இலட்சம் ரூபா வழங்கி வைக்­கப்­பட்­டது.

இந்­நி­கழ்வில் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, இரா­ஜாங்க அமைச்சர் லக்கி ஜய­வர்­தன, மத்­திய மாகாண முத­ல­மைச்சர் சரத் ஏக்­க­நா­யக்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனக்க பண்­டார தென்­னகோன், பந்­துல யாலே­கம, கண்டி மாவட்ட அர­சியல் பிர­தி­நி­திகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், கண்டி மாவட்ட செயலாளர் எம்.பி.ஹிட்டிசேக்கர உள்ளிட்ட மாவட்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், கிராமத்தை கட்டியெழுப்புவோம் கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1188 கிராம சேவைப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
-Vidivelli