Verified Web

இது தமிழக முஸ்லிம்களின் பிளவு மறையும் நேரம்

2018-07-11 05:32:03 Administrator

கோம்பை அன்வர்

"வட இந்­திய - தென்­னிந்­திய முஸ்­லிம்­க­ளுக்கு இடை­யி­லே­யான கல்வி மற்றும் வியா­பாரம் குறித்த ஒப்­பீட்டு ஆய்வு" என்ற தலைப்பில் வட இந்­திய பத்­தி­ரி­கை­யாளர் சையத் உபைதுர் ரஹ்மான் அண்­மையில் எழு­திய கட்­டு­ரையில் ஒரு சுவா­ரஷ்­ய­மான தக­வலை குறிப்­பி­டு­கிறார். ஒட்­டு­மொத்த உத்­த­ரப்­பி­ர­தே­சத்தில் இஸ்­லா­மி­யர்­களால் நடத்­தப்­படும் மேற்­ப­டிப்பு கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு இணை­யான எண்­ணிக்­கையில், சென்னை மாந­க­ரி­லேயே தமி­ழக இஸ்­லா­மி­யர்­களால் கல்வி நிறு­வ­னங்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­துதான் அந்தத் தகவல்.

நான்கு கோடி முஸ்­லிம்கள் வாழும் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தோடு ஒப்­பி­டு­கையில் தமி­ழ­கத்தில் இஸ்­லா­மியர் எண்­ணிக்கை மிகவும் குறைவு. 50 லட்­சத்­திற்கும் குறை­வான இஸ்­லா­மி­யர்­களே இங்கு வசிக்­கின்­றனர். இரு மாநி­லங்­களில் உள்ள முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கையை, விகி­தா­சா­ரத்தை கணக்கில் கொள்­ளும்­போது இந்தப் பெரு­வித்­தி­யாசம், நமக்கு தமி­ழக முஸ்­லிம்­களின் சமூக, பொரு­ளா­தார முன்­னேற்­றத்தை தெளி­வு­ப­டுத்­து­கி­றது.

இன்று தமி­ழக முஸ்­லிம்கள் காணும் இந்த முன்­னேற்­றங்­க­ளுக்குப் பின்னால் ஒரு நீண்ட, நெடிய வர­லாறு உண்டு. மேற்­கல்­வியைப் பொறுத்­த­வரை பெரிய முன்­னேற்­றங்கள் சுதந்­தி­ரத்­திற்கு அடுத்து ஏற்­பட்­ட­வை­யாகும். 1877இல் சர் சையத் அக­மது கான் அலி­கரில் "முகம்­மதன் ஆங்­கிலோ ஓரி­யண்டல் கல்­லூரி"யை நிறுவி 39 வரு­டங்கள் கழித்த பின்­னரே 1916இல் சென்­னையில், அன்­றைய ஆங்­கி­லேய அரசு இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கென கல்­லூ­ரியை நிறு­வி­யது.

சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் இந்­தியப் பிரி­வி­னையை அடுத்து, அன்று நில­விய கசப்­பான சூழலில், சென்னை மாகா­ணத்தை ஆட்சி செய்­து­கொண்­டி­ருந்த காங்­கிரஸ் அரசு இஸ்­லா­மி­யர்கள் அனு­ப­வித்து வந்த பல சலு­கை­களை பறித்­தது. அது­வரை அமு­லி­லி­ருந்த  இட­ஒ­துக்­கீடு பறி­போ­னது. திரு­வண்­ணா­மலை, ராஜ­பா­ளையம், ஈரோடு என்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கல­வ­ரங்கள் வெடித்­தன. உயிர்ச்­சேதம், பொருள் சேதத்­தோடு சென்னை மாகாண இஸ்­லா­மி­யர்கள் அடக்­கு­மு­றை­க­ளையும் எதிர்­கொள்ள நேரிட்­டது.

முஸ்­லிம்­க­ளுக்­காக துவங்­கப்­பட்ட 'அரசு முகம்­மதன் கல்­லூரி'யை அன்­றைய காங்­கிரஸ் அரசு பொதுக் கல்­லூ­ரி­யாக மாற்றி, நாள­டைவில் அது மகளிர் கல்­லூ­ரி­யா­னது. இந்த நெருக்­க­டி­க­ளுக்கு இடையே கண்­ணி­யத்­திற்­கு­ரிய காயிதே மில்லத் முகம்­மது இஸ்­மா­யிலின் கடின முயற்­சியால் சமூகம் ஒன்­று­தி­ரண்டு, இழந்த அரசுக் கல்­லூ­ரிக்கு பதி­லாக, சென்னை மாகா­ண­மெங்கும் பல தனியார் கல்­லூ­ரி­களை உரு­வாக்­கி­யது.

பல நூற்­றாண்­டு­க­ளுக்கும் மேலாகக் கடல் கடந்து தென் கிழக்கு ஆசி­யாவில் வணிகம் செய்து, பொரு­ளா­தா­ரத்தில் மேம்­பட்­டி­ருந்த தமிழ் முஸ்­லிம்­களால், கல்­லூ­ரி­களை உரு­வாக்க முடிந்­தாலும் அர­சி­யலில் சம­பங்கு என்­பது எட்­டாக்­க­னி­யா­னது. அதை பெறு­வ­தற்கு மீண்டும் திரா­விட இயக்கம் ஒரு மாபெரும் அர­சியல் சக்­தி­யாக எழும் வரை காத்­தி­ருக்­க­வேண்­டிய சூழல்.

திரா­விட இயக்­கத்தின் ஆரம்ப கால­கட்­டத்­தி­லேயே நீதிக் கட்சி இஸ்­லா­மி­யர்­களை திரா­வி­டர்கள் என்று வரை­ய­றுத்­தது மட்­டு­மல்­லாமல் கிலாஃபத் போராட்­டத்தில் ஆத­ரவு, சர் சையத் உஸ்­மா­னுக்கு அமைச்­ச­ரவை பதவி, முஸ்­லி­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு, யுனானி கல்வி என்று பல உரி­மை­களை அளித்­தது. காங்­கி­ர­ஸி­லி­ருந்து விலகி சுய­ம­ரி­யாதை இயக்கம் ஆரம்­பித்த தந்தை பெரியார், இஸ்­லாத்தின் சமூக நீதி­யையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் தனது மேடை­களில் பெரிதும் ஆத­ரித்துப் பேசினார்.

1940களில் ஆட்சி அதி­கா­ரத்தில் இல்­லா­வி­டினும் பெரி­யாரின் தலை­மை­யி­லான திரா­விட இயக்கம், திரா­விடர் கழ­க­மாக உரு­வெ­டுத்­த­போது இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக குரல் கொடுத்­தது. அதே போல் இந்­திய அர­சியல் சட்ட நிர்­ணய சபையில் திரா­விட இயக்கம் இல்­லாத குறையை கண்­ணி­யத்­திற்­கு­ரிய காயிதே மில்லத் தனது வாதங்­களின் மூலம், தமிழை தேசிய மொழி­யாக்­கவும் இட­ஒ­துக்­கீ­டுக்­கா­கவும் குரல் கொடுத்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

1950களின் இறு­தியில் மீண்டும் திரா­விட இயக்­கத்தின் மாபெரும் அர­சியல் சக்­தி­யாக தி.மு.க. தலை­யெ­டுத்து, பேர­றிஞர் அண்ணா சுட்­டிக்­காட்­டிய பின்­னர்தான், இந்­தியா சுதந்­தி­ர­ம­டைந்து 15 வரு­டங்கள் கழித்து ஒரு இஸ்­லா­மி­ய­ருக்கு சென்னை மாகாண அமைச்­ச­ர­வையில் மீண்டும் பதவி கிடைத்­தது. 1962இல் காம­ரா­ஜரின் மூன்­றா­வது மந்­தி­ரி­ச­பையில், சங்­க­ரன்­கோ­வி­லி­லி­ருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அப்துல் மஜீது உள்­ளாட்­சித்­துறை அமைச்­ச­ராக்­கப்­பட்டார். சட்­ட­மே­ல­வையில் முஸ்லிம் உறுப்­பி­னர்­களே இல்­லாத நிலையில் தி.மு.கதான் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த திருச்சி அப்துல் வஹாப் ஜானியை மேலவை உறுப்­பி­ன­ராக்­கி­யது.

1938இல் இந்தி எதிர்ப்பு போரட்­டத்தில் தந்தை பெரி­யா­ரோடு களத்தில் இறங்­கிய தமிழ் முஸ்­லிம்கள் 1965ஆம் வருட இந்தி எதிர்ப்பு போராட்­டத்தில் தி.மு.கவுடன் பின்னிப் பிணைந்­தனர். அச்­ச­மயம் தி.மு.கவின் பொதுக்­கு­ழுவில், "மத சிறு­பான்மை அணி அமைக்­க­வேண்டும்" என்­றெ­ழுந்த கோரிக்­கையை, அறிஞர் அண்ணா "காயிதே மில்லத் தலை­மை­யி­லான முஸ்லிம் லீக் நட்புக் கட்­சி­யாக இருக்­கும்­போது அது தேவை­யில்லை" என்று மறுத்­து­விடும் அள­விற்கு முஸ்லிம் சமூ­கத்­தோடும் லீக்­கோடும் தி.மு.கவின் உறவு இருந்­தது.

சுதந்­தி­ரத்­தின்­போது சென்னை மாகா­ணத்தில் பிர­தான எதிர்க்­கட்­சி­யாக அங்கம் வகித்த முஸ்லிம் லீக், மொழி­வா­ரி­யாக மாநி­லங்கள் உரு­வாக்­கப்­பட்ட பின்னர் சென்னை மாகாண சட்­ட­ச­பையில் 1967இல் தி.மு.கவுடன் கூட்­டணிக் கட்­சி­யாக சட்­ட­ச­பைக்குள் காலடி எடுத்­து­வைக்க முடிந்­தது. முஸ்லிம் லீக் சார்­பாக மட்­டு­மல்­லாமல் தி.மு.க. சார்­பா­கவும் முஸ்­லிம்கள் சட்­ட­மன்ற உறுப்­பினர், மாந­க­ராட்சி மேயர், அமைச்­ச­ர­வையில் இடம் என்று பல அர­சியல் பொறுப்­பு­க­ளுக்கு வந்­தனர்.

1967இல் பேர­றிஞர் அண்ணா முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்­றி­ருந்த நேரத்தில் அச்­சி­ரப்­பாக்­கத்தை அடுத்த பள்­ளிப்­பட்டு கிரா­மத்தில் முஸ்­லிம்கள் பள்­ளி­வாசல் கட்­டு­வ­தற்கும், பெருநாள் தொழுகை நடத்­து­வ­தற்கும் பெரும் பிரச்­சினை ஏற்­பட்­டி­ருந்­தது. டில்­லி­யி­லி­ருந்த காயிதே மில்லத் மூலம் செய்தி அறிந்த முதல்வர் அண்ணா, தனது மேற்­பார்­வையில் எந்த தடங்­க­லு­மின்றி பெருநாள் தொழு­கையை நிறை­வேற்­றவும் அங்கு பள்ளி கட்­டு­வ­தற்கும் ஆவண செய்தார்.

அண்­ணாவின் மறை­வுக்கு அடுத்து வந்த கரு­ணா­நிதி தலை­மை­யி­லான தி.மு.க. ஆட்­சியில், காங்­கிரஸ் ஆட்­சியில் முஸ்­லிம்கள் இழந்­த­வற்­றுக்கு ஈடாக கலைக் கல்­லூரி, பிற்­ப­டுத்­தப்­பட்டோர் பட்­டி­யலில் சேர்க்கை, யுனானி படிப்பு என்று பல உரி­மை­களை மீட்­டது மட்­டு­மல்­லாமல் மீலாது விழா­விற்கு விடு­முறை போன்ற சலு­கை­க­ளையும் பெற்­றனர்.

1990கள் தான் தமி­ழக முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மோச­மான கால­கட்டம் என்று கூறலாம். இதற்கு முன்னர் தமிழ் இஸ்­லா­மிய சமூகம் நெருக்­க­டி­களை சந்­திக்­கா­ம­லில்லை. 15 ஆம் நூற்­றாண்டின் இறு­தியில் வாஸ்­கொ­டா­காமா இந்­தி­யா­வுக்கு கடல் வழியில் கோழிக்­கோடு வந்­த­டைந்­த­தி­லி­ருந்து பிரச்­சினை ஆரம்­பித்­தது. படிப்­ப­டி­யாக முஸ்­லிம்கள் கடல் வணி­கத்­தி­லி­ருந்து ஒடுக்­கப்­பட்டு, ஆங்­கி­லேய ஆட்­சியில் முற்­றிலும் ஒதுக்­கப்­பட்­டனர்.

சில நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்­னர்­வரை கொடி­கட்டிப் பறந்த கடல்­வழி வணி­கத்தின் எச்­ச­மாக இன்று "மரைக்­காயர்" என்ற பட்­டப்­பெயர் மட்­டுமே அவர்­க­ளிடம் உள்­ளது. கடல் வணி­கத்தில் முஸ்­லிம்­களின் வீழ்ச்சி தமி­ழ­கத்தின், இந்­தி­யாவின் வீழ்ச்­சியும் கூட. இதனை நன்­கு­ணர்ந்த அன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளான கோழிக்­கோடு சாமுத்­ரி­யி­லி­ருந்து இரா­ம­நா­த­புர சேது­ப­திகள் வரை முஸ்­லிம்­க­ளுக்கு தங்­களால் இயன்­ற­வரை உறு­து­ணை­யாக இருந்­தார்கள். அதேபோல் இந்­தியப் பிரி­வி­னைக்குப் பின்னர் தமி­ழக முஸ்­லிம்­க­ளுக்கு நெருக்­கடி ஏற்­பட்­ட­போது திரா­விட இயக்­கமும் பின்னர் தி.மு.கவும் உறு­து­ணை­யாக இருந்­தன.

அது­வரை ஒற்­று­மை­யாக பிரச்­சி­­னை­களை எதிர்­கொண்ட முஸ்­லிம்கள் 1990களில் முதன்­மு­றை­யாக ஒரு­வ­ருக்­கொ­ருவர் சண்­டை­யிட்டுக் கொள்ளும் அவலம் ஏற்­பட்­டது. ஒரு புறம் "பரி­ணாம வளர்ச்சி" பெற்ற திரா­விட ஆட்­சியை நடத்திக் கொண்­டி­ருந்தார் செல்வி ஜெய­ல­லிதா. இன்­னொரு புறம் இஸ்­லா­மிய தூய்­மை­வாதம் அல்­லது வஹா­பிஸம் பேசி, கடுங்­கோட்­பா­டு­களை முன்­னி­றுத்தும் அடிப்­ப­டை­வாத இயக்­கங்­களின் அசுர வளர்ச்சி அடைந்­து­கொண்­டி­ருந்­தன.

தமிழ் இஸ்­லா­மிய சமூ­கத்தில் புரை­யோடிப் போயி­ருந்த வர­தட்­சணை மற்றும் சில மூடப் பழக்­க­வ­ழக்­கங்­களை எதிர்த்த இந்த இயக்­கங்­களின் ஆரம்­ப­கால செயற்­பா­டுகள் தமிழ் இஸ்­லா­மிய இளை­ஞ­ரி­டையே அமோக வர­வேற்பை பெற்­றன. விரை­வி­லேயே இந்த இயக்­கங்கள் பன்­மைத்­துவ சமூ­கத்தின் யதார்த்தம் புரி­யாமல், இஸ்­லா­மி­யரை பிற சமூ­கத்­த­வ­ருடன் இணைக்கும் பால­மாக விளங்­கிய தர்­ஹாக்கள், மீலாத் விழாக்கள், கலை, கலா­சாரம் ஆகி­ய­வற்றை தூய்­மை­வாதம் பேசி எள்ளி நகை­யாட ஆரம்­பித்­தன. பாபர் மசூதி இடிப்பு என்று இந்­துத்வம் விஸ்­வ­ரூபம் எடுத்­து­வரும் நிலையில் ஒற்­று­மை­யாக எதிர்­கொள்ள வேண்­டிய முக்­கிய தரு­ணத்தில் இஸ்­லா­மிய சமூகம் பிள­வு­பட்டுப் போனது பெருந்­து­யரம்.

நபிகள் நாய­கத்தின் பிறந்த தினத்தைக் கொண்­டாடும் மீலாத் விழாக்­க­ளுக்கு பின்­ன­ணியில் தமி­ழ­கத்தில் மிகப் பெரிய அர­சியல் பாரம்­ப­ரியம் உண்டு. சுதந்­தி­ரத்­திற்கு முன்­ன­தாக, இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு சமூக விழிப்­பு­ணர்­வூட்­டவும், அர­சி­யல்­ப­டுத்­தவும் தந்தை பெரியார், மூத­றிஞர் இரா­ஜாஜி, பேர­றிஞர் அண்ணா என்று பல தலை­வர்கள் இஸ்­லா­மி­யர்­க­ளுடன் நேர­டி­யாக உரை­யாட, மேடை­ய­மைத்துக் கொடுத்த மத­நல்­லி­ணக்க விழா அது. அப்­ப­டிப்­பட்ட ஒரு மீலாத் விழா மேடை­யில்தான் திரு­வா­ரூரில் அறிஞர் அண்ணா முதன்­மு­றை­யாக மு.கரு­ணா­நி­தியை சந்­தித்தார்.

இந்தப் பாரம்­ப­ரி­ய­மிக்க மீலாத் விழா, அடிப்­ப­டை­வாத இயக்­கங்­களால் ஷிர்க் (இணை வைப்­பது) என்று கண்­ட­னத்­துக்கு உள்­ளா­னது. இதில் வேடிக்கை என்­ன­வென்றால் அது­வரை சென்­னையில் நூற்­றாண்­டுக்கும் மேலாக எந்தப் பிரச்­சி­னை­யு­மின்றி மீலாத் விழா ஊர்­வலம் நடத்­தி­வந்த முஸ்­லிம்­க­ளுக்கு செல்வி ஜெய­ல­லி­தாவின் ஆட்­சியில் அதைக் கைவிட வேண்­டிய நிர்ப்­பந்தம்.

இவர்கள் பட்­டி­ய­லிட்ட ஷிர்க்கில் தமி­ழ­கத்தில் கட்சி, மத பேத­மின்றி அனை­வரும் ரசித்த நாகூர் ஹனீ­பாவின் பாடல்­களும் அடங்கும் என்­பது முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மா­கப்­ப­டலாம். நாகூர் ஹனீபா வெறும் இஸ்­லா­மிய பாடகர் மட்­டு­மல்ல; தி.மு.கவின், திரா­விட இயக்­கத்தின் எழுச்­சிக்­குரல். தந்தை பெரி­யாரும், காயிதே மில்­லத்தும், அறிஞர் அண்­ணாவும், கோடா­னு­கோடி தமி­ழர்­களும் ரசித்த குரல். தி.மு.கவின் மாநில மாநா­டுகள் அவ­ரு­டைய இசைக் கச்­சே­ரி­யுடன் துவங்­கக்­கூ­டிய சம்­பி­ர­தாயம் இருக்­கு­ம­ள­வுக்கு முக்­கிய குரல். இஸ்­லாத்தில் இசை ஹராம் (தடுக்­கப்­பட்­டது) என்று வாதிட்­ட­வர்கள் நாகூர் ஹனீ­பாவின் பாடல்­க­ளையும் விட்டு வைக்­க­வில்லை.

1990களில்தான் தமிழ் சினி­மாவில் இஸ்­லா­மி­யர்­களை தீவி­ர­வா­தி­க­ளாகச் சித்­தி­ரிக்­கும்­போக்கு சூடு­பி­டித்­தது. சினிமா என்­பது ஒரு ஊடகம் என்று புரிந்­து­கொள்­ளாமல் ஹராம் பட்­டி­யலில் சேர்த்­த­வர்­க­ளுக்கு அந்த வெகு­சன ஊட­கத்தின் வீரியம் புரி­யவே இல்லை. இந்த வலி­மை­யான ஊட­கத்தில், தலித் மக்­களின் பிரச்­சி­னையைத் தனது படங்­களின் மூலம் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்தும் பா.ரஞ்சித் போன்ற ஒரு கலை­ஞனை, இன்­ற­ளவும் இஸ்­லா­மிய இயக்­கங்­களால் உரு­வாக்க முடி­ய­வில்லை. மனி­தர்­களை பண்­ப­டுத்தும் இலக்­கியம் 'ஹராம்' என்று புறப்­பட்ட இந்த தூய்­மை­வாத இயக்­கங்­களின் 'ஷிர்க்' பட்­டி­யலில் மத­சார்­பற்ற திரா­விட இயக்கம் தமிழ்ப்­ப­டுத்­திய "வணக்கம்" ஷிர்க்­கா­ன­துதான் உச்­ச­கட்டக் கொடுமை.

தூய்­மை­வா­தி­களின் பிரச்­சி­னையே புனித நூலை தேவைப்­ப­டும்­போது நேர்­பொ­ருளில் மட்­டுமே பார்ப்­பது. ஒரு சொல்­லுக்கு பல பொருள் இருக்கும் என்ற அடிப்­படை தெரிந்­தி­ருந்தும் தமிழ் பண்­பாட்டின் முகமன் "வணக்­கத்தை" இறை வழி­பாட்­டுடன் குழப்பி, தமி­ழக இஸ்­லா­மிய இளை­ஞர்­களை மண்­ணோடு பிணைக்கும், வாழ்வை மேம்­பட வைக்கும், கலை மற்றும் பண்­பாடு ஆகி­ய­வற்­றி­லி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்­தினர். கலையை பிற சமூ­கத்­துடன் பிணைக்கும் நட்புப் பால­மா­கவும் ஒரு பாது­காப்பு கேட­ய­மா­கவும் பயன்படுத்­து­வ­தற்குப் பதி­லாக முற்­றிலும் புறக்­க­ணித்­தது இஸ்­லா­மிய சமூ­கத்­திற்கு பேரி­ழப்பு.

இவை­ய­னைத்­திற்கும் மேலாக கடு­மை­யான நெருக்­க­டிக்­கி­டையே, இஸ்­லா­மிய சமூ­கத்தை கட்டிக் காப்­ப­தற்­காக காயிதே மில்லத் உரு­வாக்­கிய இந்­திய யூனியன் முஸ்லீம் லீக் "ஒரு சீட்­டுக்கும் இரண்டு சீட்­டுக்கும் பிற கட்­சி­களின் பின்னால் மார­டிப்­ப­வர்கள்" என்று நையாண்டி செய்­யப்­பட்­டது. நெகிழ்­வுத்­தன்மை கொண்ட மார்க்­கத்தில், கடுங்­கோட்­பா­டு­களை முன்­வைக்கும் அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய இயக்­கங்­களே இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு ஒரே அடைக்­கலம் என்று பிர­சாரம் செய்­யப்­பட்­டது. விளைவு, சில குடும்­பங்கள் மட்டும் பிள­வு­ப­ட­வில்லை, பல முஸ்லிம் ஜமா­அத்­து­களும் பிள­வு­பட்டுப் போயின. முதன்­மு­றை­யாக பல குடும்­பங்கள், ஜமாத் தலை­வர்கள் காவல் நிலையம் ஏற வேண்­டிய இக்­கட்­டான சூழல் ஏற்­பட்­டது. தவ­றான வழி­காட்­டு­தலால் பல இளை­ஞர்கள் இன்றும் சிறையில் வாடும் அவலம்.

முஸ்­லிம்­களின் விகி­தா­சா­ரத்­திற்கு ஏற்ப அரசு வேலைகள் கிடைக்­கா­வி­டினும், காயி­தே­மில்­லத்தின் பெரு­மு­யற்­சிக்குப் பின் திறக்­கப்­பட்ட முஸ்லிம் கல்­லூ­ரிகள் மற்றும் அவற்றை பின்­தொ­டர்ந்து உரு­வான பொறி­யியல் கல்­லூ­ரி­களால் தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசி­யாவில் வேலை வாய்ப்பை பெற்று, முன்­னே­றிய பல முஸ்லிம் இளை­ஞர்­களின் பொருட்­கொ­டை­யால்தான் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத இயக்­கங்கள் தமி­ழ­கத்தில் வளர்ந்­தன என்­ப­துதான் நகை­முரண்.

இந்த அடிப்­ப­டை­வாத இஸ்­லா­மிய இயக்­கங்­களின் வழிமுறைகளை சமீப காலமாக தமிழக தேர்தல் களமும், காலமும் மறு பரிசீலனை செய்ய வைத்துள்ளன. 2011இல் மீண்டும் தமிழக முதல்வரான செல்வி ஜெயலலிதா, சிறுபான்மையினரை அரவணைத்துச் செயற்பட்டார். இயக்கங்களுக்கு அல்லாமல் பொதுக் கட்சிகளுக்கே பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வாக்களிக்கின்றனர் என்பதை தமிழக தேர்தல் களம் ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் தெளிவாக நிரூபித்துள்ளது.

இயக்கங்களிடையே மிகப் பெரியதும் கட்டுக்கோப்பானதுமானதுமான இயக்கம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத். 2014 பாராளுமன்ற தேர்தலில் அது எடுத்த நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அதன் இயக்கத்தினரே வாக்களிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவ்வியக்கத்தின் "உணர்வு" இதழில் அதனை ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இனிமேல் தேர்தல் நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை தவிர்ப்போம் என்று அறிவித்தது. இன்று அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள், மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிட்டனர்.

இருப்பினும் 2016இல் சென்னை மாநகரம் பெருவெள்ளத்தால் அவதிப்பட்டபோது இஸ்லாமிய இயக்க இளைஞர்கள் கோயிலிலிருந்து குடிசைகள் வரை ஆற்றிய மீட்புப் பணி, தமிழர்களின் கலாசார உரிமையை மீட்டெடுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த பிற போராட்டங்களில் பங்கெடுப்பு போன்றவை இயக்கங்களில் நடைபெற்றுவரும் நல்ல மாறுதல்களை சுட்டிக்காட்டுகின்றன. 1990களில் ஆரம்பித்த பிளவு மறையும் இவ்வேளையில், தமிழகம் புதிய, மாபெரும் சவால்களை எதிர் நோக்கியுள்ளது.

நன்றி

பிபிசி தமிழ்

நன்றி பிபிசி தமிழ்

-Vidivelli