Verified Web

எரிபொருளுக்கு புதிய விலைகள்

11 days ago MM.Minhaj

பெற்றோல் மற்றும்   டீசல் விலையை மீண்டும் அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கும் நேற்று மாலை இடம்­பெற்ற சந்­திப்­பினை அடுத்து  இவ்­வாறு அதி­க­ரிப்­ப­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.  இதே­வேளை எரி­பொருள் விலை சூத்­தி­ரத்தை பிரதி மாதமும் 10 ஆம் திகதி மீளாய்வு செய்­யவும் இதன்­போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

இதன்­படி நேற்று நள்­ளி­ரவு முதல் 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு­லீற்றர்  8 ரூபா­வி­னாலும் 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் 7 ரூபா­வி­னாலும் டீசல் லீற்றர் 9 ரூபா­வி­னாலும் சுப்பர் டீசல் 10 ரூபா­வி­னாலும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று கூடிய அமைச்­ச­ர­வையின் கூட்­டத்தின் போது அமைச்­ச­ர­வைக்கு தெரி­யாமல் பெற்றோல் விலையை  அதி­க­ரித்­த­மைக்கு கடும் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது.

 ஜனா­தி­ப­தியும் ஒரு சில அமைச்­சர்­களும் இதற்­கான எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர். இத­னை­ய­டுத்து நேற்று மாலை வேளையில் கூடி பெற்றோல் விலை தொடர்­பாக இணக்கம் காண்­ப­தற்கு அமைச்­ச­ரவை கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து நேற்று மாலை 4 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர சந்­தித்து பேசி­யுள்ளார். இந்த சந்­திப்­பிற்கு சிங்­கப்­பூ­ருக்கு விஜயம் மேற்­கொண்டு நேற்று நாடு­தி­ரும்­பிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கலந்து கொண்­டி­ருந்தார்.

இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது பெற்றோல் விலையை அதி­க­ரிப்­ப­தற்கு இணக்கம் காணப்­பட்­டது. இதன்­படி நேற்று நள்­ளி­ரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர்  8 ரூபா­வி­னாலும் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 7 ரூபா­வி­னாலும் டீசல் லீற்றர் 9 ரூபா­வி­னாலும் சுப்பர் டீசல் 10 ரூபா­வி­னாலும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

  நேற்று நள்­ளி­ரவு முதல் பெற்­றோ­லிய கூட்­டு­தா­னத்­தினால் விற்­கப்­படும் 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் 145 ரூபா­வா­கவும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் 155 ரூபா­வா­கவும் டீசல் லீற்றர்  விலை   118 ரூபா­வா­கவும் சூப்பர் டிசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்திய எண்ணெய் நிறுவனமானது ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட விலையிலேயே   பெற்றோல் மற்றும் டீசலை விநியோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli