Verified Web

பிள்­ளை­களை நீண்­ட­காலம் தடுத்து வைப்­ப­தற்­கான கோரிக்­கையை நிரா­க­ரித்­தது அமெ­ரிக்க நீதி­மன்றம்

11 days ago M.I.Abdul Nazar

சட்­ட­வி­ரோத குடி­யேற்­றக்­கா­ரர்­களின் பிள்­ளை­களை நீண்­ட­காலம் தடுத்து வைப்­ப­தற்­கான ட்ரம்ப் நிரு­வா­கத்தின் கோரிக்கை அமெ­ரிக்க சமஷ்டி நீதி­ப­தி­யொ­ரு­வரால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­தீர்ப்பு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் குடி­வ­ரவு நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு ஏற்­பட்ட பாரிய பின்ன­டை­வாகப் பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பாக அமெ­ரிக்க நீதித் திணைக்­க­ளத்­தினால் சமர்­ப்பிக்­கப்­பட்ட நகர்வு மனு கடந்த திங்­கட்­கி­ழமை கலி­போர்­னி­யா­வி­லுள்ள சமஷ்டி நீதி­மன்­ற­மொன்றில் நீதி­பதி டொலி கீயினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

குடி­வ­ரவுக் கொள்­கை­யினை நீதி­மன்­றத்­திற்கு கொண்­டு­வரும் நிரு­வா­கத்தின் முயற்­சியை நகைப்­புக்­கி­ட­மான முயற்சி என நீதி­பதி விப­ரித்தார்.

சங்­கி­லியால் பிணைக்­கப்­பட்ட வேலி­க­ளுக்குப் பின்­னா­லுள்ள சிறு­வர்கள் வைக்­கப்­பட்­டி­ருக்கும் புகைப்­ப­டங்கள் வெளி­யா­னதைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­விலும் ஏனைய இடங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன. பிள்­ளைகள் பெற்­றோ­ரை­விட்டு பிரித்து அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் இடம் தமக்குத் தெரியும் என்றும் அவர்­களை மீள அவர்­க­ளது பெற்­றோ­ருடன் இணைப்­ப­தற்கு முயற்­சித்து வரு­வ­தா­கவும் தெரி­விக்கும் உள்­நாட்டுப் பாது­காப்புத் திணைக்­களம், 2,000 இற்கும் மேற்­பட்ட பெற்­றோ­ரி­ட­மி­ருந்து பிரிக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்கள் தற்­போது அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டில் இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்­ளது.

அண்­மையில் குயி­னி­பியக் பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வின் பிர­காரம், அரை­வா­சிக்கும் மேற்­பட்ட அமெ­ரிக்க வாக்­கா­ளர்கள் ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் குடி­வ­ரவு விடயத்தை கையாளும் விதத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் வெறுமனே 39 வீதத்தினர் மாத்திரமே ஜனாதிபதியின் கொள்கையினை அங்கீகரிப்பதாக தெரிவித்திருந்தனர். 58 வீதத்தினர் நிராகரித்திருந்தனர்.
-Vidivelli