Verified Web

முஸ்லிம் அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும்

2018-07-11 04:30:21 Administrator

மாகாண சபை தேர்தல் தொடர்பில் குறித்த விட­ய­தா­னத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் பைசர் முஸ்­தபா ஏனைய இரு முஸ்லிம் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாத் பதி­யுதீன் ஆகியோர் மீது முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்­களும் கார­சா­ர­மான கருத்­துக்­களும் முரண்­பாட்டை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­து­விடக் கூடாது என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாகும்.

இந்த விவ­காரம் தொடர்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட அமைச்சர் பைசர் முஸ்­தபா '' முனாபிக் அர­சியல் செய்ய நான் விரும்­ப­வில்லை. ஏனைய முஸ்லிம் அமைச்­சர்­களும் முனாபிக் அர­சி­யலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழே நடத்­தப்­படும். அதில் எந்­த­வித மாற்­றங்­க­ளு­மில்லை. மாகாண சபை திருத்தச் சட்­டத்­திற்கு கையு­யர்த்தி வாக்­க­ளித்­த­வர்­களும் புதிய தேர்தல் முறையை ஆத­ரித்­த­வர்­க­ளுமே அதை எதிர்க்­கின்­றனர். அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீமும், ரிசாதும் அன்று ஆத­ரித்­து­விட்டு இன்று புதிய தேர்தல் முறையை எதிர்ப்­பது ஏன்? மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்ள அநீ­தி­களை பாரா­ளு­மன்றக் குழு மூலம் தீர்த்துக் கொள்­ளலாம்'' எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

இதற்­க­மைய இரு பிர­தான முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­க­ளான ரவூப் ஹக்­கீமும் றிஷாத் பதி­யு­தீனும் கடந்த முறை புதிய தேர்தல் முறை­மைக்கு ஆத­ர­வாக பாரா­ளு­மன்றில் கையு­யர்த்­தி­விட்டு தற்­போது பழைய முறையில் தேர்­தலை நடத்த வேண்டும் எனக் கோரு­வ­தா­கவே அமைச்சர் பைசர் முஸ்­தபா  குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

இதே­வேளை மாகாண எல்லை நிர்­ணய விட­யத்தில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது என்ற குற்­றச்­சாட்டை அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்­கீமும் றிஷாத் பதி­யு­தீனும் தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கின்­றனர். அத்­துடன் எல்லை நிர்­ணயம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­புகள் முன்­வைத்த யோச­னைகள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்­களும் தற்­போது மேலெ­ழுந்­துள்­ளன. இவற்­றையும் அமைச்சர் பைசர் முஸ்­தபா கருத்திற் கொள்ள வேண்டும். அந்த வகையில் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் பைசர் முஸ்­தபா இது­வி­ட­யத்தில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாத் பதி­யு­தீ­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதே பொருத்­த­மா­ன­தாகும்.

இது விட­யத்தில் '' மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்தில் முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்ள அநீ­தி­களை பாரா­ளு­மன்றக் குழு மூலம் தீர்த்துக் கொள்­ளலாம்'' என அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­துள்ள நிலையில், பாரா­ளு­மன்றக் குழு­விலும் அதற்குப் புறம்­பா­கவும் பரஸ்­பர கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­வதன் மூலம் முஸ்லிம் சமூ­கத்­திற்கு இழைக்­கப்­பட்­டுள்ள, இழைக்­கப்­ப­ட­வுள்ள அநீ­தி­களை தவிர்ப்­ப­தற்­கான முயற்­சி­களை எடுக்க வேண்­டி­யதே மேற்­படி மூன்று அமைச்­சர்­க­ளதும் கடப்­பா­டாகும். மாறாக முஸ்லிம் சமூ­கத்­திற்குப் பாரி­ய­ளவில் பாதிப்பைக் கொண்­டு­வரக் கூடிய இந்த விட­யத்தில் பகி­ரங்க தளத்தில் கருத்து மோதல்­களில் ஈடு­ப­டு­வ­தா­னது ஈற்றில் சமூ­கத்­திற்கே பாதிப்பைக் கொண்டு வரும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

என­வேதான் நமக்கு முன்­னுள்ள பெரும் சவா­லான எல்லை நிர்­ணய அறிக்­கையை மீள்­ப­ரி­சீ­லித்து முஸ்லிம் சமூ­கத்தைப் பாதிக்­காத வகை­யி­லான அல்­லது பாதிப்பை முடிந்­த­ளவு குறைக்க  பாதிக்காத வகையிலான அல்லது பாதிப்பை முடிந்தளவு குறைக்க முடியுமான நகர்வுகளை முன்னெடுப்பதே காலத்தில் தேவையாகும். இதுவிடயத்தில் முஸ்லிம் சிவில் அமைப்புகள் தலையிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கிடையிலான பரஸ்பர கலந்துரையாடலை உடன் நடத்துவது அவசியம் என ஆலோசனை கூற விரும்புகிறோம்.
-Vidivelli