Verified Web

குற்­றங்கள் தலை­வி­ரித்­தா­டி­யதை கோத்­தா­பய மறந்­து­விட்­டாரா

2018-07-11 04:17:38 Administrator


நாட்டில்  சட்டம் ஒழுங்கு படு­மோ­ச­மாக சீர்­கு­லைந்­தி­ருப்­ப­தா­கவும் தனி­ந­பர்கள் சட்­டத்தை கையில் எடுத்துக் கொண்டு அடா­வ­டித்­த­ன­மாக செயற்­ப­டு­வ­தா­கவும்  இன்று குற்­றஞ்­சாட்­டு­கின்ற முன்னாள் பாது­காப்பு செய­லாளர்  கோத்­த­ாபய ராஜ­பக் ஷ கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் தலை­வி­ரித்­தா­டிய குற்­றச்­செ­யல்­க­ளையும்  சட்­ட­வொ­ழுங்குசீர்­கு­லை­வு­க­ளையும் மறந்து விடக் கூடாது என சட்டம் ஒழுங்கு பிர­தி­ய­மைச்சர் நளின் பண்­டார தெரி­வித்தார்.

நேற்­றைய தினம் ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொ­தாவில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

 கடந்த ஆட்சி காலத்தில் இடம் பெற்ற வெள்­ளைவேன் கடத்தல், ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொலை மற்றும் காணா­ம­லாக்­கப்­பட்­டமை நீதி கோரி மக்கள் போராட்­டங்­களை நடத்­திய போது அப்­பாவி மக்­களை தாக்­கி­யமை போன்ற விட­யங்­களை மக்கள் மறந்­து­விடக் கூடாது.

 தேசிய அர­சாங்­கத்தில் சட்டம் ஒழுங்கு முறை­யா­கவே பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றது . கடந்த கால அர­சாங்­கத்தில் வன்­மு­றையில் அடக்­கப்­பட்ட விட­யங்கள் இன்று சட்­ட­ரீ­தியில் அணு­கப்­பட்டு வரு­கின்­றன. மேலும் பாதாள குழு­வி­ன­ருக்கு எதி­ராக அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக காணப்­ப­டு­கின்­றன என்று எதிர்­த்த­ரப்­பினர் குறிப்­பி­டு­வது பொருத்­த­மற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 வரை­யில நாட்டில் சர்­வா­தி­கார போக்­கு­களே காணப்­பட்­டன. பெய­ர­ள­விலே நீதித்­துறை சுயா­தீ­ன­மாக செயற்­பட்­டது. ஊட­கங்­களும் பாரிய அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை காணப்­பட்­டது. சர்­வா­தி­கார கொள்­கை­யினை முன்­னி­லைப்­ப­டுத்தி ஜன­நா­யக முறையில் ஆட்­சி­யினை நடத்­தினர். 2015ஆம் ஆண்­டுக்கு பிறகு நிலைமை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­க­ப­பட்­டது.

இன்று நீதித்­துறை எவ்­வித அர­சியல் தலை­யீ­டு­களும் இல்­லாமல் சுயா­தீ­ன­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. மறு­புறம் பாதாள குழு­வி­ன­ருக்கு எதி­ராக அர­சாங்கம் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது . ஆனால் முன்னர் பாதாள குழு­வி­ன­ருக்கு ஆத­ர­வாக அர­சாங்க தரப்­பி­னரே காணப்­பட்­டனர்.

 கடந்த அர­சாங்­கத்­தி­னையும் தேசிய அர­சாங்­கத்­தி­னையும் ஒருபோதும் ஒப்­பிட முடி­யாது. அர­சாங்­கத்தில் காணப்­ப­டு­கின்ற குறைபாடு­களை எதிர்­த­ரப்­பினர் தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு அர­சி­யலில் பிர­வே­சிக்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சிறி­யானி பண்­டா­ர­விற்கு எதி­ராக செயற்­பட்­டமை போன்ற எண்­ணி­ல­டங்­காத விட­யங்கள் கடந்த 10 வருட ஹிட்லர் ஆட்­சியில் இடம் பெற்­றது . இவ்­வா­றான எந்த சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­களும் தேசிய அர­சாங்­கத்தின் 3 வருட நிர்­வா­கத்தில் இடம் பெற­வில்லை என்ற விட­யத்­தினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 தேசிய அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்தில் நாடு பாரிய எதிர் விளை­வு­களை எதிர்­கொண்­டுள்­ளது ஆகவே ஹிட்லர் ஆட்­சியே சிறந்­தது என்று எதிர் தரப்­பினர் குறிப்­பி­டு­வது ஜன­நா­யக கொள்­கை­க­ளுக்கு முர­ணா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. விஜ­ய­கலா விவ­கா­ரத்­தினை பெரு­ம­ளவில் எதிர்த்­த­வர்கள் இவ்­வி­ட­யத்தில் அமைதி காப்­பதன் நோக்கம் பற்றி மக்­கள தெரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சியம்.  பாதாள குழு­வி­ன­ருக்கு எதி­ராக தற்­போது பாரிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறு­கிய கால­கட்­டத்தில் பாதாள குழு­வி­ன­ருடன் தொடர்­புப்­பட்­ட­வர்கள் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் அத்­துடன் பலர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவ்­வி­ட­யத்­தினை காரணம் காட்­டியே எதிர் தரப்­பினர் சட்டம் ஒழுங்கு சரி­யில்லை என்றும் தமது காலத்­தில இவ்­வாறு பாதாள குழு­வினர் வெளிப்­ப­டை­யாக செயற்­ப­ட­வில்லை என் றும் குறிப்­பி­டு­கின்­றனர். அதுவும் உண்­மைதான் கடந்த காலத்தில் அர­சாங்­கத்தின் பாதாள குழு­வினர் முக்­கிய அங்கம் வகித்­த­மையின் கார­ண­மாக அவர்கள் வெளிப்­ப­டை­யாக செயற்­ப­ட­வில்லை என்ற விட­யத்­தினை ஏற்றுக் கொள்­ளவே வேண்டும்.

கூட்டு எதி­ர­ணியில் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் ஹிட்லர் உரு­வா­கு­வதை விரும்பவில்லை. இவர்கள் ஆரம்பத்தில் இருந்து ஹிட்லரது கொள்கைகளை கவனித்து வந்தமையினாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை எதிர்கொண்டமையின் காரணமாகவும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே மக்கள் தற்போது தேசிய அரசாங்கத்தில் மாற்றமடைய கூடிய விடயங்களை கருத்திற்கொண்டு அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாமல் நிலையான அமைதியினையும் சுதந்திரத்தினையும் தோற்றுவிக்கும் அரசாங்கத்தினை அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
-Vidivelli