Verified Web

விஜ­ய­க­லாவின் எம் பி பத­வியும் பறி­போகும்

2018-07-11 03:59:47 Administrator

விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியும் எதிர்­கா­லத்தில் இல்­லாமல் போகும் என விவ­சாய அமைசa்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

ஹம்­பாந்­தோட்டை புதிய வீதியில் இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யோடு சுய தொழில் உப­க­ர­ணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். விவ­சாய அமைச்சர் மஹிந்த அம­ர­வீர இங்கு தொடர்ந்தும் உரை­யாற்றும் போது தெரி­வித்­தா­வது, விஜ­ய­கலா மகேஸ்­வரன் எம். பி. முற்­றிலும் தவ­றா­ன­தொரு கருத்­தி­னையே தெரி­வித்­துள்ளார். இக்­க­ருத்து எமது நாட்­டுக்குத் துரோ­க­மா­னது. இவர் தற்­பொ­ழுது அமைச்சுப் பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து வில­கி­யுள்ளார். இருந்­தாலும் இது போது­மா­ன­தாக இல்லை. நான் நினைப்­பது இதற்கு அடுத்­த­தாக சட்­ட­பூர்­வ­மாக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­னூ­டாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியும் எதிர்­கா­லத்தில் இல்­லாமல் போகும் நிலை­மையும் ஏற்­படும்.

எமது நாட்டில் மீண்டும் பயங்­க­ர­வாதம் ஏற்­ப­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை. யாருக்கும் இவ்­வா­றான கருத்­துக்­களை தெரி­விப்­ப­தற்கு எவ்­வித உரி­மையும் இல்லை. நாம் அர­சாங்கம், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி என்ற வகை­யிலும் இந்தக் கருத்­தினை முற்­றாக எதிர்க்­கிறோம். இத­னூ­டாக எதிர்­கா­லத்தில் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளி­னூ­டாக இவ­ரது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியும் இல்­லாமல் போகும் நிலைமை ஏற்­ப­டவும் சந்­தர்ப்பம் உள்­ள­தாக நாம் நினைக்­கின்றோம்.

ஐக்­கிய தேசியக் கட்­சியும் இக்­க­ருத்­திற்கு எதிர்ப்­பினை தெரி­வித்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது. இவரை ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கா­விட்டால் இக்­க­ருத்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் கருத்­தாகக் கரு­தப்­படும். இவர்­களும் இக் கருத்­தினை ஆராய்­வ­தற்­காக ஒரு கமிட்­டியை நிய­மித்­துள்­ளார்கள். இந்தக் கமிட்டி எது எவ்வாறாக இருந்தாலும் எமது நாட்டின் அரசியல் யாப்பிற்கு அமைய இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதற்கு யாருக்கும் எவ்வித உரிமையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
-Vidivelli