Verified Web

தகர பேணியே மாயாவின் கால்கள்

2018-07-11 01:17:34 M.I.Abdul Nazar

எம்.ஐ.அப்துல் நஸார்

பிறவிக் குறை­பாட்­டினால் கால்­க­ளின்றிப் பிறந்த எட்டு வய­தான மாயா மெர்ஹி கடந்த ஜூன் மாத ஆரம்­பத்தில் பிளாஸ்ரிக் குழா­யி­னாலும் தகரப் பேணி­க­ளி­னாலும் செயற்­கை­யாக வடி­வ­மைக்­கப்­பட்ட கால் போன்ற அமைப்­புடன் சிரி­யாவில் இடம்­பெ­யர்ந்தோர் தங்­கி­யி­ருக்கும் முகா­மொன்றில் நட­மா­டினார்.

இதனை அவ­தா­னித்த ஏ.எப்.பி. உட­க­வி­ய­லா­ளர்­களால் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்கள் ஊட­கங்­களில் பிர­சு­ர­மா­கின. அச் சிறு­மியின் பரி­தாப நிலை­யினைக் காட்டும் இப் புகைப்­ப­டங்கள் உலகம் முழு­வ­தி­லு­முள்ள மக்கள் மத்­தியில் அதிர்ச்­சி­யையும் அனு­தா­பத்­தையும் தோற்­று­வித்­தன.

கனவு நிறை­வே­று­வ­தற்­கான சமிக்ஞை

கால்­களை இழுத்­துக்­கொண்டு சிர­மப்­பட்டு நடக்கும் புகைப்­ப­டங்கள் உலகம் முழு­வதும் பெரும் கவ­லையை தோற்­று­வித்­ததைத் தொடர்ந்து துருக்கி செம்­பிறைச் சங்­கத்தின் தலை­யீட்டின் மூலம் சிகிச்­சைக்­காக இஸ்­தான்­பூ­லுக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டுள்ளார். அவ­ரது நடக்கும் கனவு நிறை­வே­று­வ­தற்­கான சமிக்­ஞைகள் இப்­போது தென்­பட ஆரம்­பித்­துள்­ளன.

சிரி­யாவின் அலெப்போ பிராந்­தி­யத்தை பூர்­வீ­க­மாகக் கொண்ட மாயா, இஸ்­தான்­பூ­லுக்கு அழைத்­து­வ­ரப்­படும் வரை வடக்கு சிரி­யாவில் இட்லிப் பிராந்­தி­யத்தில் இடம்­பெ­யர்ந்த மக்கள் வசிக்கும் முகாமில் தனது தந்­தை­யுடன்  வசித்து வந்தார். ஆறு வருட சிவில் யுத்தம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களுள் இவரும் ஒருவர்.  

இன்ஷா அல்லாஹ் இன்னும் மூன்று மாதங்­களில் மாயா நடக்க ஆரம்­பித்து விடுவார் என இஸ்­தான்­பூலில் மாயா­வுக்கு சிகிச்­சை­ய­ளித்­து­வரும் செயற்கை உறுப்­புக்கள் தொடர்­பான விஷேட நிபுணர் டாக்டர் மெஹ்மட் ஸெகி குல்கு தெரி­வித்தார்.

மாயாவின் தந்தை 34 வய­தான மொஹமட் மெர்­ஹியும் பிறப்புக் குறை­பாட்­டினால் கால்­க­ளின்றிப் பிறந்­த­வ­ராவார். அவர் தனது மக­ளுக்­காக தயா­ரித்த செயற்­கை­யான சிறி­த­ள­வி­லான தகரப் பேணி­யி­னா­லான அமைப்பு மாயா­விற்கும் பொருத்­தப்­பட்­டி­ருந்­தது.

துருக்­கிய அதி­கா­ரி­க­ளினால் தந்­தையும் மகளும் சிரி­யா­வி­லி­ருந்து மீட்­கப்­பட்டு விஷேட சிகிச்­சை­யினை வழங்­கு­வ­தங்­காக இஸ்­தான்­பூ­லுக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டுள்­ளனர்.

தெற்கு அலெப்போ பிராந்­தி­யத்தின் கிராமப்புறத்தில் வசித்­து­வந்த இவர்கள் இவ் வருட ஆரம்­பத்தில் தமது பூர்­வீக பிராந்­தி­யத்தில் சண்­டைகள் மூர்க்­க­ம­டைந்­ததைத் தொடர்ந்து இட்­லிப்­புக்கு இடம்­பெ­யர்ந்­தனர்.

மாயாவும் தனது தந்­தை­யினைப் போலவே தவழ்ந்து செல்­வதன் மூலம் இல­கு­வாக நட­மா­டினார். அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட சத்­திர சிகிச்சை அவ­ரது காலின் அளவை மேலும் குறைத்­து­விட்­டமை மேலும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.

'சத்­திர சிகிச்­சை­யினைத் தொடர்ந்து எனது மகளால் நட­மாட முடி­ய­வில்லை. முகா­முக்­குள்­ளேயே முடங்கி இருந்தார்' என இஸ்­தான்பூல் சிகிச்சை நிலை­யத்தில் வைத்து பேட்­டி­ய­ளித்த மொஹமட் தெரி­வித்தார்.

முகா­முக்கு வெளியே சென்று அவர் நட­மாட வேண்டும் என்­ப­தற்­காக அழுத்­தத்தைக் குறைப்­ப­தற்கு ஏது­வாக ஸ்பொஞ்ச் நிரப்­பப்­பட்ட குழாய் அமைப்­பினை அவ­ருக்கு பொருத்­தினேன், அதனைத் தொடர்ந்து தரையின் கடி­னத்தை பிளாஸ்­ரிக்­கினால் தாக்குப்  பிடிக்க முடி­யாது என்­ப­தற்­காக தகரப் பேணி­களை அவற்­றுடன் பொருத்­தினேன் எனவும் பிளாஸ்ரிக் குழா­யினை மாதத்­திற்­கொரு தட­வையும் தகரப் பேணி­களை வாரத்­திற்­கொரு தட­வையும் மாற்­று­கின்றேன் எனவும் அவர் தெரி­வித்தார்.

புது வாழ்வு

சீரற்ற செயற்கை அமைப்­பாக இருந்த போதிலும் அதன் துணை­யுடன் மாயா­வினால் முகா­முக்கு வெளியே நட­மாட முடிந்­த­தோடு முகாம் பாட­சா­லைக்கும் சென்று வந்தார். மொஹ­மட்­டிற்கு மேலும் ஐந்து பிள்­ளைகள் இருக்­கின்­றனர், ஆனால் அவர்­களுள் ஒரு­வ­ருக்கும் இவ்­வா­றான குறை­பாடு கிடை­யாது.

சிகிச்சை நிலை­யத்தில் தந்தை நேர்­கா­ணலை வழங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது மாயா அவ­ரது மடியில் அமர்ந்­தி­ருந்தார். துருக்கி சிகிச்சை நிலை­யத்தில் மொஹ­மட்­டுக்கும் செயற்கைக் கால்கள் பொருத்­தப்­ப­ட­வுள்­ளன. எனினும் அவ­ருக்கு தனது கால்­களின் நிலை தொடர்பில் எவ்­வித கரி­ச­னையும் இல்லை. தனது மகளின் நிலை தொடர்­பி­லேயே அதிக அக்­கறை காட்­டினார்.

''எனது மகளின் நண்­பிகள் ஓடி விளை­யா­டும்­போது அவர்­க­ளுக்கு முன்னால் அவர் தவழ்ந்­து­கொண்­டி­ருப்­பதைப் பார்க்­கும்­போது எனக்கு மிகுந்த மன வேத­னை­யாக இருக்கும். எனக்கு சத்­திர சிக்சை செய்­யப்­ப­டு­வதை விட எனது மக­ளுக்கு செய்­யப்­ப­டு­வதே முக்­கியம். அதன் பின்னர் அவரால் சுய­மாக செயற்­பட முடியும். அது எமக்கு புது வாழ்க்­கை­யாக அமையும்'' எனவும் மெர்ஹி தெரி­வித்தார்.  எனது கன­வெல்லாம் எனது மகள் எந்தவித வேத­னையும் இல்­லாமல் நடக்க வேண்டும், பாட­சா­லைக்கு சென்று, திரும்பி வர­வேண்டும் என்­ப­துதான் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தனது செல­வி­லேயே சத்­திர சிகிச்சை செய்யும் வைத்­தியர்

நன்­கொ­டை­யா­ளர்­களின் உத­விகள் அனைத்­தையும் மறுத்­து­விட்டு தனது சொந்தச் செல­வி­லேயே இச் சத்­திர சிகிச்­சை­களை செய்து முடிக்க முன்­வந்­துள்ள செயற்கை அவைய விஷேட நிபு­ண­ரினால் துருக்­கியில் மாயா­வுக்கு சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

தகரப் பேணி­களின் உத­வி­யுடன் மாயா நடப்­பதைக் காண்­பிக்கும் புகைப்­ப­டங்கள் தனது மனதை மிகவும் பாதித்­த­தா­கவும் மாயா­வுக்கும் அவ­ரது தந்­தைக்கும் செயற்கைக் கால்­களை தனது சொந்த செல­வி­லேயே பொருத்த வேண்டும் என அப்­போதே தான் தீர்­மா­னித்து விட்­ட­தா­கவும் டாக்டர் குல்கு தெரி­வித்தார்.

அன்­ப­ளிப்­புக்­களை வழங்­கு­வ­தற்கு விரும்­பிய ஏரா­ள­மானோர் உல­கெங்­கு­மி­ருந்து தொடர்பு கொண்­டனர். எனினும் எனது சொந்தச் செல­வி­லேயே அதனை மேற்­கொள்ள தீர்­மா­னித்து விட்­டதால் பிரச்­சினை முடிந்­து­விட்­டது.

இட்லிப் முகாமில் வைத்து மாயாவின் தந்­தை­யினால் உள்­ளூரில் வடி­வ­மைக்­கப்­பட்ட செயற்கைக் கால் அமைப்பு மிகுந்த நன்­மை­ ப­யக்­கக்­கூ­டிய ஒன்­றாக அமைந்­து­விட்­டது. ஏனென்றால் மாயா­வுக்கு நடக்­கக்­கூ­டிய ஆற்­றலை அது வழங்­கி­யி­ருந்­தது எனவும் அவர் தெரி­வித்தார்.

உண்­மையில் அவ­ருக்கு பொருத்­தப்­பட்­டி­ருந்­ததை நாம் செயற்கைக் கால் என அழைக்க முடி­யாது எனத் தெரி­வித்த டாக்டர் குல்கு, அதனை நடப்பதற்கு ஏதுவான தற்காலிக ஏற்பாடு எனக் கூறலாம். தனது ஆற்றாமையின் காரணமாக ஏற்பட்ட உந்துதலால் எந்தவித வசதிகளும் இல்லாத நிலையில் மாயாவின் தந்தை தனது வேதனையினை நம்பிக்கையாக மாற்றியிருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

சிரிய அகதி முகாம்களில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுள் பெரும்பாலானோருக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில்லை. அதிகமான பொதுமக்கள் அண்மையிலுள்ள துருக்கி, ஜோர்தான் மற்றும் லெபனானிற்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli