Verified Web

குற்றங்களின் தேசமாக மாறும் இலங்கைத் தீவு

2018-07-10 04:57:31 Administrator

கடந்த இரண்டு நாட்­க­ளுக்குள் நாட்டில் இடம்­பெற்ற குற்றச் செயல்­களை ஒப்­பிட்டு நோக்கும் போது நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுலில் இருக்­கி­றதா எனும் கேள்வி எழு­வதைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

ஞாயிறு இரவும் திங்கள் காலை­யிலும் மாத்­திரம் கொழும்பில் இரு வேறு துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வங்­களில் மூவர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். ஞாயிறு இரவு ஜம்­பட்டா வீதியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்­பட இருவர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும் இருவர் காய­ம­டைந்­துள்­ளனர். அதே­போன்று நேற்றுக் காலை செட்டித் தெருவில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­ன­ரான கிருஷ்ணா என்­பவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

இவற்­றுக்கு அப்பால் கடந்த ஓரிரு மாத காலப்­ப­கு­தியில்  குறிப்­பி­டத்­தக்க மேலும் பல துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வங்கள் நிகழ்ந்­துள்­ளன. ஜூன் 24 இல் இரா­ணுவ அதி­காரி ஒருவர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டதில் அவர் படு­கா­ய­ம­டைந்தார். ஜூன் 22 இல் மாத்­தறை நகரில் நகைக் கடை ஒன்றை கொள்­ளை­யிட முனைந்­த­வர்­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி பொலிஸ் அதி­காரி ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் மேலும் நால்வர் காய­ம­டைந்­தனர். இத­னுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் பின்னர் பொலி­சாரால் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

ஜூன் 12 இல் கிரி­வெ­ஹர தலைமை விகா­ரா­தி­பதி மீது ஆயு­த­தா­ரி­களால் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டதில் அவர் படு­கா­ய­ம­டைந்தார். மே 24 இல் தெஹி­வளை கல்­கிஸ்ஸ மாந­கர சபை உறுப்­பினர் ரஞ்சன் டி சில்வா இரத்­ம­லா­னையில் வைத்து சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

பொலிஸ் திணைக்கள் புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி இந்த வரு­டத்தின் முதல் 5 மாதங்­களில் மாத்­திரம் 33 பேர் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவற்றில் 21 சம்­ப­வங்கள் பாதாள உலகக் குழுக்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வை­யாகும்.

ஆக, நாட்டில் இன்று பயங்­க­ர­வாத இயக்­கங்கள் எவையும் இல்­லாத நிலையில் பாதாள உலகக் குழுக்­களின் உறுப்­பி­னர்­களே ஆயுதம் ஏந்தி வலம் வரு­கின்­றனர். எனினும் இவர்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை­யி­லேயே இலங்­கையின் பாது­காப்புத் தரப்­பினர் உள்­ளனர் என்­ப­தையே மேற்­படி சம்­ப­வங்கள் உணர்த்­து­கின்­றன.

இந்த வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் பாதாள உலகக் குழுக்­களைச் சேர்ந்த 40 பேரை கைது செய்­துள்­ள­தாக அண்­மையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்­தும பண்­டார தெரி­வித்­தி­ருந்தார். இது வர­வேற்­கத்­தக்க நட­வ­டிக்­கை­யாகும். எனினும் இவ்­வாறு பெருந்­தொ­கை­யா­னோரை கைது செய்தும் குற்­றங்கள் குறை­யா­தி­ருப்­ப­தற்­கான காரணம் என்­பதை பொலிசார் கண்­ட­றிய வேண்டும்.

இலங்­கையைப் பொறுத்­த­வரை பெரும்­பா­லான பாதாள உலகக் குழுக்கள் அர­சி­யல்­வா­தி­களின் ஆசீர்­வா­தத்­து­ட­னேயே இயங்­கு­கின்­றன என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யாது. பொலிசார் இந்தக் குழுக்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முயல்­கின்ற போதிலும் அதற்கு அர­சி­யல்­வா­தி­களே தடை­யாக இருக்­கின்­றனர்.

என­வேதான் முதலில் பொலிஸ் துறையில் அர­சியல் தலையீடுகள் இடம்பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதன்மூலமே இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமாகவிருக்கும். இன்றேல் குற்றச் செயல்களில் ஆசியாவிலேயே ஆச்சரியமிக்க நகரமாக கொழும்பு மாறுவதை தடுக்க முடியாது போய்விடும்.
-Vidivelli