Verified Web

உயர்வு தரும் உளத்தூய்மை

T.M.Mufaris Rashadi

விரி­­வு­ரை­யா­ளர், பாதி­ஹ் கல்வி நிறு­வ­னம்

2018-07-06 05:29:24 T.M.Mufaris Rashadi

நமது வாழ்வில் வணக்க வழி­பா­டுகள், நற்­கி­ரி­யைகள் அதி­க­மாக செய்ய வேண்­டு­மென்­பது எந்த அளவு முக்­கி­யமோ, அதை­விட முக்­கி­ய­மான அம்­சமே அந்த வணக்க வழி­பா­டு­க­ளையும் நற்­கி­ரி­யை­க­ளையும் இறை­வ­னுக்­காக மட்­டுமே உளத்­தூய்­மை­யுடன் செய்­வ­தாகும்.

உளத்­தூய்மை என்­பது இஸ்­லாத்தின் அடிப்­ப­டை­களில் மிக முக்­கி­ய­மான ஒரு அடிப்­ப­டை­யாகும். அல்­லாஹ்­வுக்­காக நாம் செய்­கின்ற எந்­த­வொரு நன்­மை­யான காரி­யத்­தையும் பிறர் பார்க்க வேண்டும், பிறர் பாராட்ட வேண்டும் என்­ப­தற்­காக செய்­வது மறை­மு­க­மான இணை­வைப்­பாகும்.

இந்த அடிப்­படை குறித்து அல்லாஹ் இவ்­வாறு தனது திரு­ம­றையில் கூறு­கின்றான்;

அல்­லாஹ்­வுக்கு வணக்­கத்தை தூய்­மை­யாக்­கி­ய­வர்­க­ளாக, பிடிப்­புள்­ள­வர்­க­ளாக அல்­லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும். மேலும் தொழு­கையை அவர்கள் நிலை­நாட்ட வேண்டும், மேலும் ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்­பதைத் தவிர (வேறெ­துவும்) அவர்­க­ளுக்குக் கட்­ட­ளை­யி­டப்­ப­ட­வில்லை. இதுதான் நேரான மார்க்­க­மாகும்.” (அல்­குர்ஆன் 98:5)

இது குறித்து முஹம்­மது நபி (ஸல்) அவர்கள் இவ்­வாறு தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார்கள்:

செயல்கள் அனைத்தும் எண்­ணங்­களைப் பொறுத்தே அமை­கின்­றன. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் அவர் எண்­ணி­யதே கிடைக்­கின்­றது. எவ­ரு­டைய ஹிஜ்ரத் அல்­லாஹ்­வுக்­கா­கவும், அவன் தூத­ருக்­கா­கவும் ஆகி­வி­டு­கி­றதோ அது அல்­லாஹ்­வுக்­கா­கவும், அவன் தூத­ருக்­கா­கவும் ஆகி­வி­டு­கி­றது. (அதற்­கான கூலியை அவர் அடைந்­து­கொள்வார்) எவ­ரு­டைய ஹிஜ்ரத் உல­கத்தைக் குறிக்­கோ­ளாகக் கொண்­ட­தா­கவோ அல்­லது ஒரு பெண்ணை நோக்­க­மாகக் கொண்­ட­தாகவோ அமைந்­து­வி­டு­மானால் அவ­ரது ஹிஜ்ரத் அதற்­கா­கவே ஆகி­வி­டு­கி­றது (எனவே, ஒரு­வரின் ஹிஜ்ரத் எதை நோக்­க­மாகக் கொண்­டதோ அதற்­கா­கவே அது அமைந்து விடு­கி­றது) 

அறி­விப்­பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி), நூல்: புகாரி

இந்த நபி­மொழி ஸஹீஹுல் புஹாரி கிரந்­தத்தின் முதல் நபி­மொ­ழி­யாகும், ஒவ்­வொரு அம்­சத்­திலும் அதற்­குள்ளே நுழை­வ­தற்கு முன் நாம் முதலில் உள்­ளத்தை தூய்மைப் படுத்­திக்­கொள்ள வேண்டும் என்ற செய்­தி­யையும் இத­னூ­டாக இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் எமக்கு சொல்­லித்­த­ரு­கி­றார்கள்.

அறிந்து கொள்­ளுங்கள். மனி­தனின் உடலில் ஒரு சதைத்­துண்டு இருக்­கி­றது. அது நல்ல முறையில் சீர­டைந்­து­விட்டால் முழு உடலும் சீர­டைந்­து­வி­டு­கி­றது. அது (தவ­றான வழி­களில்) சீர்­கெட்­டு­விட்டால் முழு உடலும் சீர்­கெட்­டு­வி­டு­கி­றது. புரிந்து கொள்­ளுங்கள் அதுதான் இதயம் என்று அல்­லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். அறி­விப்­பவர் : நுஃமான் பின் பஷீர் (ரழி) நூல் - புஹாரி , முஸ்லிம்.

எவர்கள் மறைவில் அர்­ரஹ்­மா­னுக்கு பயந்து நடந்து (அவன்பால்) மீளக்­கூ­டிய (பரி­சுத்த) மன­துடன் வரு­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு சுவனம் நெருக்­க­மாக்­கப்­பட்டு சாந்­தி­யுடன் நீங்கள் இதில் நுழை­யுங்கள். இது நிரந்­தர நாளாகும்.(என்று அவர்­க­ளுக்கு கூறப்­படும்) 50-33,34.

அல்லாஹ் எவ­ரு­டைய இரு­த­யத்தை இஸ்­லாத்­திற்­காக விசா­ல­மாக்­கு­கின்­றானோ அவர் தமது இறை­வனின் ஒளியில் இருக்­கிறார். (ஆனால்) அல்­லாஹ்­வு­டைய நினை­வை­விட்டும் விலகி எவர்­க­ளு­டைய இரு­த­யங்கள் கடி­ன­மாகி விட்­ட­னவோ அவர்­க­ளுக்குக் கேடுதான். இத்­த­கையோர் பகி­ரங்­க­மான வழி கேட்டில் இருக்­கின்­றனர். (39-22)

முற்­றிலும் என் மார்க்­கத்தை (வணக்­கத்தை) அவ­னுக்கே கலப்­பற்­ற­தாக ஆக்­கி­ய­வ­னாக நான் அல்­லாஹ்­வையே வணங்­கு­கிறேன் என்று (நீர்) கூறு­வீ­ராக. 39-14

(அப்­போது) அவன் ( ஷைத்தான்) கூறினான்;  "உன் மகத்­து­வத்தின் மீது சத்­தி­ய­மாக, நிச்­ச­ய­மாக அவர்கள் அனை­வ­ரையும் வழி­கெ­டுத்து விடுவேன் என்றான். அவர்­களில் (உன்னால்) தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உளத்­தூய்­மை­யு­டைய அடி­யார்­களைத் தவிர. 38,-82,83

செல்­வமும், குமா­ரர்­களும் (யாதொரு) பய­னிக்­காத(அந்த) நாளில் பரி­சுத்த இத­யத்­துடன் அல்­லாஹ்­விடம் யார் வரு­கின்­றாரோ அவர் தவிர (மற்­ற­வர்­க­ளுக்கு பய­ன­ளிக்­காத நாள்) 26-:88,89

மேலுள்ள திரு­மறை  வச­னங்கள் யாவுமே உளத்­தூய்­மை­யுள்ள இத­யங்கள் மாத்­தி­ரமே நாளை மறு­மையில் ஜெயம்­பெறும் என்ற உண்­மையை உரக்கச் சொல்­கின்­றன.

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்­று­கொண்­டி­ருந்­த­போது அவ­ருக்குக் கடு­மை­யான தாகம் ஏற்­பட்­டது. உடனே அவர் (அங்­கி­ருந்த) கிணற்றில் இறங்கி அதி­லி­ருந்து (தண்­ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு (கிணற்­றி­லி­ருந்து) அவர் வெளியே வந்­த­போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து நாக்கைத் தொங்க விட்­ட­படி ஈர மண்ணை நக்கிக் கொண்­டி­ருப்­பதைக் கண்டார். அவர் (தம் மன­திற்குள்) எனக்கு ஏற்­பட்­டதைப் போன்று (கடு­மை­யான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது போலும் என்று எண்­ணிக்­கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்­ணீரைத்) தனது காலு­றையில் நிரப்­பிக்­கொண்டு அதை வாயால் கவ்­விக்­கொண்டு மேலே ஏறி­வந்து அந்த நாய்க்கு நீர் புகட்­டினார்.

அல்லாஹ் அவ­ரு­டைய இந்த நற்­செ­யலை ஏற்று அவரை மன்­னித்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். இதை செவி­யுற்ற நபித்­தோ­ழர்கள் அல்­லாஹ்வின் தூதரே! கால்­ந­டை­க­ளுக்கு (உத­வு­வ­தி­னாலும்) எங்­க­ளுக்குப் பலன் கிடைக்­குமா? என்று கேட்­டார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) உயி­ரு­டைய பிராணி ஒவ்­வொன்றின் விட­யத்­திலும் (அதற்கு நாம் உதவி செய்யும் பட்­சத்தில் மறு­மையில்) அதற்­கான பிர­தி­பலன் கிடைக்கும் என்று கூறி­னார்கள்.

அறி­விப்­பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2363)

அறிஞர் அலி பின் ஹுஸைன் ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் இரவு நேரங்­களில் அதி­க­மான ரொட்­டி­களை சுட்டு அதனை தனது தோளிலே சுமந்­து­கொண்டு சென்று யாருக்கும் தெரி­யாத வகையில் ஏழை­க­ளுக்கு தர்மம் செய்­வார்கள் இது பற்றி அவர்கள் கூறு­கையில் "இர­க­சி­ய­மாக தர்மம் செய்­வது அல்­லாஹ்வின் கோபத்தைத் தடுத்­து­விடும்"  என நபி­களார் கூறி­யுள்­ள­தாகக் கூறு­வார்கள். என்­ப­தாக அபூ ஹம்ஸா அஸ்­ஸு­மாலி அவர்கள் அறி­விக்­கி­றார்கள்.

மேலுள்ள சம்­ப­வத்தில் வரும் ஹதீஸை அல்­பானி ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் தனது ஸில்­ஸிலா ஸஹீஹா என்ற தொகுப்பில்   1908 ஆவது செய்­தி­யாகப் பதிவு செய்­துள்­ளார்கள்.

இந்த சம்­ப­வத்தை இமாம் இப்னுல் ஜௌஸி ரஹி­ம­ஹுல்லாஹ் அவர்கள் தமது ஸிபதுஸ் ஸப்வா - 2/96 என்ற நூலில் எழு­தி­யுள்­ளார்கள்.

உளத்­தூய்­மை­யோடு செய்­யப்­படும் எந்­த­வொரு சிறிய செய­லா­யினும் இறைவன் புறத்தால் அதற்கு மகத்­தான நற்­கூ­லிகள் உண்டு என்­ப­தற்கு மேலுள்ள இரண்டு நிகழ்­வு­களும் மிகப்­பெரும் சான்­றாகும்.

அதே­போன்று உள்­ளங்கள் வழி­த­வறி அதன் தூய்­மையை இழந்­து­விட்டால் எவ்­வ­ள­வுதான் நன்­மைகள் செய்தும் எந்தப் பிர­யோ­ச­னமும் எமக்கு கிடைக்­கப்­போ­வ­தில்லை.

நபி ஸல்­லல்­லாஹூ அலை­ஹி­வ­ஸல்லம் அவர்கள் கூறி­னார்கள்: எந்­தவோர் உள்­ளமும் அரு­ளா­ளனின் விரல்­களின் இரு விரல்­க­ளுக்­கி­டையே தான் உள்­ளன. அவன் அதை நேர்த்­தி­யாக்க நினைத்தால் நேர்த்­தி­யாக்­குவான். அதைப் பிறழச் செய்ய நாடினால் பிறழச் செய்­து­வி­டுவான். ஆயிஷா (ரழி) நூல் - புஹாரி, திர்­மிதி

மற்­றுமோர் அறி­விப்பில் நபி ஸல்­லல்­லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் "அல்­லா­ஹும்ம யா முகல்­லிபல் குலூப் ஃதப்பித் கல்பீ அலா தீனிக"

இறைவா! உள்­ளங்­களை புரட்­டு­ப­வனே எனது உள்­ளத்தை உனது மார்க்­கத்தின் மீது நிலைப்­ப­டுத்­து­வா­யாக! என்று அதி­க­மாகப் பிரார்த்­தனை புரி­வார்கள். அப்­போது நான் அல்­லாஹ்வின் தூதரே உள்­ளங்கள் புர­ளுமா?என்று கேட்டேன். அதற்கு ஆம் அல்லாஹ் படைத்த ஆத­மு­டைய மக்கள் அனை­வ­ரி­னது உள்­ளங்­களும், வல்­ல­மையும், மாண்பும் மிக்க அல்­லாஹ்வின் விரல்­களில் இரு விரல்­க­ளுக்­கி­டையே தான் உள்­ளன. அவன் நினைத்தால் அவற்றை நேர்த்­தி­யாக்­குவான். நினைத்தால் அவற்றை பிறழச் செய்து விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் பதி­ல­ளித்­தார்கள்.  அறி­விப்­பவர் ; உம்மு சலமா (ரழி) நூல் - முஸ்னத் அஹ்மத்.

இன்று நம்மில் சிலர் நன்­மைகள் செய்­து­விட்டு, இறை­வ­னுக்­காக செய்தோம் என்ற எண்­ணத்தை விட்டு விட்டு, எவ்­வித கார­ண­மு­மின்றி பிறர் பாராட்ட வேண்டும் என்­ப­தற்­காக, பிற­ருக்குத் தெரி­யப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தற்­காக, செய்த நன்­மை­களைச் சொல்லிக் காட்­டி­வி­டு­கி­றார்கள். அதில் உளத்­தூய்­மையை கடைப்­பி­டிக்க வேண்டும் என்­ப­தனை மறந்­து­வி­டு­கி­றார்கள். அல்லாஹ் அவர்­களைப் பற்றி அல்­குர்­ஆனில் இவ்­வாறு எச்­ச­ரிக்­கின்றான்.

 நம்­பிக்கை கொண்­டோரே! அல்­லாஹ்­வையும், இறுதி நாளையும் நம்­பாது மக்­க­ளுக்குக் காட்­டு­வ­தற்­காக தனது செல்­வத்தைச் செல­வி­டு­ப­வனைப் போல், உங்கள் தர்­மங்­களைச் சொல்லிக் காட்­டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடா­தீர்கள். இவ­னுக்கு உதா­ரணம் மேலே மண் படிந்­தி­ருக்கும் வழுக்குப் பாறை போன்­றாகும் அதன் மேல், மழை விழுந்­ததும் மேலே ஒன்­று­மில்­லாமல் ஆக்கி விடு­கி­றது. தாம் பாடு­பட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்­டார்கள்.். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.                                                

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறு வதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 2:264,265)

சிறிய பெரிய இணைவைப்பையும் முகஸ்துதியையும் தவிர்த்து உள்ளங்கள் தடம்புரண்டுவிடாது இந்த மார்க்கத்தில் நிலைத்திருந்து தூய்மையான எண்ணத்தோடு நல்லமல்கள் புரிந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக!
-Vidivelli